Friday, February 28, 2014

அப்பிள் பழத்தை விட..... சிறந்தது வாழைப்பழம்........!

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம்.

இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
 உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.
ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது.
பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.
மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.
நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது
சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது.
இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.
நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது.
இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றி விடும்

Thursday, February 27, 2014

வெண்டைக்காய்....... மருத்துவ பயன்கள்!

கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே பயன்ண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. 
(Vend akai) ladies finger Salat
மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது.
உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.
அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது. வெண்டைக்காயில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன.
முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட்கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும்.
பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். 
சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.
கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும்.
பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். 
பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.

Tuesday, February 25, 2014

உடல் எடையை குறைக்க........... சுலபமான சில வழிகள்…!


இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து, அதற்காக பல டயட்களை மேற்கொண்டு இருப்போர் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு நாளில் பாதியை ஜிம்மிலேயே செலவழிக்கின்றனர்.
 அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்காமல், உடல் எடையை குறைப்பதை விட, வீட்டிலேயே ஈஸியாக ஒரு சில பானங்களை செய்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையானது எளிதில் குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய எளிமையான வீட்டு பானங்கள் என்னென்னவென்றும், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் என்ன பலன் அதில் இருக்கிறதென்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.
கிரீன் டீ: அனைவருக்கும் கிரீன் டீ-யை பற்றி தெரிந்திருக்கும். இது உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தரும். அத்தகைய கிரீன் டீ-யை, அதன் இலைகளால் அல்லது கடைகளில் விற்கும் டீ பைகளை வாங்கி, வீட்டில் தயாரிப்போம். கிரீன் டீ சாப்பிட்டால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எளிதில் எடையானது குறைந்துவிடும். அதிலும் அந்த கிரீன் டீ-யின் இலையை இரவில் படுக்கும் முன் நீரில் போட்டு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
 ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கிரீன் டீ இலையில் இருக்கும் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நீரில் இறங்கி, அதனை நாம் பருகினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் குறைந்துவிடும். மேலும் அந்த கிரீன் டீ உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் கிரீன் டீ குடித்தால், 2-4 மணிநேரம் பசியானது ஏற்படாமல் நன்கு கட்டுப்படும்.
சிட்ரஸ் ஜூஸ்: ஜூஸ் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய ஜூஸில் சிட்ரஸ் இருக்கும் ஜூஸ்களை பருகினால், உடல் எடையானது குறைந்துவிடும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள், உடல் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
 அத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. திராட்சை பழங்களிலும் ஜூஸ் செய்து குடித்தால் உடல் எடையானது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 
ஏனெனில் திராட்சை பழங்களில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. ஆகவே அதன் தினமும் ஒரு டம்ளர் பருகினால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். முக்கியமாக எலுமிச்சை பழ ஜூஸ் சாப்பிடும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். 
ஏனெனில் சர்க்கரையே உடலில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. ஆகவே அப்போது அந்த ஜூஸ் உடன் உப்பை சேர்த்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் கூட கலந்து குடிக்கலாம்.
ஆப்பிள் வினிகர் : குளிர்ந்த தண்ணீரில் தேன் மற்றும் ஆப்பிள் வினிகரை கலந்து குடித்தால், எடை விரைவில் குறையும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. ஆகவே எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு டம்ளர் இந்த ஆப்பிள் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
 இதனால் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாமல் அது தடுக்கும். அதிலும் இதனை தினமும் இருமுறை குடித்தால் நல்லது.
காபி: இது மற்றொரு எடையை குறைக்கும் பானம். காப்ஃபைன் ஒரு ஆல்கலாய்டு. ஆகவே காப்ஃபைன் கலந்திருக்கும் காபியை அளவோடு குடித்தால், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும். மேலும் கொக்கோ, காபி மற்றும் டீ போன்றவையும் காப்ஃபைன் இருக்கும் பொருட்களே. 
அதிலும் இந்த பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் உடல் எடை குறையும், அதற்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை, உடலில் வெப்பம் அதிகமாதல் போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே, மேற்கூறிய பானங்களை குடித்து உடல் எடையை ஈஸியாக குறைத்து, அழகாக, பிட்டாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

