Sunday, March 9, 2014

சீதாப்பழம்


கூழான சதைப் பகுதியும், நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவையும் கொண்டது சீதாப்பழம். வெப்ப மண்டல பகுதிகளின் ருசியான கனிகளில் இதுவும் ஒன்று. சீதாப்பழத்தில் அடங்கியுள்ள அத்தியாவசிய சத்துக்களை பார்க்கலாம்.. 

* தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் பள்ளத்தாக்குப் பகுதிகளான பெரு, ஈக்வடாரை தாயகமாகக் கொண்டவை சீதாப்பழம். பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறங்களில் இவ்வகை கனிகள் இருக்கும். 

இதன் தோற்பரப்பு கடினமான வரிகளைக் கொண்டதுபோல் காணப்படும் என்றாலும் லேசான அழுத்தம் கொடுத்தாலே கனியின் சதைப் பகுதியை சுவைத்து உண்ணும் அளவுக்கு நெகிழ்ந்து விடும். 

சீதாப்பழத்தின் தாவர குடும்பம் அன்னோ நேசியே. இதன் அறிவியல் பெயர் அன்னோனா செரிமோலா. 4 வகையான சீதாப்பழங்கள் உள்ளன. இந்தியா உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளில் விளைவது அனோனா ரெடிகுலாடா வகை சீதாப் பழங்கள் ஆகும். 

* மாம்பழத்திற்கு நிகரான ஆற்றல் வழங்கக் கூடியது சீதாப்பழம். 100 கிராம் சீதாப்பழ சதைப் பற்றில் 75 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. 

* சீதாப்பழத்தில் கெட்ட கொழுப்புகள் எதுவும் கிடையாது. 

* எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய நார்ச்சத்து சீதாப்பழத்தில் மிகுந்துள்ளது. 100 கிராம் பழத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை குடற் பகுதியில் கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.   

* சீதாப்பழத்தை தோல்பகுதியைத் நோயை உருவாக்கும் நச்சுப் பொருட்கள் குடலில் படியாமல் பாதுகாப்பதிலும் செயலாற்றுகிறது. 

* பல்வேறு துணை ரசாயன மூலக்கூறுகள் சீதாப்பழத்தில் அடங்கி உள்ளன. ஆசிடோஜெனின் குழும துணை ரசாயனப் பொருட்கள் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. 
புற்றுநோய் மற்றும் மலேரியா தடுப்பு ரசாயனப் பொருளான சைடோடாக்சின் மூலக்கூறுகளும் கணிசமாக உள்ளன. 

* இயற்கையில் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, மிகச்சிறந்த அளவில் காணப்படுகிறது. இது உடலை பல்வேறு தொற்றுநோய்க் கிருமிகளிடம் இருந்தும் காக்க வல்லது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை உடலில் இருந்து அகற்றுகிறது. 

* பி-குழும வைட்டமின்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளது. குறிப்பாக பைரிடாக்சின், (வைட்டமின் பி-6) 0.257 மில்லிகிராம் உள்ளது. 
இது மூளை செயல்பாட்டிற்கு அத்தியாவசிய தேவையாகும். கோபம் போன்ற பல்வேறு மனஅழுத்த பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. 

* சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாதுஉப்புக்களும் இதில் உள்ளன.

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...