Monday, February 17, 2014

கொலஜன் புரதக்கூறின் அடுத்த தலைமுறை ஊட்டச்சத்து சிகிச்சை



மூட்டு வலி என்பது என்புமூட்டுவாதம் (ஆஸ்டியோ ஆர்த்திரைடிஸ்) எனும் மூட்டு சீரழிவு நோயின் துன்பப்படுத்துகின்ற பக்க விளைவு. பரவலாக காணப்படுகின்ற, ஆனால் குறைவாகவே அறியப்பட்டுள்ள இந்த நோயானது, உலக மக்கள் தொகையில் சுமார் 30% பேரை பாதிக்கிறது. 
உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், வலி என்பது அன்றாடம் நிகழ்கின்ற ஒன்றாகி, மிக எளிதான  இயக்கங்களையும் கூட செய்வதற்கு கடினமானதாக ஆக்குவதுடன், சுறுசுறுப்பான வாழ்க்கைப்பாணி என்பது தொலைதூர கனவாக மாறிவிடுகிறது. 

40 வயதைத் தாண்டிய அல்லது அதிக பருமனான, கடுமுயற்சி தேவைப்படும் வேலையை செய்கின்ற அல்லது நடனமாடுதல் மற்றும் விறுவிறுப்பான செயல்களை செய்தல் என கடுமையான உடல் செயல்பாடுகளால் மூட்டுகளை அழுத்தத்திற்கு ஆளாக்குகின்ற எவருமே என்புமூட்டுவாதத்திற்கு எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களே. ஊட்டச்சத்துக் குறைபாடு, திரும்பத் திரும்ப மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுப்பது, வயது முதிர்ச்சி போன்றவையும்கூட இந்நோய் வருவதற்கான காரணங்களாகும்.

கொலஜன் புரதக்கூறின் பயன்:


வாய்வழியே செலுத்தப்படுகின்ற கொலஜன் புரதக்கூறானது, சுலபமாய் உட்கிரகிக்கப்படுவதுடன், புதிய கூடுதல் கண்ணறை மச்சையை உருவாக்கு வதற்காக குருத் தெலும்பு உயிரணுக்களை தூண்டு விக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலஜன் புரதக்கூறில், கொல ஜனுக்கான உறுப்புக் கோவைகளான க்ளைசின், ப்ரோலின், ஹைட்ராக்ஸிப்ரோலின் எனும் முக்கிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது, மேலும், கொலஜன் புரதக்கூறில் உள்ள அமினோ அமில கலவையானது, குருத்தெலும்பில் உள்ள கொலஜனைப் போன்றதே. 

தினமும் 10 கிராம் கொலஜன் புரதக்கூறை எடுத்துக்கொள்வதானது, குருத்தெலும்பின் மறுகட்டுமானத்திற்கு உதவிசெய்து, குருத்தெலும்பின் ஆரோக்கியத்தை பழைய நிலைக்கு கொண்டுவர உதவக்கூடும் என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. உலகளவில், கொலஜன் புரதக்கூறின் அடிப்படையிலான பல் வேறு தயாரிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. 

இந்தியாவில்; கெலெக்ஸியர் கொலஜன்பெப், ஜெட்ஃபிட், கொல்லாஸீ ஆகிய வெவ்வேறு பிராண்டு பெயர்களில் சில நிறுவனங்கள் கொலஜனை சந்தைப்படுத்த துவங்கியுள்ளன. என்பு மூட்டுவாதத்தால் விளைகின்ற மூட்டு வலிக்கு எதிரான பாதுகாப்பான தீர்வை எதிர்நோக்குகின்ற மக்களுக்கு, கொலஜன் புரதக்கூறு ஓர் மிகச்சிறந்த தயாரிப்பு.

thanks to:
http://www.dinakaran.com/Medical_Detail

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...