ஆரோக்கியமான போதியளவு ஊட்டச்சத்துகளை தரக்கூடிய ஒரு உணவுத்திட்டத்துடன், தினமும்
ஒழுங்கான தேகப்பயிற்சியுமே நிரந்தரமாக நிறையிழப்பிற்க்கு உதவக்கூடும்.இத்தயாரிப்புகளைப் உடல் மெலிவதற்காக பயன்படுத்துவதனால், உடலுக்கு வேண்டிய உயிர் சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதை கவனித்து கொள்ள வேண்டும். உணவிலுள்ள கலோரியலவை கருத்திலெடுத்து உண்பதாக இருந்தால்,ஒமேக 3 கொழுப்பமிலம் (பற்றி அசிட்) எடுக்க வேண்டும். கொழுப்பமிலம் (கட்டாயமான) உடல் கொழுப்பை எரியச் செய்ய உதவுகின்றது.
பசியை கட்டுபடுத்துவதாக செயற்படும் குறைநிரப்பிகளை பயன்படுத்தலாம். புளியம் பழத்திலிருந்து (காசீனியா கம்போகியா தாவரம்) பெறப்படும் தயாரிப்பானது உடலினது கொழுப்பு தயாரிப்பதை குறைப்பதாகவும், பசியை குறைப்பதாகவும் செயற்படுவதாக காணப்படுகிறது. செரற்ரோனின் எனப்படும் பதார்த்தம், பல நிறை குறைப்பிற்காக உண்ணப்படும் உணவுகளில் குறைவாகவே காணப்படுகின்றது. இது மனவழுத்ததிற்கும், அதிகமாகவுண்ணும் பழத்திற்க்கும் வழி கோலக் கூடும். அமினோ அமிலங்கள்,5 எச்ரிபி போன்றன எடுப்பதனால், செரற்ரோனின் அளவைக் கூட்டலாம்.
இனிப்புணவுக்கு அவாவுதல்,களைப்பு,சோர்வு அல்லது சுடுதியாக உடலில் சத்தியளவு குறைதல் அல்லது மாறுபடுதல் போன்றன வழமையாக ஏற்ப்படுமாயின், குளோமியம் எனும் முக்கியமாக தேவைப்படும் கனியுப்பு வேண்டியதாகும். இது குருதி வெல்ல அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டியதொன்றாகும். குருதி வெல்லம் சமநிலையில் இல்லாத பொழுது அதிகமாக பசியெடுக்க மேலதிகமாக உண்ணும் நிலை ஏற்படும்.
முழுத்தானியங்கள்இ, அவரை வகை வித்துக்கள்,கொட்டைகள், விதைகள் போன்றவற்றில் குரோமியம் இறந்த பொழுதும், குறைநிரப்பிகளாக எடுப்பது, குருதியில் வெல்லச்சமநிலையை பேணுவதற்க்கு இலகுவானதும், விரைவானதுமாகும்.
மேலும் சில பசியைத் தணிப்பதற்க்கன தயாரிப்புகள், நார்ச்சத்து கொண்ட உணவுகள் உணவுக்கால்வயினுள் நீருடன் தொடர்வுகொள்ளும் பொழுது வீங்குவதனால் வயிறு உணவால் நிரம்பிய உணர்வு ஏற்பட மேலும் உண்ண முடியாது போகும்.குறைவாகவே உண்ண வேண்டி இருப்பதனால், உடல் மெலிய வாய்ப்பு உண்டு.
எடைக் குறைப்பிற்காக கட்டுப்பாடாக உண்ணும் பொழுதுஇ, உடலானது பட்டினி நிலை உள்ள போது போன்று செயற்பட ஆரம்பிக்கும் பைறுவேற் எனப்படும் பதார்த்தமானது மாப்பொருள், புரதம் ஆகியவற்றின் சமிபாட்டில் பக்கவிளைவாக தோன்றுவதாகவும். இது உடலின் ஆக்கச்சிதைவு செயற்பாட்டை அதிகரித்துவிடும் இந்த தயாரிப்பு உடல் நிறையிழப்பிற்கு எடுக்கலாம்.
அப்பிள் சைடர் வினிகர், உடல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தவும், கெல்ப் என்னும் இயற்கையான அயோடின் செறிவான தயாரிப்பு தைரோயிட் சுரப்பியின் தொழிபாட்டுக்கு உதவும், கிறீன் ரீ எக்ஸ்ராக்ற் உடலில் சக்தி செலவீனத்தை அதிகரிப்பதாகவும் செயற்படுவதனால் உடல் நிறையிழப்பபிற்கு உதவுகின்றன.
நண்டுக் கோதிலிருந்து, கிரிம்ஸ்சிலிருந்து பெறப்படும் நார்ச்சத்து போன்றன சிற்ரோசான் என்னும் பதார்த்தம் கொழுப்பு அகத்துறிஞ்சப்படுவதை தடுத்துவிடுகிறது. உணவுச்சமிபட்டின் பொழுது, கொழுப்பு உணவுக்கால்வாயில் அகத்துறிஞ்சப்படாமலே வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறே மாச்சத்து உணவுகளும் அகத்துறிஞ்சாமல் தடுக்க புதிய தயாரிப்புக்கள் கிடைக்கின்றன.
நீலப்பச்சை அல்கா வகைத் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும். ஸபிரிலீனை போன்ற தயாரிப்புகள் உடல் மெலிவதற்க்கு உதவக்கூடும். இவ்வகை அல்கா தாவரங்களில் அதிக புரதம் காணப்படுவதனால் உடலின் சக்தியினளவை அதிகரிக்கச் செய்து நிறையிழப்பை ஊக்குவிக்கிறது. கட்டாயமாக தேவைப்படும் கனியுப்புகளும், கொளுப்பமிலங்களும் செறிவாக காணப்படுகின்றது.
உடலின் நஞ்சகற்றல் முறை மூலம் உடல் மெலிவு முயற்ச்சியை தொடங்கலாம். பல மூலிகை தயாரிப்புகள் நஞ்சகற்றலுக்கு கிடைக்கின்றன. மில்க் திசில், ஆட்டிச்சோக் போன்ற மூலிகைகள்இதந்தன்கள் குறிப்பாக ஈரலின் செயற்ற்படுகளை மேம்படுத்துகிறது.ஆலோவேரா சாறு நஞ்சகற்றலிக்கும், பொதுவான ஆரோக்கிய ரொனிக்காகவும் தினமும் எடுக்கலா
No comments:
Post a Comment