Saturday, August 13, 2016

உடல் மெலிவதற்க்கு பயன் படுத்த கூடியன

ஆரோக்கியமான போதியளவு ஊட்டச்சத்துகளை  தரக்கூடிய ஒரு உணவுத்திட்டத்துடன், தினமும்
ஒழுங்கான தேகப்பயிற்சியுமே நிரந்தரமாக நிறையிழப்பிற்க்கு  உதவக்கூடும்.இத்தயாரிப்புகளைப் உடல் மெலிவதற்காக பயன்படுத்துவதனால், உடலுக்கு வேண்டிய உயிர் சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதை கவனித்து கொள்ள வேண்டும்.  உணவிலுள்ள கலோரியலவை  கருத்திலெடுத்து உண்பதாக இருந்தால்,ஒமேக 3 கொழுப்பமிலம் (பற்றி அசிட்) எடுக்க வேண்டும். கொழுப்பமிலம் (கட்டாயமான) உடல் கொழுப்பை எரியச் செய்ய உதவுகின்றது.
பசியை கட்டுபடுத்துவதாக செயற்படும் குறைநிரப்பிகளை பயன்படுத்தலாம். புளியம் பழத்திலிருந்து (காசீனியா  கம்போகியா தாவரம்) பெறப்படும் தயாரிப்பானது உடலினது கொழுப்பு தயாரிப்பதை குறைப்பதாகவும், பசியை குறைப்பதாகவும் செயற்படுவதாக காணப்படுகிறது.  செரற்ரோனின் எனப்படும் பதார்த்தம், பல நிறை குறைப்பிற்காக உண்ணப்படும் உணவுகளில் குறைவாகவே காணப்படுகின்றது.  இது மனவழுத்ததிற்கும், அதிகமாகவுண்ணும் பழத்திற்க்கும் வழி கோலக் கூடும். அமினோ அமிலங்கள்,5 எச்ரிபி போன்றன எடுப்பதனால், செரற்ரோனின் அளவைக் கூட்டலாம்.
இனிப்புணவுக்கு அவாவுதல்,களைப்பு,சோர்வு அல்லது சுடுதியாக உடலில் சத்தியளவு குறைதல் அல்லது மாறுபடுதல் போன்றன வழமையாக ஏற்ப்படுமாயின், குளோமியம் எனும் முக்கியமாக தேவைப்படும் கனியுப்பு வேண்டியதாகும்.  இது குருதி வெல்ல அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டியதொன்றாகும்.  குருதி வெல்லம் சமநிலையில் இல்லாத பொழுது அதிகமாக பசியெடுக்க மேலதிகமாக உண்ணும் நிலை ஏற்படும்.
முழுத்தானியங்கள்இ, அவரை வகை வித்துக்கள்,கொட்டைகள், விதைகள்  போன்றவற்றில் குரோமியம்  இறந்த பொழுதும், குறைநிரப்பிகளாக எடுப்பது, குருதியில் வெல்லச்சமநிலையை பேணுவதற்க்கு  இலகுவானதும், விரைவானதுமாகும்.
மேலும் சில  பசியைத் தணிப்பதற்க்கன தயாரிப்புகள், நார்ச்சத்து  கொண்ட  உணவுகள்  உணவுக்கால்வயினுள்  நீருடன் தொடர்வுகொள்ளும்  பொழுது வீங்குவதனால் வயிறு உணவால் நிரம்பிய உணர்வு ஏற்பட மேலும் உண்ண முடியாது போகும்.குறைவாகவே உண்ண வேண்டி இருப்பதனால்,  உடல் மெலிய வாய்ப்பு உண்டு.
எடைக் குறைப்பிற்காக கட்டுப்பாடாக உண்ணும் பொழுதுஇ, உடலானது பட்டினி நிலை உள்ள போது போன்று செயற்பட ஆரம்பிக்கும் பைறுவேற்  எனப்படும் பதார்த்தமானது மாப்பொருள், புரதம் ஆகியவற்றின் சமிபாட்டில் பக்கவிளைவாக தோன்றுவதாகவும். இது உடலின் ஆக்கச்சிதைவு செயற்பாட்டை அதிகரித்துவிடும் இந்த தயாரிப்பு உடல் நிறையிழப்பிற்கு  எடுக்கலாம்.
அப்பிள் சைடர் வினிகர், உடல் செயற்பாடுகளை  ஊக்கப்படுத்தவும், கெல்ப் என்னும் இயற்கையான அயோடின் செறிவான தயாரிப்பு தைரோயிட் சுரப்பியின் தொழிபாட்டுக்கு உதவும், கிறீன்  ரீ எக்ஸ்ராக்ற் உடலில் சக்தி செலவீனத்தை அதிகரிப்பதாகவும் செயற்படுவதனால் உடல் நிறையிழப்பபிற்கு உதவுகின்றன.
நண்டுக் கோதிலிருந்து, கிரிம்ஸ்சிலிருந்து பெறப்படும் நார்ச்சத்து போன்றன சிற்ரோசான் என்னும் பதார்த்தம் கொழுப்பு அகத்துறிஞ்சப்படுவதை தடுத்துவிடுகிறது.  உணவுச்சமிபட்டின் பொழுது, கொழுப்பு உணவுக்கால்வாயில்  அகத்துறிஞ்சப்படாமலே வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறே மாச்சத்து உணவுகளும்  அகத்துறிஞ்சாமல் தடுக்க புதிய தயாரிப்புக்கள் கிடைக்கின்றன.
நீலப்பச்சை அல்கா  வகைத்  தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும். ஸபிரிலீனை போன்ற தயாரிப்புகள் உடல் மெலிவதற்க்கு உதவக்கூடும். இவ்வகை அல்கா தாவரங்களில் அதிக புரதம் காணப்படுவதனால் உடலின் சக்தியினளவை அதிகரிக்கச் செய்து நிறையிழப்பை   ஊக்குவிக்கிறது. கட்டாயமாக தேவைப்படும் கனியுப்புகளும், கொளுப்பமிலங்களும் செறிவாக காணப்படுகின்றது.
உடலின் நஞ்சகற்றல் முறை மூலம் உடல் மெலிவு முயற்ச்சியை தொடங்கலாம். பல மூலிகை தயாரிப்புகள் நஞ்சகற்றலுக்கு  கிடைக்கின்றன. மில்க் திசில், ஆட்டிச்சோக் போன்ற மூலிகைகள்இதந்தன்கள் குறிப்பாக ஈரலின் செயற்ற்படுகளை மேம்படுத்துகிறது.ஆலோவேரா சாறு  நஞ்சகற்றலிக்கும், பொதுவான ஆரோக்கிய ரொனிக்காகவும் தினமும் எடுக்கலா

