மண் அரிப்பு கேள்விப்பட்டு இருப்பீர்கள், எலும்பு அரிப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நமது உடலுக்குள் நிகழும் விபரீதமான இயற்கை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைந்தால் உடலில் எலும்பு அரிப்பு ஏற்படும்.
இதனால் சாதாரண வேலைகளின்போதுகூட எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. 30 வயதுக்கு முன்புவரை எலும்பு செல்களும் வழக்கம்போல வளர்வதும், முதிர்ந்தவை அழிவதும், மீண்டும் புதுப்பிக்கப்படுவதுமாக இருக்கும்.
35 வயது கடந்தால் இந்த புதுப்பித்தல் நிகழ்வு அரிதாகிவிடும். எலும்பின் உறுதிக்கு கால்சியம் அவசியம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதயத்துடிப்பு சீராக இருப்பதற்கும் கால்சியம் அத்தியாவசியம். ரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைந்தால் அவை எலும்புகளில் படிந்திருக்கும் கால்சியத்தை உறிஞ்சத் தொடங்குகிறது.
இதனால் எலும்புகள் செல்லரித்து உறுதி இழக்கிறது. இதுபோன்ற நிலையில் நாம் படுக்கையில் இருந்து எழுவது போன்ற சாதாரண செயல்களைச் செய்யும்போது கூட எலும்புகள் படக்கென்று உடைந்து போகும். மருத்துவ உலகம் இந்த பாதிப்பை 'ஆஸ்டியோ பெரோசிஸ்' என்கிறார்கள்.
தண்டுவடம் இந்த எலும்பு அரிப்பால் பாதிக்கப்பட்டால் கூன் விழுந்துவிடும். இளமை முடியும் தருணத்தில் இதுபோன்ற பாதிப்புகள் வெளிப்படலாம்.
எனவே இளம்பருவம் முதலே உடலில் கால்சியம் அளவாக சேர்த்து வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும். 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தினமும் 800 மில்லிகிராம் கால்சியம் தேவை.
10 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் அவசியம். சீராக கால்சியம் உணவில் சேர்த்தால் எலும்பு அரிப்புக்கு அவசியம் இல்லாமல் செய்துவிடலாம்.
10 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் அவசியம். சீராக கால்சியம் உணவில் சேர்த்தால் எலும்பு அரிப்புக்கு அவசியம் இல்லாமல் செய்துவிடலாம்.
சோயாபீன்ஸ், தேங்காய்த் துருவல், தயிர், எருமைப் பால், பாலாடைக்கட்டி, சீரகம் ஆகியவற்றில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. என்றும் உடல் உறுதிக்கு எலும்பின் உறுதி அவசியம் என்பதை உணர்வோம்
No comments:
Post a Comment