Wednesday, January 3, 2018

பாம்பு கடித்தால்....பதற வேண்டாம்


பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இலங்கையில்
 உள்ள நச்சு 

கடித்தது விஷப்பாம்புதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதை எப்படி கண்டறிவது? பாம்பு கடித்த இடத்தில், இரண்டு  பற்களின் அடையாளம் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்திருக்கும்; அந்த இடம் சற்று வீங்கி கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். இந்த அறிகுறி  இருந்தால், அது விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும். கடித்த இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பற்கள் வரிசையாக பதிந்து காணப்பட்டால், அந்த  அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.

முதலில் பாம்பு கடித்தவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல்  முழுக்க வேகமாக பரவிவிடும்.கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தை சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றை கட்ட வேண்டும். இறுக்கமாக கட்டாமல், இரண்டு  விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி கொடுத்து கட்டலாம். பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாக, மருத்துமனைகளில் `ஆன்டி-ஸ்நேக் விநோம்’  மருந்து தரப்படும். ரத்தம் உறையும் நேரத்தை கணக்கிட்டு எந்த வகை பாம்பு கடித்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம்
பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை. ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை. பாம்பு கடித்துவிட்டால்  பதறக்கூடாது. பாம்பு கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து  செல்லக்கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச்செல்ல வேண்டும்.

Monday, January 1, 2018

ஆஸ்டியோபொரோசிஸ்




சுவரின்றி சித்திரம் வரைய முடியாது இல்லையா? அப்படி மனிதனுக்கு சுவர் போன்றதுதான் எலும்பு அமைப்பு. பொதுவாக, பலமான விஷயங்களுக்கு எலும்புகளை உதாரணம் காட்டுவார்கள். எலும்பு அவ்வளவு உறுதியானது என அர்த்தம். ஆனால், ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டால் அதே எலும்பு ஸ்பான்ஞ் மாதிரி மென்மையாக மாறிவிடும்.  ஆஸ்டியோபொரோசிஸை எலும்பு வலுவிழப்பு நோய், எலும்புப் புரை நோய் என்றும் அழைக்கிறார்கள். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் தாக்குகிறது. காரணம், அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையத் தொடங்குவதுதான். அதேபோல தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரக்கும் பெண்களுக்கும் அதன் விளைவாக இந்தப் பிரச்னை தாக்குகிறது.

40 வயதைக் கடந்த பெண்கள் பலரிடம் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளைக் கேட்க முடிகிறது. அந்த அறிகுறிகளை சாதாரண பலவீனத்தின் அறிகுறிகளாக நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்துகிறார்கள். அது உடலுக்குள்ளேயே அமைதியாக வளர்ந்து ஒரு நாள் தீவிரமாகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் தீவிர நிலையை அடையும்போது இருமினாலோ, தும்மினாலோகூட எலும்புகள் உடையக்கூடும். சாதாரணமாக கால் தடுக்கினால்கூட எலும்புகள் உடையக்கூடும்.

ஆஸ்டியோபொரோசிஸ் என்றால் என்ன?எளிமையாகச் சொல்வதென்றால் எலும்புகள் வலுவிழக்கிற நிலை. அதாவது நம் உடலில் வைட்டமின் டியின் அளவானது 30 என்கிற அளவில் இருப்பதுதான் ஆரோக்கியமானது. அந்த அளவு குறையும்போதுதான் பிரச்னை. நம் உடலில் உள்ள எலும்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.

எலும்பிலுள்ள பழைய செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும். வயதாக ஆக இந்த புதுப்பித்தல் திறன் மந்தமாகும். அதனால் எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும். எலும்புகளின் அடர்த்தி குறைவதால் அவற்றில் துளைகள் விழுந்து எலும்புகள் இன்னும் பலமிழக்கும். அதனால்தான் அவை ஸ்பான்ஞ் போன்ற தன்மையை அடைகின்றன. இதைத்தான் ஆஸ்டியோபொரோசிஸ் அதாவது எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். ஆஸ்டியோபொரோசிஸ்  என்பது எந்த அறிகுறிகளையும் காட்டாமல் வருடக் கணக்கில் அமைதியாக வளர்ந்து ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஒரு பிரச்சினை. முதுகுவலி, எலும்பு உடைதல், உயரம் குறைதல், கூன் விழுந்த தோற்றம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

