காளானில் வயிற்றில் காயங்களைக் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் எந்த ஒரு அழற்சியையும் தடுக்கலாம்.
சாலமன்
கடல் உணவுகளில் சாலமன் மீனில் நல்ல கொலஸ்ட்ராலானது நிறைந்துள்ளது. இந்த மீனை சாப்பிட்டால், அழற்சி சரியாவதோடு, அவை உடலில் உள்ள உள்காயங்களையும் சரிசெய்துவிடும்.
ப்ராக்கோலி
பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலி மிகவும் சிறந்த, நன்மைகள் பல அடங்கியுள்ள ஒரு காய்கறி. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, தசைகளை ஆரோக்கியமாக, காயங்களின்றி வைத்துக் கொள்கிறது.
மஞ்சள் தூள்
முந்தைய காலத்தில் உடலில் எந்த ஒரு பிரச்சனை அல்லது காயங்கள் என்றாலும் மஞ்சள் தூளை வைத்து தான் சரிசெய்வார்கள். நம்பமாட்டீர்கள், இந்த மஞ்சள் தூள் ஒரு சிறந்த ஆன்டி செப்டிக் மற்றும் அழற்சியை தடுக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட.
ப்ளூபெர்ரி
பெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இத்தகைய பழத்தில் ப்ளூபெர்ரி பழங்களை அதிகம் சாப்பிட்டால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலினுள் ஏற்படும் காயங்களையும் சரிசெய்துவிடும்.
இனிப்பு உருளைக்கிழங்கு
உடல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, இந்த இனிப்பு உருளைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம். இதில் இனிப்பு அதிகமாக இருக்கும் என்று யாரும் இதை தவிர்க்க வேண்டாம். இது அவ்வளவு சிறப்பான ஆரோக்கியத்தைத் தரும் கிழங்கு வகைகளில் ஒன்று.
பப்பாளி
பொதுவாக நாம் பப்பாளியை வயிறு உப்புசமாகவோ அல்லது எரிச்சலுடனோ இருந்தால் சாப்பிடுவோம். ஏனெனில் பப்பாளியானது வயிற்றை குளிர்ச்சியடைய செய்வதோடு, வயிற்றில் ஏற்படும் புண்களை சரிசெய்யும்.
கிரீன் டீ
சூடான பானங்களில் கிரீன் டீ, உடல் எடையை குறைக்கப் பயன்படுவதோட, உடலின் உள்ளே ஏற்படும் காயங்களையும் குணப்படுத்தும். ஏனெனில் கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டானது, பலவித நன்மைகளை உள்ளடக்கியது.
ஆலிவ் ஆயில்
சமைப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய்களிலேயே ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த எண்ணெயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகமாக இருப்பதோடு, உடலின் உட்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களை சரிசெய்துவிடும்.
No comments:
Post a Comment