Science can help detect breast cancer Bra
அமெரிக்காவில் ஒரு நவீன பிராவை உருவாக்கியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால், அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியுமாம்.
இந்த பிராவுக்குள் மார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதான் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறதாம்.
வழக்கமான மாமோகிராம் செய்வதற்குப் பதில் இந்த பிராவை அணிந்தாலே மார்பில் புற்றுநோய் அறிகுறி இருக்கிறதா என்பதை இது காட்டிக் கொடுத்து விடுமாம்.
புற்றுநோய் கட்டிகள், மார்பகத்தில் இருக்கிறதா என்பதை இந்த பிரா கருவி துல்லியமாக காட்டி விடுமாம். இதன் மூலம் உடனடி சிகிச்சைக்கு வழி கிடைக்கிறது. தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.
இந்த பிராவுக்குள் பொருத்தப்பட்டுள்ள நவீன சாதனத்தில் அதி உயர் சென்சார் கருவி முக்கியமாக இடம் பெற்றுள்ளது. இது, மார்பகத்தில் உள்ள செல்களின் வெப்பநிலையை உணர்ந்து, அதில் கூடுதல், குறைச்சல் இருக்கிறதா என்பதை சொல்கிறது. இதை வைத்து செல்களில் தேவையில்லாத பெருக்கம் இருக்கிறதா அதாவது புற்றுநோய் திசுக்கள் உருவாகியுள்ளதா என்பதை அறிய முடியும்.
இந்த பிரா இன்னும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. 2013ம் ஆண்டுதான் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளனர்.
No comments:
Post a Comment