இரண்டு வகையான ஆஸ்டியோபொரோசிஸ் 
ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையில் Primary மற்றும் Secondary என இரண்டு வகைகள் உள்ளன. இதில் பிரைமரி ஆஸ்டியோபொரோசிஸ் என்பது இயல்பாக வயதாவதன் விளைவாக ஏற்படுவது. மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கும், 50 முதல் 70 வயதுக்காரர்களுக்கும் அதிகம் பாதிப்பது இந்த வகைதான். செகண்டரி

ஆஸ்டியோபொரோசிஸை அதிகரிக்கும் காரணிகள்
முதுமை, பெண் பாலினம், புகை மற்றும் குடிப்பழக்கம், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, கால்சியம் குறைவான உணவுப்பழக்கம், ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவது, குடும்பத்தில் வேறு யாருக்காவது ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு இருந்தால்...

எப்போது மருத்துவப் பரிசோதனை அவசியம்?
உங்கள் உடலில் ஏதோ ஒரு எலும்பு உடைந்துவிட்டதாக உணர்கிறீர்களா? உங்கள் உடலின் ஏதோ ஒரு பாகத்தை அசைக்க முடியாதபடி உணர்கிறீர்களா?
திடீரென உடலில் ஏதோ ஒரு இடத்தில் தாங்க முடியாத வலியை உணர்கிறீர்களா அல்லது உங்கள் உடலின் எடையைத் தாங்க முடியாதபடி சிரமமாக உணர்கிறீர்களா? உங்கள் கையோ அல்லது காலோ அதன் இயல்பான ஷேப்பில் இல்லாதது போல உணர்கிறீர்களா? இவையெல்லாம் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெ


ஆஸ்டியோபொரோசிஸ் என்பது சில உடல்நல பிரச்சினைகளின் விளைவால் அவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவால் ஏற்படுவது. சர்க்கரை நோய், தைராய்டு, கல்லீரல் நோய்கள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவால் ஏற்படுவது.

Sunday, October 1, 2017

1. Beat High Blood Pressure

The average banana contains 500 milligrams of potassium and very little sodium, making them an ideal weapon for battling high blood pressure. Potassium lessens the effect of sodium in your system, so try eating a banana after an exceptionally salty meal.

2. Increase Bone Density

The potassium in bananas is equally important for preventing bone loss, especially in women, who, as they age, lose bione density at a faster rate than men. While potassium itself doesn’t directly affect the bones, potassium can neutralize acids that remove calcium from the body and cause bones to weaken.

3. Stabilize Your Mood

Bananas contain tryptophan, a protein that your body converts into serotonin, your feel-good chemical. The potassium in bananas also stabilize your heart rate and send oxygen to your brain. Stress reduces potassium levels, throwing off your heart and disrupting oxygen to the brain, so re-balancing yourself with a high-potassium snack, like a banana, can leave you feeling calm, cool and collected.

4. Ease Menstrual Symptoms

Next time you start feeling the effects of PMS, don’t turn to the medicine cabinet; a banana may be all you need. The vitamin B6 in bananas regulate blood glucose levels, which can calm even the most severe mood swings. Potassium also protects against muscle cramps and aids in digestion, relieving menstrual cramps, aches and pains.

5. Protect Against Iron Deficiency And Anemia

Iron deficiency anemia is a lack of red blood cells in the bloodstream, negatively affecting the amount of oxygen your tissues receive. Symptoms of iron deficiency anemia include dizziness and fainting, brittle nails, cold hands and feet and low energy. Bananas contain easily assimilable iron and help stimulate the production of hemoglobin in the blood.

6. Regulate Digestion

Bananas are a good source of fibre. A high-fibre diet regulates the digestive system, easing symptoms of  irregularity.

7. Cure Hangovers

One of the best and simplest hangover cures is a banana smoothie, sweetened with a little honey. Banana have a soothing effect on the stomach and, along with the honey, can help restore depleted blood sugar levels.