(Popcorn) உங்களுக்கு பாப் – கார்ன் சாப்பிட பிடிக்குமா…?..ஆரோக்கியமா இருக்கலாம்…

ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அப்போது பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது.
 அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். முக்கியமாக சினிமா தியேட்டருக்கு போகும் போது, அங்கு அதிக அளவில் பாப்-கார்னையே விற்கின்றனர். ஆகவே அப்போது மற்ற தின்பண்டங்களை வாங்காமல், பாப்-கார்னை வாங்கி சாப்பிடுங்கள். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா!!!
தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது. மேலும் ஏற்கனவே கடைகளில் செய்து விற்கப்படும் பாப்-கார்னை வாங்கி சாப்பிடுவதை விட, அந்த சோளத்தை வாங்கி வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது.
மேலும் பாப்- கார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன. 
அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.
நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும்.
 மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.
ஆகவே நண்பர்களே!!! இனிமேல் பாப்-கார்னை பயந்து சாப்பிடாமல், விரும்பி சாப்பிடுங்க!!! ஆரோக்கியமாக இருங்க!!!

மார்பகப்புற்றுநோய்..... வந்தவர்கள் இனி மார்பகத்தை நீக்கவேண்டிய கட்டாயம் இல்லை

மார்பகப்புற்றுநோய் வந்தவர்கள் இனி மார்பகத்தை நீக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
அதி நவீன ரேடியேசன் தெரபி முறையில் உறுப்புகளை அகற்றாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேன்சர் வந்தால் எந்த உறுப்பில் கேன்சர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்சரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்சரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி என்று பெயர்.
புற்றுநோய் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதியில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்சரை குணப்படுத்தி விடலாம்.பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். 
கதிர்வீச்சினை (ரேடியேஷன்) சிறு சிறு குழாய்கள் மூலம் கேன்சர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர்வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர்.
இச்சிகிச்சை மார்பக கேன்சர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற புராஸ்டேட் கேன்சருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும். 
இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்-கேன்சர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.
குடும்பத்தில் தாய்க்கு மார்பகப்புற்றுநோய் இருந்து அந்த ஜீன் மகனுக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு அதிகம்.
 இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வந்தால் மிகச்சீக்கிரமாக வலுவாக வளரும். லட்சத்தில் ஒரு ஆணிற்கு மார்பக புற்றுநோய் வரலாம்.
அதனால் ஆண்களுக்கு பெண்களைக் காட்டிலும் மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. 
ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்ந்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தாலும், இத்தகையானவர்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Monday, February 24, 2014

நெய்-Ghee

இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான்
நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா?
இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். இங்கு நெய்யை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து நெய்யின் உண்மையான நன்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
செரிமான மண்டலம்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வைட்டமின்கள் அதிகம்
நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.
இதயத்திற்கு நல்லது
நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
கொலஸ்ட்ரால்
மற்றோரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.
தசைகளுக்கு நல்லது
வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை
நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.
நெஞ்செரிச்சல்
பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதற்கு உள்ளாவார்கள். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.

தாய்பால் சுரப்பை..... அதிகரிக்க வேண்டுமா........?

குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவாக இருப்பது தாய்பால் தான். தாய்பால் சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் சக்தி தாய்பாலில் இருக்கிறது
… தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் 600 கலோரியை இழக்கக்கூடும். ஆதலால் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பொருட்கள் நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்து வந்தால் தாய்பால் சுரப்பில் ஏற்படுகின்ற கலோரி இழப்புகளை ஈடு செய்து விடும்.
Breastfeeding and healthy eating for children
குழந்தையானது நோயிலிருந்து விடுபடுவதற்கான அனைத்து சத்துகளும் தாய்பாலில் இருக்கிறது ஆதலால் தான் மருத்துவர்கள் தாய்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பல சந்தேகங்கள் உண்டாகும். 
அவற்றில் முக்கியமானது தாய்பால் சுரப்பு பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850மி.லி தாய்பால் தினமும் சுரக்கும்.
பால் சுரப்பை தூண்டுவதற்கும் அதிகப்படுத்துவதற்கும் நிறைய மூலிகை மருந்துகள் உள்ளன அவை என்னவென்று பார்க்கலாம்.
ஏலம்-3பங்கு, திப்பிலி-4பங்கு, அதிமதுரம்-6 பங்கு, ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினமும் ஒரு வேளை காலையில் உட்கொள்ளவேண்டும்.
நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம், நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும். 30-60 மி.லி அருகம்புல் சாற்றை தினமும் காலையில் குடித்து வர பால் சுரப்பு அதிகமாகும்.
அதிகம் பூண்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். பசுமையாகவுள்ள கீரைகளின் சூப் அருந்தி வந்தால் பால் சுரக்கும்.
கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாக செய்து குடிக்க வேண்டும். இதில் முளைக்கட்டிய வெந்தயப்பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
கடலில் கிடைக்கும் பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும்.
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சம எடை எடுத்து பாலில் காய்ச்சி உண்டால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். 
ஒரு தம்ளர் பசும்பாலில் 4பூண்டு பல் சேர்த்து நன்றாக காய்ச்சி தினமும் முன்று வேளை அருந்தி வந்தால் தேவையான பால் சுரக்கும்.

தாய்ப்பாலின் மகத்துவம்……….!


Benefits of Mother's Milk

இன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட அவர்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள்.

 அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
வேலைக்கு சென்று 8-10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், குழந்தைக்கு அவசரம் அவசரமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள். இதற்கிடையில், தொடர்ந்து 8-10 மணி நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால், அவர்களது மார்பில் பால் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதனால் மார்பில் வலி எடுத்து அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும், தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற சிக்கலில் உள்ள வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை மிகவும் சுத்தமான பாத்திரத்தில் பிழிந்தெடுத்து சேகரித்து, அதை இறுக்கமாக முடி விடுங்கள்.
பின்னர் அதை, பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் தாய்ப்பாலை 6-8 மணி நேரம் வரையே வைத்து பாதுகாப்பதுதான் உகந்தது. பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள் தாய்ப்பால் கொண்ட பாத்திரத்தை வைக்கலாம்.
வீட்டில் குழந்தையை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்த தாய்ப்பாலை சுத்தமான கரண்டி முலம் குழந்தைக்கு பசி எடுக்கும்போது ஊட்டிவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

முதுகுவலி........... ஏன் வருகிறது?


நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது Disc Prolapse(டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.
நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.
சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன் அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும் வலி தெரியும்.
இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால் வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.
யார் யாருக்கு முதுகுவலி வரும்?
நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை மெத்தையில் ((உ_ம்) ஃபோர்ம் மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம் தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம். நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.
பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்......?
பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில் முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன்(Estrogen) ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும் அறிகுறி. இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :
1. படுக்கையில் கவனம் தேவை :
நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம் மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.
2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :
நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.
3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.
4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.
5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.
6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.
7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.
8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.
9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.
முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.
லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது எளிது. ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள் முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளி

தம்மடிப்பவரா.....? நீங்கள் அப்படியானால் ஆண்மையை இழக்க தயாராகுங்கள்…///

புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு புற்றுநோய் மட்டும் ஏற்படுவதில்லை ஆண்மை இழப்பும் ஏற்படுகிறது என்று சீனாவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புகை பிடிப்பதற்கும் தாம்பத்ய குறைபாடுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பிரிவு விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டது. உறவின் போது சிக்கலை சந்திக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட 700 ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அவர்களிடம் 3 ஆண்டுகள் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தப்பட்டன. தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவு, ஆர்வம் இருந்தாலும் ஈடுபட முடியாமை ஆகிய பிரச்னைகளில் தவித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 53.8 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட பிறகே சிகிச்சைக்கு பலன் கிடைத்தது என்றனர். புகை பழக்கத்தை கைவிட்ட 6 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறினர். விரைப்புத்தன்மை குறைபாடுக்கு சிகிச்சை பெற்றவர்களில் புகை பழக்கம் இருந்தவர்கள் அதை நிறுத்திய பிறகே பலன் கிடைத்ததாக தெரிவித்தனர்.
இதுபற்றி ஆய்வுக் குழு பேராசிரியர் சோபியா சான் கூறுகையில், “சீனா உள்ளிட்ட ஆசிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் விரைப்புத்தன்மை குறைபாடு அதிக ஆண்களிடம் உள்ளது. இதற்கு பெரும்பாலோர் புகைபிடிப்பதே காரணம்” என்றார். இது ஆண் உறுப்புகளை இரு விதங்களில் பாதிக்கிறது. ஆண் உறுப்பிற்கு சரியான அளவில் ரத்த ஓட்டம் கிடைப்பதில்லை என்றும் ஆய்வாளர் கூறியுள்ளார்.
“புகை பிடிப்பதால் புற்றுநோய், நுரையீரல் நோய்கள் ஏற்படும் என்று மட்டுமின்றி ஆண்மையிழப்பு உட்பட தாம்பத்ய குறைபாடுகளும் ஏற்படும்” என்று ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் தாய் ஹிங் கூறியுள்ளார்.

POLIO தடுப்பு மருந்து Dr.Jonas Salk போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..!

தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம்) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!

Who find this kind of Person hugged by me via  this Article...........We never give up You Dr.Jonas Salk I take you Forever Remember all Maruthuvamkel Members Say Thanks to this Goldest Man  He Save you all from Polio virus....1 like 1 share 1 hat-off

Thanks Shared Article by Saranya Subramanyam (India Tamil-Nadu) 

Sunday, February 23, 2014

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும் நவீன Bra

                             Science can help detect breast cancer Bra

அமெரிக்காவில் ஒரு நவீன பிராவை உருவாக்கியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால், அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியுமாம்.
இந்த பிராவுக்குள் மார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதான் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறதாம்.
வழக்கமான மாமோகிராம் செய்வதற்குப் பதில் இந்த பிராவை அணிந்தாலே மார்பில் புற்றுநோய் அறிகுறி இருக்கிறதா என்பதை இது காட்டிக் கொடுத்து விடுமாம்.
புற்றுநோய் கட்டிகள், மார்பகத்தில் இருக்கிறதா என்பதை இந்த பிரா கருவி துல்லியமாக காட்டி விடுமாம். இதன் மூலம் உடனடி சிகிச்சைக்கு வழி கிடைக்கிறது. தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.
இந்த பிராவுக்குள் பொருத்தப்பட்டுள்ள நவீன சாதனத்தில் அதி உயர் சென்சார் கருவி முக்கியமாக இடம் பெற்றுள்ளது. இது, மார்பகத்தில் உள்ள செல்களின் வெப்பநிலையை உணர்ந்து, அதில் கூடுதல், குறைச்சல் இருக்கிறதா என்பதை சொல்கிறது. இதை வைத்து செல்களில் தேவையில்லாத பெருக்கம் இருக்கிறதா அதாவது புற்றுநோய் திசுக்கள் உருவாகியுள்ளதா என்பதை அறிய முடியும்.
இந்த பிரா இன்னும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. 2013ம் ஆண்டுதான் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளனர்.

அதிகளவில் காணப்படும் நோய் வகைகளும் அவற்றினை போக்க உங்கள் விரல் நுனியில் காணப்படும் சிகிச்சைகளும்..!

இன்றைய வாழ்க்கை சூழலில் வசதி வாய்ப்புகளும் தொழில் நுட்பங்களும் பெருக பெருக நோய்களும் அதற்கு சமமாக பெருகி வருகிறது. 


இன்றைய தேதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குவது மருத்துவமனை. அத்தை வியாதிகள். ஏன், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட நாம் மருத்துவமனைக்கு தானே செல்கிறோம். மாத்திரைகள் மற்றும் நவீன காலத்து மருந்துகள் வருவதற்கு முன்பாகவே, வியாதிகளை போக்க இயற்கை அன்னை நமக்காக பல வீட்டு சிகிச்சைகளை அளித்திருக்கிறது. பொதுவாக ஏற்படும் வலிகளுக்கான சில வீட்டு சிகிச்சைகளை பற்றி பார்க்கலாமா?

