Monday, February 17, 2014

ஆஸ்துமா தொல்லையா? - வாரம் 2 கிளாஸ் வைன்!


ஆஸ்துமா தொல்லையா? - வாரம் 2 கிளாஸ் வைன்!

ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் 2 கிளாஸ் வைன் நிவாரணம் அளிப்பதாக டென்மார்க் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முற்றிலும் குடிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்களை விட குறைவாகக் குடித்து நிறைவாக வாழ்பவர்களுக்கு ஆஸ்துமா தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைப்பதாக இந்த அதிசய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆனாலும் இது குடிகாரர்களுக்கு அளிக்கப்படும் லைசென்ஸ் ஆகாது. திசனரி 4 லார்ஜ் 5 லார்ஜ் என்று ஏத்துபவர்களுக்கு இது பொருந்தாது, மாறாக அவர்களுக்கு ஆஸ்துமா தொல்லை அதிகரிக்கவே செய்யும் என்கிறது இந்த ஆய்வு.

12 வயது முதல் 41 வயது உள்ளவர்களை வைத்து 8 ஆண்டுகள் இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளனர்.

வாரம் ஒருவர் 3 கிளாஸ் பியர்கள் அல்லது வைன் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா ரிஸ்க் குறைவு என்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வை நடத்திய குழுவை சேர்ந்த மருத்துவர் சோஃபீ லெய்பராத் கூறுகையில், "அதிகம் மது அருந்தினால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அதே வேளையில் அதிகம் பாயாமல் நிதானமாக வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அளவாக ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா தொல்லை குறைவாகவே இருக்கிறது" என்றார்.

இதற்கு முந்தைய ஆஸ்துமா-குடி தொடர்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு சில ஆய்வுகள் மது ஆஸ்துமாவிற்கு சற்றே நிவாரணம் அளிக்கிறது என்று கூற மற்ற ஆய்வுகளோ மோசமான விளைவுகளை எடுத்துரைத்தது.

குடி ஆஸ்துமாவிற்கு நல்லதா கெட்டதா என்று குழம்பும் குறை குடிகாரர்கள் அளவை மாற்றாமல் குறைவாகவே குடிப்பது நல்லது என்கின்றனர் இந்த ஆய்வுக்குழுவினர். 

ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐரோப்பிய மூச்சுக்குழல் நோய் அமைப்பில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

thanks to.......:http://tamil.webdunia.com/

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...