8. Help You Quit Smoking

The B6 and B12 vitamins found in bananas, along with potassium and magnesium, may help the body recover from the miserable effects of nicotine withdrawal, which include headache, nausea and of course, nicotine cravings. Exercise also helps, so eat a banana and work out daily to make quitting smoking that much easier.

9. Treat And Prevent Ulcers

Bananas help ulcer-sufferers neutralize over-acidity and reduce irritation by coating the stomach lining. And eating bananas regularly may help protect against developing ulcers in the first place: the compounds in bananas that protect against irritation create a protective barrier in the stomach against hydrochloric acid. Bananas also contain protease inhibitors, which help eliminate bacteria in the stomach that causes stomach ulcers.

10. Prevent Heartburn

That same protective coating that protects your stomach against ulcers, combined with the naturally antacid effect, makes bananas a great natural remedy for heart burn and acid reflux

Monday, September 25, 2017

மனச்சோர்விலிருந்து விடுபட




1. உடற் பயிற்சிகள்: 

காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும். 

இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகியவை அவசியம். 

2. யோகா, தியானம்: 

ஒருவருக்குப் போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும், உளச்சோர்வு நோய் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே இணையச்செய்வது யோகா பயிற்சி மட்டுமே. 

அதேபோல், குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு, மனதில் வரும் எந்தப் பொருளின் மீதும் மனதைச் செலுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும், சிந்தனைத் தெளிவும் கிட்டும். 

3. உணவில் கட்டுப்பாடு: 

எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் சைக்கோடிக் மனச்சோர்வு நோய்க்கு ஆரம்பகால நுழைவாயில்கள் (நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்துவிடும் என்பது வேறு விஷயம்). அதற்குக் கட்டுப்பாடான உணவுதான் சிறந்த சிகிச்சை. காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நெய், பாலாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். 

4. புகை, மது கூடாது: 

புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் சைக்கோடிக் மனச் சோர்வு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 

5. நிம்மதியான தூக்கம்: 

ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப்போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

6. வேலையில் அக்கறை: 

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒருமனத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேரத்தைத் திட்டமிடத் தெரியாதது, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது, மனச்சோர்வை தூண்டக்கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

7. போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்: 

தேவையற்ற, முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர, மனம் பலவீனப்படுவதோடு, எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டிவரும். இவைதான் பலருக்கு மனச்சோர்வு நோய் வரக் காரணம். 

8. சமுதாயத்தோடு ஒத்துப்போதல்: 

நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணையை, தோழமையை உருவாக்கும். உறவுகளுடன் சேர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்வது, இசை, பாட்டு என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும் சமூக உறவோடு கலப்பதற்கு உதவும். 

சைக்கோடிக் மனச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்து விடும். அச்சம், சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீத செயல்களுக்கு இட்டுச் செல்லும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன், ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று, உடலையும் மனதையும் முழு செக்கப் செய்துகொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.

Thursday, December 1, 2016

வயோதிகமும்... எலும்பு நலமும்...!




Bone & Joint Health


 
முதுமை... எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக நோய்க்கு ஆளாகுதல், எலும்பு பலவீனத்தால் நடப்பதில் சிரமம், அதனால் அடிக்கடி கீழே விழுதல், காயம் அடைதல், எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிற காலகட்டம். இவற்றில் இருந்து முதுமை பருவத்தை எப்படி பாதுகாக்கலாம்? விளக்குகிறார் முதியோர் நலன் மருத்துவர் ஜனகன் ‘‘வயோதிகக் காலத்தில் உடலில் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். அவற்றில், முதுகு எலும்பு பாதிக்கப்படுதல் முக்கிய பிரச்னையாக உள்ளது.