தூக்கமின்மை

தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், சிறிது பாதாமை பொடியாக்கி, அதனை உங்கள் பாலில் கலந்து, சூடு போவதற்குள் குடித்து விடுங்கள். மேலும் வெறும் பாலை குடித்தாலே போதும், இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். படுக்க செல்லும் முன், உங்கள் பாதங்களில் தூய்மையான பசுவின் நெய்யை தடவிக் கொண்டாலும் நல்ல தூக்கம் வரும் அல்லது தண்ணீருடன் தேங்காய் எண்ணெயை கலந்து, தலை, உள்ளங்கை மற்றும் பாதங்களில் தேய்த்துக் கொண்டு படுங்கள். இது நல்ல தூக்கத்தை அளிக்கும்.

சதை பிடிப்பு/சுளுக்கு............

தினமும் காலையில், கடுகு எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் உள்ளங்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி உடல் முழுவதும் நன்றாக தேய்க்கவும். பின் நன்றாக குளித்து விடுங்கள். குளிர் காலத்தில் இது முக்கியமாக தேவைப்படும். சிறிது கடுகு பொடியை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை உங்கள் உள்ளங்கை மற்றும் பாதங்களில் தடவலாம்.

சன் ஸ்ட்ரோக்

சிறிதளவு மாங்காய் சாறுடன் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து பருகினால், சன் ஸ்ட்ரோக்குக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும். ஒரு நாளைக்கு இதனை இரண்டு அல்லது மூன்று முறை பருகவும். வெங்காய துண்டுகளில் குளிர்ச்சியூட்டும் தன்மை அடங்கியுள்ளதால், அவைகளை உங்கள் தலை மற்றும் நெற்றியில் தடவி கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் பருகுங்கள்.

தலைவலி

உங்களுக்கு அடிக்கடி மைக்ரைன் பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் தினசரி உணவோடு 5 பாதாம் மற்றும் சூடான பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், பால் அல்லது தேனுடன் சிறிது மிளகாய் தூவி அதனை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பருகுங்கள். இதில் பல வெளிப்புற பயன்பாடும் அடங்கியுள்ளது. அதனால் பல நன்மைகளும் கிட்டுகிறது. ஈரப்பதமான பாதாம்களை கல்லில் தேய்த்து பேஸ்ட் தயார் படுத்திக் கொள்ளுங்கள். இதனை உங்கள் நெற்றியில் தடவலாம். மேலும் வேப்ப பொடியை மெதுவாக நெற்றியில் தடவினாலும் நல்ல உணர்வை ஏற்படுத்தும் அல்லது ஒரு ஈர துணியில் கொஞ்சம் நறுமண நீர் சேர்த்து நெற்றியில் வைத்தாலும் நல்ல பயனை அளிக்கும்.

முதுகு வலி

உங்களுக்கு தீவிரமான முதுகு வலி இருந்தால், உங்கள் உடலை வெதுவெதுப்புடன் வைத்து சூடான உணவுகளை உட்கொள்ளுங்கள். தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். யூகலிப்டஸ் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்தாலும் நல்ல பலனை அளிக்கும். கொதிக்க வைத்த பெருஞ்சீரகம் விதைகளுடன் கொஞ்சம் கடுகு எண்ணெயை கலந்தும் பயன்படுத்தலாம். 5 கருப்பு மிளகு, 5 கிராம்பு, 1 கிராம் காய்ந்த இஞ்சி பொடியை உங்கள் தேநீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகுங்கள்.