Friday, July 1, 2016

கருப்பை புற்றுநோய்த் தாக்கத்தை அதிகரிக்கும் HPV தொற்று !

Human Papilloma Virus (HPV) இன் நிலையான தொற்று பெண்களில் கருப்பை, கருவாய் மற்றும் குத புற்றுநோய்(Cervical, Vulvar, VaginalCancer) தாக்கத்தை அதிகரிப்பதாக தெரிய வருகிறது.
இது பற்றி ஆய்வாளர் Susanne Kruger Kjaer கூறுகையில், ஏற்கனவே HPV தொற்றுக்கும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குமிடையிலான தொடர்புகள் அறியப்பட்டிருந்தாலும், இவ் ஆய்வில் பெறப்பட்ட முடிவுகள் குத மற்றும் பிறப்புறுப்புக்களில் உண்டாகும் புற்றுநோய் பற்றிய மேலதிக தகவல்களை தருவதாக சொல்கிறார்.
HPV vaccine ஆனது முற்காப்பு நடவடிக்கையாகும்.
HPV தொற்றை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் நீண்டகால தாக்கத்தினால் உண்டாகும் இது போன்ற நோய் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் என இவ் ஆய்வின் போது கண்டறிப்பட்டதாக Kjaer சொல்கிறார்.
முன்னைய ஆய்வுகளில் சில வகை HPV தொற்று புற்றுநோய்களை (CIN) ஏற்படுத்தியது வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் கருப்பை கழுத்து பகுதி மேற்புறத்தில் அசாதாரண கல வளர்ச்சிகள் அவதானிக்கப்பட்டிருந்தது. CIN3 ஆனது மேலும் உக்கிரமானது.
இது பற்றி மேலும் Kjaer கூறுகையில் HPV தொற்றினால் ஏற்படும் பெரும்பாலான CIN நோய் நிலைமைகள் பொதுவாக 1 அல்லது 2 வருடங்களுக்கிடையில் தாமகவே உடலால் நீக்கப்பட்டுவிடுகின்றன.
ஆயினும் மிக உக்கிரமான CIN2 அல்லது CIN3 தொற்றானது இலகுவில் நீக்கப்பட முடியாதவை.
இவை மிகப்பெரிய அளவில் கருப்பை மற்றும் குத புற்றுநோய்களை தோற்றுவிப்பதாக சொல்கிறார்.