இணைப்புகளில் வலி, மூட்டு தேய்மானம், முதுகெலும்பு வளைதல் மற்றும் கீழே விழுவதால் ஏற்படும் முதுகெலும்பு முறிவு என பல பிரச்னைகளால் முதியோர்கள் அவதிப்படுகின்றனர். முதுமையில் ஏற்படும் Degenerative Changes எனப்படும் தேய்மானம் காரணமாக முதுகு எலும்பு பாதிப்பு அடைவது பொதுவாக நடைபெறும் ஒன்றாக உள்ளது. அடுத்து, கீழே விழுவதால் ஏற்படும் இடும்பு எலும்பு முறிதல் மற்றும் இணைப்புகள் விலகுதல் போன்ற பாதிப்புகள் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றன.

கண் பார்வை குறைபாடு, மயக்கம் போன்றவை காரணமாக கழிவறை, படிக்கட்டு போன்ற இடங்களில் தவறி விழுதல் இவற்றுக்குக் காரணமாக அமைகின்றன. இவற்றில் இருந்து முதியோர்களைக் குணப்படுத்த பிரச்னைகளுக்கு ஏற்றவாறு தகுந்த சிகிச்சைகள் உள்ளன. அதேவேளையில், முதுமை காரணமாக சிகிச்சைக்கு அதிக நாள் தேவைப்படும். இவர்களில் சிலருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது சிரமம். வயதான காலத்தில் இத்தகைய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். அதற்கு எலும்பு தொடர்பான பிரச்னைகள் வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி.

இதற்கு உணவுப்பழக்கம் உதவும். கால்சியம், புரதம், வைட்டமின்டி அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். பால், காய்கறிகள், முட்டை, பாதாம் போன்ற பருப்பு வகைகளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்பு மற்றும் தசைகள் பலம் அடையும். சாதாரண உணவு மட்டுமே பயன் தராது. முறையான உணவுப்பழக்கம் மற்றும் சரியான வாழ்க்கை முறையையும் தாண்டி வயதானவர்களுக்கு எலும்பு முறிவு, இணைப்புகள் விலகல் போன்றவை ஏற்படலாம்.

இவற்றின் தன்மையைப் பொறுத்து, மருந்து, மாத்திரைகளோ, பிசியோதெரபி பயிற்சியோ, அறுவை சிகிச்சையோ தேவைப்படும். அதன்பின்னர், சில காலம் பெட் ரெஸ்ட் எடுப்பது அவசியமாக இருக்கலாம். இந்தச் சமயத்தில் வயதானவர்கள் நடக்கும்போதும் உட்காரும்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஹார்மோன் மாறுபாடு காரணமாக பெண்களின் எலும்பு விரைவில் பலவீனம் அடையும். எனவே, இவர்கள் சத்துக்கள் அதிகம் உள்ள உணவு வகைகளை தேவையான அளவு சரியான நேரத்துக்கு சாப்பிட்டு வர வேண்டும்.

வயதானவர்களுக்கு மட்டும் இல்லாமல் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும் எலும்பு பாதிப்பு அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதைத் தவிர்க்க, கால்கள் இரண்டும் நன்றாக தரையில் படுமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலியை பயன்படுத்துவது நல்லது. ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் நடக்க வேண்டும். இதனால், முதுகெலும்பு ஆரோக்கியம் மேம்படும். இதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படும் கழுத்தெலும்பு, இடுப்பு எலும்பு வலி மற்றும் Spondylosis போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.’’

