பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இலங்கையில்
உள்ள நச்சு
கடித்தது விஷப்பாம்புதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதை எப்படி கண்டறிவது? பாம்பு கடித்த இடத்தில், இரண்டு பற்களின் அடையாளம் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்திருக்கும்; அந்த இடம் சற்று வீங்கி கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். இந்த அறிகுறி இருந்தால், அது விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும். கடித்த இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பற்கள் வரிசையாக பதிந்து காணப்பட்டால், அந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.
முதலில் பாம்பு கடித்தவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாக பரவிவிடும்.கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தை சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றை கட்ட வேண்டும். இறுக்கமாக கட்டாமல், இரண்டு விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி கொடுத்து கட்டலாம். பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாக, மருத்துமனைகளில் `ஆன்டி-ஸ்நேக் விநோம்’ மருந்து தரப்படும். ரத்தம் உறையும் நேரத்தை கணக்கிட்டு எந்த வகை பாம்பு கடித்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம்
பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை. ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை. பாம்பு கடித்துவிட்டால் பதறக்கூடாது. பாம்பு கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து செல்லக்கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச்செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment