Tuesday, February 18, 2014

கன்டிடா அல்பிகனஸ்-Fungal


கன்டிடா அல்பிகனஸ் என்பது தனிக்கல பூஞ்சணம்;(பங்கசு). இது உணவுக் கால்வாயிலும் இனப்பெருக்க உறுப்பிலும் காணப்படும். இது எல்லோரிலும் சிறிதளவு காணப்படும். இதன் அளவு ஒரு எல்லையை விட கூடும் போது தொற்றும் தன்மையை பெறும். இது வாய், காது, பெருவிரல் நகம், உணவுக் கால்வாய், பெண் இனப்பெருக்க உறுப்பில் தொற்றலாம்.
கன்டிடா நோய் ஏற்படுவதற்கு சரியான காரணங்கள் தெரியாதபோதும்,
  • கூடுதலாக நுண்ணுயிர் கொல்லி (அன்ரி பயோரிக்ஸ்) மாத்திரைகள் பாவித்தல்.
  • நீண்ட நாள் பாவிக்கும் மருந்து வகை உதாரணமாக கருத்தடை மாத்திரை, ஸ்ரெறொயிட்ஸ்.
  • சீனி சத்து கூடிய உணவுகளை கூடுதலாக உட்கொள்ளுதல். இவை யாவும் காரணங்களாக அமையலாம்.
கன்டிடா நோயைக் கண்டுபிடித்தல்
கன்டிடா நோய் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் வேறு நோய்நிலைக்குமான அறிகுறிளாக காணப்படுவதனால், கன்டிடா தொற்றை நிட்சயப்படுத்துவதற்காக ஏனைய நோய்நிலைகள் கன்டிடாவுக்கான அறிகுறிகளைக்காட்டி நிற்கவில்லை என்பதை வைத்திய ஆலோசனை மூலம் உறுதிசெய்ய வேண்டும்.
பெண்ணுறுப்பு சிவந்து, அரிப்பை ஏற்படுத்தவதோடு, வெள்ளையான, மென்கட்டியான திரவ வெளிப்பாடு இருக்குமானால் இது பெண்குறியில் அல்லது யோனி மடலில் கன்டிடா தொற்று ஏற்பட்டதாக கொள்ளலாம்.
நோயெதிர்ப்புச் சக்தி உடலில் நலிவடையும் போது உடலிற்கு நன்மைபயக்கும் பற்றீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. சாதாரணமாக இவ்வகை பற்றீயாக்கள், கன்டிடா போன்ற நல்ல பல்கிப்பெருக சந்தர்ப்பத்தைக் காத்திருக்கும் பற்றீரியாக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். கர்ப்ப காலத்தில் உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதனால் கன்டிடா தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. மகப்பேற்றுக் காலத்தில் ஓமோன் மாற்றம் ஏற்படுவதனால், யோனிமடல் பகுதியில் இருக்க வேண்டிய அமில-கார சமநிலை மாற்றியமைக்கப்படுவதனால் பங்கசு தொற்றுக்களான கன்டிடா, திரஸ் அல்லது மதுவத்தொற்று (ஈஸ்ற் இன்பக்சன்) ஏற்ப்படுவதுண்டு.
மூலிகை கலவை: மில்க்திசில் பிளஸ் - உடலின் சாதாரண தொழில்பாட்டின் போது தோன்றும் பொருளாகவோ அல்லது எமது உணவு, சூழலிருந்து நச்சுப்பொருட்கள் உடலுடன் சேருகின்றது. இந்நச்சுப்பொருட்களை உடலிருந்து அகற்றாத பொழுது இது உடலினுள் சுற்றிவருகின்றது. உடலில் ஈரல், சிறுநீரகம் போன்ற அங்கங்கள் இந்நஞ்சுகளை அகற்றும் அங்கங்களாக தொழில்படுகிறன. மில்க்திசில் பிளஸ் எனும் மூலிகைக் கலவை ஈரலின் நஞ்சகற்றல் தன்மையைக் கூட்ட உதவுகின்றது. மூலிகை: சிசான்றா - ஈரல், சிறுநீரகம் ஆகியவற்றில் சேதமடைவதிலிருந்து பாதுகாப்பததோடு நஞ்சகற்றலில் உதவுகின்றது மூலிகை: டன்டெலியன் றூட் - ஈரலை பலமாக தூண்டிவிடுவதனால் உடலில் அதிகமாகக் காணப்படும் கழிவை அகற்ற உதவுகின்றது கிளிவேர்ஸ் -பொதுவான குருதி, நிணநீர்த்தொகுதிகளை சுத்திகரிக்க உதவுகின்றது மூலிகை: ஆர்டிச்சோக் - ஈரல், பித்த சுரப்பிகளின் செயற்பாட்டை முன்னேற்றுகின்றது. மூலிகை: மில்க்திசில் - சேதம் விளைவிக்கக்கூடிய வெளிப்புற, உடலினுள்ளே விடப்பட்ட நஞ்சுகளால் ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து ஈரலைப் பாதுகாக்கின்றது.
- பயோ கல்ற் - இது ஒரு மாத்திரை. இது உடலில் காணப்படும் பற்றீரியாக்களில் முக்கியமாக நன்மை பயக்கும் 14 பற்றீரியாக்களை கொண்ட சேர்கைகையாகும். இச்சேர்மானம், கன்டிடாவையும், நோய் விளைவிக்கும் கிருமிகளையும் இல்லாதொழித்து, நன்மை பயக்கும் பற்றீரியாக்களை அதிகரிக்கச் செய்கிறது, சமநிலை பேணுகின்றது.
- பயோரின் - இது ஒரு 'பி' வகை விற்றமின், இதை உணவுக் கால்வாயில் காணப்படும் நன்மை பயக்கும் பற்றீரியாக்கள் தயாரிக்கின்றன. சாதாரணமாக, கன்டிடா பங்கசு குடல் சுவரினுட்புகுந்து செல்வதை பயோரின் விற்றமின் நிறுத்திவைக்கிறது. எனவே பயோ கல்ற் உடன், பயோரின் ஆகியவற்றை சேர்த்து எடுப்பதனால் கன்டிடா பங்கசுவின் தாக்கத்தை குறைக்கலாம்.
- கொலொறெக்ஸ் - இது ஒரு களிம்பு (கிறீம்), இதை பூசியவர்களுக்கு, மீண்டும் கன்டிடா வருவது, மற்றைய மருந்தை எடுத்தவர்களுக்கு கன்டிடா மீண்டுவருவதைக் காட்டிலும் 50சதவீதம் குறைவாக காணப்பட்டது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது.
- டிடா - என்னும் மாத்திரை நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்துவதற்காக தைம், மறிகோல்ட் ஆகியவற்றையும், அமைதிப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும் பெப்பமின்ற், பெருஞ்சீரகம் (பெனல்) ஆகிய மூலிகைகளின் சேர்மானத்தால் தயாரிக்கப்பட்டதாகும். மேலும், டிடா, கன்டிடா பங்கசுவினால் வெளிவிடப்பட்ட நஞ்சை உடலிலிருந்து அகற்றுகின்றது. மொத்தமாகப் பார்க்கும் பொழுது டி.ஐ.டி.ஏ, என்பது ஒழுங்கற்ற, நோவுடன் கூடிய சமிபாடு, குமட்டல், வயிற்றில் வாயு விழுதல் போன்றவற்றை தவிர்ப்பதற்குத் தேவையான சமிபாட்டுக்கு உதவக்கூடியதும், பங்கசுகளை எதிர்க்கக்கூடியதும் அமைதிப்படுதக்கூடியதுமான மூலிகைகளின் சேர்மானமாகும்.
உணவு:
உணவிலிருந்து வெள்ளை மா, பசுப்பால், கோப்பி, தேனீர், பழவகைகள், சீனி சம்பந்தப்பட்ட உணவுகள், புளிக்க வைத்த உணவு வகைகளான தயிர், தோசை, அப்பம், இட்லி போன்றவற்றை தவிக்கவேண்டும். இதற்குப் பதிலாக சோயாப்பால், குரக்கன், குத்தரிசி அல்லது புறவுண் றயிஸ், பருப்பு வகை, பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சி, குடிபானமாக தண்ணீர், மூலிகைத் தேனீர் என்பன அருந்தலாம். (ஒரு நாளைக்கு 2 இலீற்றர் நீர் அருந்தவேண்டும்).
மேற்கூறிய உணவு முறைகளைக் கைகொள்வதோடு, மாத்திரைகளை எடுப்பதன் மூலம் கன்டிடா நோயைக் குணப்படுத்தலாம்.
அதன் பின்பு தவிர்க்கப்பட்ட உணவு வகைகளை சிறிது சிறிதாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


helped by: http://www.marunthu.com


No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...