Monday, February 17, 2014

குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது ஏன்?

குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது ஏன்?

 Thumb sucking in children's food focus. The children will be less weight. It is a comfort measure for children only.


கட்டை விரலை உறிஞ்சும் குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் குழந்தைகள் எடை குறைவாகவே இருப்பார்கள். இது  குழந்தைகளுக்கான ஒரு ஆறுதல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது. குழந்தைகளின் விரல்  உறிஞ்சும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என பெற்றோர் கவலைப்படுகின்றனர். நான்கு வயது வரை குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது  பிரச்னையில்லை. அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சினால் பற்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நான்கு மற்றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விரலை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தால் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு அதுவே பெரிய பிரச்னையாக  மாறும். குறிப்பிட்ட வயதிற்கு மேலாகியும் இந்த பிரச்சனை தொடர்வதால் பற்கள் நெருக்கமாக மற்றும் வளைந்து ஏதேனும் பொருட்களை கடிப்பதிலும்  பிரச்னைகளை ஏற்படுத்தும். இதேபோல் குழந்தைகள் பேசுவதில் பிரச்னை உருவாகலாம். அல்லது ஏதேனும் விழுங்குவதிலும் பிரச்னை  ஏற்படக்கூடலாம். பற்களின் வடிவக்கோடு குழந்தையின் முகத்தோற்றம் பாதிக்கும்.

மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களை ஏற்படுத்தும். குழந்தைகள் வாயில் கட்டை விரலை வாயில் வைக்கும்போது கிருமிகள் வயிற்றுக்குள் சென்று  விடுகின்றன. இதனால் வயிற்றில் பூச்சி உருவாக வாய்ப்பு உள்ளது. பூச்சி உருவானால் பசி எடுக்காது. இதுபோன்ற பிரச்னைகளை தடுப்பதற்கு ஒரே  வழி வாயில் விரலை வைத்து உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகள் கட்டை விரலை சப்பும் பழக்கத்தை விடவில்லை எனில்  குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும்.

ஆரோக்கியமாக குழந்தைகள் இருக்க மன அழுத்தம் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். மேலும் உங்கள் குழந்தையின் குறிக்கோள்களை  முன்னேற்றங்களை பாராட்டுங்கள். அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவிப்பின் குழந்தையின் மனநிலை மாறுபடும்.  மருத்துவரிடம் சென்று பல்லுக்கு கிளிப் ஒன்று வாங்கி மருத்துவரின் ஆலோசனையுடன் மாட்டி விடவேண்டும்.

 Thumb sucking in children's food focus. The children will be less weight. It is a comfort measure for children only.

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...