Monday, February 17, 2014

கால்சியமும் வைட்டமின் டி யும் Calcium & Vit-D

கல்சியமும் வைட்டமின் டி யும்

Calcium and vitamin D.

பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது கால்சியம். வெறுமனே பாலையும், தயிரையும் குடிப்பதால் மட்டுமே கால்சியம் அளவு  அதிகரிப்பதில்லை. அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைபாட்டால் பெண்கள் சந்திக்கக் கூடிய  பிரச்சனைகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

கால்சியம் பற்றாக்குறை வந்தா வரக்கூடிய பிரச்சனைகள் பத்தி மக்களுக்கு ஓரளவுக்குத் தெரியுது. ஆனா அந்த கால்சியத்துக்கு தேவையான  வைட்டமின் டி பத்தின விழிப்புணர்வு பலருக்கும் இல்லை..


முட்டையோடு வெள்ளை கரு, உலர் பழங்கள்னு உணவுப்பொருட்கள் மூலமா கிடைக்கிற வைட்டமின் டி ரொம்ப அரிது. அந்தச் சத்துக்கான ஒரே  ஆதாரம் சூரிய வெளிச்சம். ஆனா வெயில்ல தலைகாட்டினா சருமம் கருத்துடும், அழகு போயிடும்னு பலரும் வெயிலைத் தவிர்க்கறோம்.. அதிகாலை  சூரிய வெளிச்சத்துலதான் வைட்டமின் டி அதிகம் என்ற கருத்து உண்மையில்லை.. காலை 10 மணிலேர்ந்து பிற்பகல் 3 மணி வரைக்குமான  வெயில்ல தான் போதுமான வைட்டமின் டி சத்தை பெற முடியும். 
 Calcium-based women's health. Ideally, milk, yoghurt drinks only increase the amount of calcium.

ஆனா அந்த நேரத்துல வெயில் அழகுக்கு எதிரிங்கிறதால சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் போட்டுக்கறோம். சன் ஸ்கிரீன் போடறது மூலமா  வைட்டமின் டி சத்து சருமத்துக்குள்ள ஊடுருவறது தவிர்க்கப்படுகிறது. தசைகள் வலுவோட இருக்க, இதயம் சரியா இயங்க ரத்தத்துல  ஹீமோகுளோபின் அளவு சரியான அளவுல இருக்க இப்படிப் பல விஷயங்களுக்கு வைட்டமின் டியும் அவசியம்..




கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தா அவங்களுக்குப் பிறக்கிற பெண் குழந்தைக்கு இடுப்பெலும்பு சின்னதா  இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி குழந்தை பெறும் நேரத்துல அதுக்கு சிசேரியன் தேவைப்படலாம். ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு  60ஆயிரம் யூனிட் வைட்டமின் டி தேவை.. ரத்தப் பரிசோதனை மூலமா இந்த பற்றாக்குறையைக் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவரோட ஆலோசனையோட வைட்டமின் டி மருந்துகளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கிட்டு மறுபடி ஒரு பரிசோதனை செய்து பார்த்து, போதுமான  அளவு இருக்கிற பட்சத்துல மருந்துகளை நிறுத்திடலாம். 35வயதுக்கு மேலான பெண்களும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் கால்சியம் மற்றும்  வைட்டமின் டி அளவுகள்ல கவனமா இருக்கணும். இது போதிய அளவு இருக்கிறது மூலமா முதுகு வலி, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கூட  தவிர்க்க முடியும்  
Thanks to: டாக்டர் மாலா ராஜ்
Calcium-based women's health. Ideally, milk, yoghurt drinks only increase the amount of calcium.

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...