Saturday, August 13, 2016

உடல் மெலிவதற்க்கு பயன் படுத்த கூடியன

ஆரோக்கியமான போதியளவு ஊட்டச்சத்துகளை  தரக்கூடிய ஒரு உணவுத்திட்டத்துடன், தினமும்
ஒழுங்கான தேகப்பயிற்சியுமே நிரந்தரமாக நிறையிழப்பிற்க்கு  உதவக்கூடும்.இத்தயாரிப்புகளைப் உடல் மெலிவதற்காக பயன்படுத்துவதனால், உடலுக்கு வேண்டிய உயிர் சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதை கவனித்து கொள்ள வேண்டும்.  உணவிலுள்ள கலோரியலவை  கருத்திலெடுத்து உண்பதாக இருந்தால்,ஒமேக 3 கொழுப்பமிலம் (பற்றி அசிட்) எடுக்க வேண்டும். கொழுப்பமிலம் (கட்டாயமான) உடல் கொழுப்பை எரியச் செய்ய உதவுகின்றது.
பசியை கட்டுபடுத்துவதாக செயற்படும் குறைநிரப்பிகளை பயன்படுத்தலாம். புளியம் பழத்திலிருந்து (காசீனியா  கம்போகியா தாவரம்) பெறப்படும் தயாரிப்பானது உடலினது கொழுப்பு தயாரிப்பதை குறைப்பதாகவும், பசியை குறைப்பதாகவும் செயற்படுவதாக காணப்படுகிறது.  செரற்ரோனின் எனப்படும் பதார்த்தம், பல நிறை குறைப்பிற்காக உண்ணப்படும் உணவுகளில் குறைவாகவே காணப்படுகின்றது.  இது மனவழுத்ததிற்கும், அதிகமாகவுண்ணும் பழத்திற்க்கும் வழி கோலக் கூடும். அமினோ அமிலங்கள்,5 எச்ரிபி போன்றன எடுப்பதனால், செரற்ரோனின் அளவைக் கூட்டலாம்.
இனிப்புணவுக்கு அவாவுதல்,களைப்பு,சோர்வு அல்லது சுடுதியாக உடலில் சத்தியளவு குறைதல் அல்லது மாறுபடுதல் போன்றன வழமையாக ஏற்ப்படுமாயின், குளோமியம் எனும் முக்கியமாக தேவைப்படும் கனியுப்பு வேண்டியதாகும்.  இது குருதி வெல்ல அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டியதொன்றாகும்.  குருதி வெல்லம் சமநிலையில் இல்லாத பொழுது அதிகமாக பசியெடுக்க மேலதிகமாக உண்ணும் நிலை ஏற்படும்.
முழுத்தானியங்கள்இ, அவரை வகை வித்துக்கள்,கொட்டைகள், விதைகள்  போன்றவற்றில் குரோமியம்  இறந்த பொழுதும், குறைநிரப்பிகளாக எடுப்பது, குருதியில் வெல்லச்சமநிலையை பேணுவதற்க்கு  இலகுவானதும், விரைவானதுமாகும்.
மேலும் சில  பசியைத் தணிப்பதற்க்கன தயாரிப்புகள், நார்ச்சத்து  கொண்ட  உணவுகள்  உணவுக்கால்வயினுள்  நீருடன் தொடர்வுகொள்ளும்  பொழுது வீங்குவதனால் வயிறு உணவால் நிரம்பிய உணர்வு ஏற்பட மேலும் உண்ண முடியாது போகும்.குறைவாகவே உண்ண வேண்டி இருப்பதனால்,  உடல் மெலிய வாய்ப்பு உண்டு.
எடைக் குறைப்பிற்காக கட்டுப்பாடாக உண்ணும் பொழுதுஇ, உடலானது பட்டினி நிலை உள்ள போது போன்று செயற்பட ஆரம்பிக்கும் பைறுவேற்  எனப்படும் பதார்த்தமானது மாப்பொருள், புரதம் ஆகியவற்றின் சமிபாட்டில் பக்கவிளைவாக தோன்றுவதாகவும். இது உடலின் ஆக்கச்சிதைவு செயற்பாட்டை அதிகரித்துவிடும் இந்த தயாரிப்பு உடல் நிறையிழப்பிற்கு  எடுக்கலாம்.
அப்பிள் சைடர் வினிகர், உடல் செயற்பாடுகளை  ஊக்கப்படுத்தவும், கெல்ப் என்னும் இயற்கையான அயோடின் செறிவான தயாரிப்பு தைரோயிட் சுரப்பியின் தொழிபாட்டுக்கு உதவும், கிறீன்  ரீ எக்ஸ்ராக்ற் உடலில் சக்தி செலவீனத்தை அதிகரிப்பதாகவும் செயற்படுவதனால் உடல் நிறையிழப்பபிற்கு உதவுகின்றன.
நண்டுக் கோதிலிருந்து, கிரிம்ஸ்சிலிருந்து பெறப்படும் நார்ச்சத்து போன்றன சிற்ரோசான் என்னும் பதார்த்தம் கொழுப்பு அகத்துறிஞ்சப்படுவதை தடுத்துவிடுகிறது.  உணவுச்சமிபட்டின் பொழுது, கொழுப்பு உணவுக்கால்வாயில்  அகத்துறிஞ்சப்படாமலே வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறே மாச்சத்து உணவுகளும்  அகத்துறிஞ்சாமல் தடுக்க புதிய தயாரிப்புக்கள் கிடைக்கின்றன.
நீலப்பச்சை அல்கா  வகைத்  தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும். ஸபிரிலீனை போன்ற தயாரிப்புகள் உடல் மெலிவதற்க்கு உதவக்கூடும். இவ்வகை அல்கா தாவரங்களில் அதிக புரதம் காணப்படுவதனால் உடலின் சக்தியினளவை அதிகரிக்கச் செய்து நிறையிழப்பை   ஊக்குவிக்கிறது. கட்டாயமாக தேவைப்படும் கனியுப்புகளும், கொளுப்பமிலங்களும் செறிவாக காணப்படுகின்றது.
உடலின் நஞ்சகற்றல் முறை மூலம் உடல் மெலிவு முயற்ச்சியை தொடங்கலாம். பல மூலிகை தயாரிப்புகள் நஞ்சகற்றலுக்கு  கிடைக்கின்றன. மில்க் திசில், ஆட்டிச்சோக் போன்ற மூலிகைகள்இதந்தன்கள் குறிப்பாக ஈரலின் செயற்ற்படுகளை மேம்படுத்துகிறது.ஆலோவேரா சாறு  நஞ்சகற்றலிக்கும், பொதுவான ஆரோக்கிய ரொனிக்காகவும் தினமும் எடுக்கலா