ஆஸ்துமா

உங்கள் உணவில் எப்போதும் குளிர்ந்த மற்றும் புளிப்பான பொருட்களை சேர்த்துக் கொள்ளாதீர்கள். ஓமத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீருடன் கொதிக்க வையுங்கள். இதனுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து, தினமும் ஒரு முறையாவது குடித்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூக்கில் இரத்தக்கசிவு

இப்பிரச்சனை தீவிரமாக இருந்தால், தினமும் குல்கந்து எடுத்துக் கொள்ளுங்கள். அது தீவிர பயனை அளிக்கும் அல்லது நெல்லிக்காயில் இருந்து ஊறுகாய் செய்து, தினமும் காலையில் அதனை உண்ணுங்கள். உடனடி நிவாரணத்திற்கு, குளிர்ந்த நீரில் நனைத்த துணியை நெற்றி மற்றும் மூக்கின் மீது வையுங்கள்.
thanks to : kathiravan.com

Saturday, February 22, 2014

குழந்தையின்மை குறை போக்க........நீங்க ரெடியா,,,,,,,,,,,,,?


இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்கு, அதைப்பத்தி பேசி ஒருத்தர் மேல ஒருத்தர் பழியைப்போட்டு நேரத்தை வீணாக்குறதோட ஆக வேண்டிய காரியத்தை பார்த்தா கொஞ்சம் பிரயோசனமா இருக்கும்.
சில நாட்களுக்கு முன்னாடி நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்றேன். பேராசிரியர் ஒருத்தருக்கு வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க, இதுக்கு இடையில அந்த பேராசிரியர் என்ன பண்ணியிருக்காரு தெரியுமா?… தனக்கு ஆண்மை இருக்கான்னு டாக்டர்கிட்ட போய் டெஸ்ட் பண்ணியிருக்காரு. இவருக்கு ஆண்மை இல்லைன்னு டாக்டர் சொன்னதும் மனுஷன் தற்கொலை பண்ணிட்டாரு. படிச்ச ஒரு மனுஷனே இப்பிடி ஒரு கோழைத்தனமான முடிவை எடுக்கும்போது சாமானியன் என்ன செய்வான்? சரி இதுமாதிரி பிரச்‌சினை உள்ளவங்களுக்கு நம்ம மூலிகை வைத்தியத்துல சில வழிகள் இருக்கு. முயற்சி பண்ணி பாருங்க, பலனை அனுபவியுங்க!

கணவனுக்குத்தான் பிரச்சினை, மனைவிக்குத்தான் பிரச்சினைனு இங்க சொல்ல முடியாது. ரெண்டு பேருமே மருந்து சாப்பிடணும். மாதவிலக்கு ஆன மூணாவது நாள் முதல் முத்தின வேப்பிலை நூறு கிராம் எடுத்து கஷாயம் செஞ்சி காலயில வெறும் வயித்துல (ரெண்டு பேரும்) ஆறு நாளைக்கு குடிக்கணும். அதுக்கு அப்புறமா அரச இலை, மா இலை வகைக்கு அம்பது கிராம் எடுத்து கஷாயம் போட்டு நூறு மில்லி வீதம் ஒன்பது நாள் வெறும் வயித்துல சாப்பிடணும். இந்த கஷாயத்த சாப்பிடும்போது சாப்பாட்டுல ராகி, கொத்தமல்லி தழை எல்லாம் கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கோங்க. ராத்திரி சாப்பாடு பாதி அளவுதான் இருக்கணும். இதை சரியா பின்பற்றினா குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு.

பொண்ணுங்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தா அதை சரி செய்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு சம அளவு எடுத்து நல்லா காய வச்சி இடிச்சி வச்சிக்கோங்க. இதை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீதமா ரெண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்கணும். இதை தொண்ணூறு நாள் குடிச்சிட்டு வந்தா மலட்டுத்தன்மை போய் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதுபோக நெல்லிக்காய் சாறுல ரோஜாப்பூவை அரைச்சி அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தா பொண்ணுங்களோட பிரச்சினை நீங்கி தாய்மைப்பேறு கிடைக்கும்.

இனிமே ஆண்கள் விஷயத்துக்கு வருவோமா? வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.
இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.

ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்

பெண்களை மலடிகளாக்கும் பி.சி.ஓ.எஸ்,,,,,,,,,,,,,Poly Cystic Ovarian Syndrome



`பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ பாதிப்பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சினைகளும் பெருகி வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி. ஓ.எஸ்` பாதிப்பிற்கு உள்ளானவர்
களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சி.ஓ.எஎஸ் நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் 40 சதவீதம் என்றால், 60 சதவீதம்பேர் அறிகுறியை உணராமல் அந்த நோய்த் தன்மையுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நோய்களைப்போல் இதையும் தொடக்கத்திலே கண்டறிந்தால், எளிதாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

இந்த நோயாளிகளில் 30 சதவீதத்திற்கு குறைவானவர் களுக்கு மட்டுமே மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது. 9-10 வயது சிறுமிகளாக இருக்கும்போதே பெற்றோர், அவர்களை கவனித்தால், பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலே கண்டறிந்து விடலாம். நோய் பாதிப்பை கண்டு பிடித்து, கட்டுப்படுத்தாமலே விட்டால் அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உருவாகும் சூழலை அதிகரிக்கும். குழந்தையின்மைக்கும் இது முக்கிய காரணமாகும்.

சிறுமிகளாக இருக்கும்போதே மார்பக வளர்ச்சி அதிகமாக இருப்பது பி.சி.ஓ.எஸ்'ன் முக்கிய அறிகுறியாகும். மேலும் சிறு வயதிலே பூப்படைவது, அதிக எடை, அளவுக்கு அதிகமாக மெலிந்து போதல், எப்போதும் படுக்க வேண்டும் என்று தோன்றுதல், படுத்தால் தூக்கம் வராத நிலை ஏற்படும். பின் கழுத்து, கை மூட்டுகள், கையை மடக்கும் பகுதிகளில் கறுப்பு நிறம் படருதல், முகத்தில் கறுப்பு படை தோன்றுதல், முகத்தில் எண்ணைத் தன்மை அதி கரித்தல். காலை நேரங்களில் மூக்கில் மட்டும் அதிக எண்ணைத் தன்மை தோன்றுதல், ஒற்றைத் தலைவலி போன்ற வையும் பிசிஓஎஸ்ன் அறிகுறிகளாகும்.

இவை அனைத்தும் இன்சுலின்- லெப்டின் ஹார்மோன் களின் சமச்சீரற்ற தன்மையால் தோன்றுவதாகும். முகத்தின் கீழ்பாகம் மட்டும் குண்டாகுதல், பற்கள் முன்நோக்கி துறுத்துதல், மார்பு பகுதியும்- தோள் பகுதியும் மட்டும் பெரிதாகுதல், கழுத்து குண்டாகுதல் போன்றவை ஸ்டீராய்ட் ஹார்மோனால் ஏற்படும் பாதிப்பாகும்.

ஆறு மாதங்கள் வரை மாத விலக்கு வராமல் இருத்தல், வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து போதல், அல்லது நிற்காமல் வெளியாகிக் கொண்டிருப்பது, குழந்தையின்மை, 90 நாட்களுக்குள் அபார்ஷன் ஆவது, மீசை வளர்தல், தாடி வளர்தல், உடலில் தேவையற்ற இடங்களில் எல்லாம் முடி வளர்தல், மிக அதிகமாக தலை முடி உதிர்தல் போன்றவைகளும் பி.சி .ஓ.எஸ். அறிகுறிகளாகும்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு சரியான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தினசரி 1200 கலோரி அளவுள்ள உணவுகளை சரி விகிதமாக உட் கொள்ள வேண்டும். அதில் 40 சதவிகிதம் கார்போ ஹைடிரேட் உணவுகள் எடுத்துக் கொள்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். மதிய நேரத்தில் கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதனுடன் இனிப்பு சேர்க்காத யோகர்டு எடுத்துக் கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இரவு நேரத்தில் பழுப்பு அரிசி, வேக வைத்த மீன், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இரவு நேரத்தில் மொத்தம் 330 கலோரி உணவுகளை மட்டுமே உட்கொண்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

கோபத்தின் உச்சத்தில் குழந்தைக்கு பாலூட்டாதீங்க : பால் நஞ்சாககிடுமாம்

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும்.
கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.
கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும்  போது அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கூந்தலுக்கு.....ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணாதீங்க !