Sunday, June 26, 2016

பெண்களுக்கு தைராய்டுவால் ஏற்படும் பாதிப்புகள் #

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. 


 


அதில் ஒன்றுதான் தொடை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.
 
இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.
 
தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இப்படி உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம்!
 
அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.
 
பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கபட்டு, சங்கிலித்தொடர் நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கபடலாம். அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால்… மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
 
குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்

முடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள்..!

கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்று விடும்.


 
 
* முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக, நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
 
* சின்னவெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
 
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
 
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
 
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென தொடங்கும்.

Friday, June 24, 2016

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?



நுரையிரல் புற்றுநோய் தற்போது பெருகிவரும் ஆபத்தான ஒரு உயிர்கொல்லிநோயாக மாறியுள்ளது.
இது பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு வருகின்றதென கருதப்பட்டாலும் ,சிகரெட் பிடிக்கும் பழக்கமற்றவர்களுக்கும் வரலாம்.

நுரையிரல் புற்றுநோயின்போது நோய் அறிகுறி இல்லாமலேயே 5 வீதமான நோயாளிகளுக்கு புற்றுநோய் உடலில் பரவலாம்.

அதாவது 100 வீதமான நுரையீரல் புற்றுநோயாளிகள் நோய் அறிகுறியை காட்டுவதில்லை.

41 வீதமானவர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக இருமல் காணப்படும்.

22 வீதமானவர்கள் நெஞ்சுவலியை ஆரம்ப அறிகுறியாக காட்டுவார்கள்.

15 வீதமான நோயாளிகள் நெஞ்சுவலியையும் இருமலையும் கொண்டிருப்பார்கள்.

மற்றும் 5வீதத்திற்கு குறைவானவர்கள் உடல்சோர்வு, உடல்எடைகுறைவடைதல், மூச்சுவிடக்கஸ்டப்படுதல் போன்ற அறிகுறிகளை காண்பிப்பர்.

5வீதமானோருக்கு ஆரம்பஅறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை.

ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதனை தட்டிக்கழிக்க முடியாது.

ஆரம்ப அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும்  எக்றே மூலம் கண்டுபிடிக்கமுடியும்.


ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் எக்றே மாற்றங்களையும் எதிர்பார்க்கமுடியும்.

Wednesday, June 15, 2016

பழங்களில் காணப்படும் மருத்துவக் குணங்களும், சத்துக்களும்....

மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.


பப்பாளி
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
அன்னாசி
அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. 
உடலில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

Monday, June 13, 2016

வகுப்பறையில் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் ?

முதலுதவி’ செய்பவர் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவருடன் இருந்து, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், முதலுதவி என்பது அந்த நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் முதலுதவி செய்ய முன்வர வேண்டும்.

வகுப்பறையில் எப்படி முதுலுதவி செய்வது?

1. எப்பொழுதும் வகுப்பறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆபத்தான பகுதிகள் இருப்பின் அதை கண்காணித்தவராக இருக்க வேண்டும்.

2. முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்.

3. சம்பவ இடத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவருக்கு பீதியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும்.

4. வகுப்பறையில் முதல் உதவி பெட்டி அமைந்திருக்கும் இடத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

5. பாதிக்கப்பட்டவரை யாரும் சூழ்ந்திருக்காதபடி கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இயற்கையின் காற்று அவருக்கு கிடைக்கும்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...