Friday, July 1, 2016

கருப்பை புற்றுநோய்த் தாக்கத்தை அதிகரிக்கும் HPV தொற்று !

Human Papilloma Virus (HPV) இன் நிலையான தொற்று பெண்களில் கருப்பை, கருவாய் மற்றும் குத புற்றுநோய்(Cervical, Vulvar, VaginalCancer) தாக்கத்தை அதிகரிப்பதாக தெரிய வருகிறது.
இது பற்றி ஆய்வாளர் Susanne Kruger Kjaer கூறுகையில், ஏற்கனவே HPV தொற்றுக்கும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குமிடையிலான தொடர்புகள் அறியப்பட்டிருந்தாலும், இவ் ஆய்வில் பெறப்பட்ட முடிவுகள் குத மற்றும் பிறப்புறுப்புக்களில் உண்டாகும் புற்றுநோய் பற்றிய மேலதிக தகவல்களை தருவதாக சொல்கிறார்.
HPV vaccine ஆனது முற்காப்பு நடவடிக்கையாகும்.
HPV தொற்றை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் நீண்டகால தாக்கத்தினால் உண்டாகும் இது போன்ற நோய் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் என இவ் ஆய்வின் போது கண்டறிப்பட்டதாக Kjaer சொல்கிறார்.
முன்னைய ஆய்வுகளில் சில வகை HPV தொற்று புற்றுநோய்களை (CIN) ஏற்படுத்தியது வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் கருப்பை கழுத்து பகுதி மேற்புறத்தில் அசாதாரண கல வளர்ச்சிகள் அவதானிக்கப்பட்டிருந்தது. CIN3 ஆனது மேலும் உக்கிரமானது.
இது பற்றி மேலும் Kjaer கூறுகையில் HPV தொற்றினால் ஏற்படும் பெரும்பாலான CIN நோய் நிலைமைகள் பொதுவாக 1 அல்லது 2 வருடங்களுக்கிடையில் தாமகவே உடலால் நீக்கப்பட்டுவிடுகின்றன.
ஆயினும் மிக உக்கிரமான CIN2 அல்லது CIN3 தொற்றானது இலகுவில் நீக்கப்பட முடியாதவை.
இவை மிகப்பெரிய அளவில் கருப்பை மற்றும் குத புற்றுநோய்களை தோற்றுவிப்பதாக சொல்கிறார்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...