இன்றைய அவசரக் காலத்தில் சரியாக சாப்பிடத்தான் நேரம் இல்லையென்று பார்த்தால், தலைக்கு குளித்தால் கூட கூந்தலை காய வைக்க நேரம் இல்லாமல் இருக்கிறது. அதனால் கூந்தலை காய வைப்பதற்கு என்று ஒரு மிசினான ‘ஹேர் ட்ரையரை’ பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது.
அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு என்ன பிரச்சனைகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதையும் சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
முடியின் புறத்தோலில் பாதிப்பு- எப்போது கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்துகிறோமோ, அப்போது அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் முடியில் ஏற்படுகிறது.
இதனால் முடியின் புறத்தோல் பாதிக்கப்படுகிறது. அதுவே இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், இந்த பாதிப்பு நிரந்தரமாக இருக்கும் நிலை கூட ஏற்படும். ஆகவே கூந்தல் பலமிழந்து உதிருகிறது.
கூந்தல் உதிர்தல்- கூந்தல் உதிருவதற்கு ஒரு காரணம் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதும் ஒன்று. ஏனெனில் குளித்ததும் ர் ட்ரையரை பயன்படுத்தும் போது, முடித்துளைகள் சற்று தளர்ந்து இருக்கும்.
அப்போது அந்த இடத்தில் அதிகமான வெப்பம் படும்போது, கூந்தல் எளிதில் உதிருகிறது. மேலும் தலையில் ஏதேனும் அழுக்குகள் இருந்தால் கூட, அது அப்படியே தங்கிவிடும். பின் கூந்தல் உதிர்தலை தடுப்பது கடினமாகிவிடும்.
கூந்தல் வறட்சி- கூந்தலுக்கு அதிக அளவு வெப்பம் செலுத்தும் போது, தலையில் உள்ள ஈரப்பசை அனைத்தும் போய்விடும். இதனால் கூந்தல் வறண்டுவிடுகிறது. மேலும் இது கூந்தலின் பொலிவை இழக்க வைத்துவிடும்.
முனைகளில் வெடிப்பு- எப்போது தலைக்கு குளித்தாலும் கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதால், அதிக அளவு வெப்பம் படுவதால், கூந்தலின் உள்ளே உள்ள லேயர்கள் பாதிக்கப்பட்டு, முனைகளில் நாளடைவில் வெடிப்புகளை ஏற்படுத்திவிடும்.
அழகான வடிவத்தை இழத்தல்- தொடர்ச்சியாக ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், சிறிது நாட்களில் கூந்தல் பொலிவிழந்து, இயற்கையான அழகை இழந்துவிடும். மேலும் உபயோகிக்கும் போதெல்லாம், சிறு சிறு முடிகளாக உதிரும். பின் அது அழகை இழந்து, கெட்டதாக காட்சியளிக்கும்.
ஆகவே எப்போதும் கூந்தலை காய வைக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தாமல், இயற்கையாக காய வைத்து, கூந்தலை ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.
10-dryhair600

-Premature ejaculation.............(விந்து முந்துதல்)

டாப்ளர் பரிசோதனை கருவி
 ஆண் உறுப்பு பெரியது,   ஆண் உறுப்பு படம்,  ஆண் உறுப்பு,  ஆண் உறுப்பு வளர்சசி,  ஆண் உறுப்பு அமைப்பு,  ஆண் உறுப்பு குறிப்புகள்,விந்து முந்துதல்,உடல் உறவு சக்தி,
ஆண்மைக்கு மருந்து,பெரிய ஆண் உறுப்பு,
விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருந்து,
` கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?
விந்து முந்துதல்.
இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதே நேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன் வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.
இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.
உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதை விடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.
மேற்கண்ட விந்து முந்துதல் பிரச்சனைக்கு நம் கிளினிக்கில் முழுமையான் தீர்வு தரும் சிகிச்சைகள் உள்ளன.
ஆண் உறுப்பில் உள்ள திசுக்களை பலப்படுத்தி நீண்ட நேர உறவுக்கு தயார் செய்ய முடியும்.
நரம்பு மண்டலத்தில் உணர்வு ஓட்டத்தை நெறிப்படுத்தி இன்ப உணர்வை நீடிக்க முடியும்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...