Saturday, March 15, 2014

எடை குறைய 7 நாட்கள்-7 days to drop weight



பருத்த உடலை வைத்து கொண்டு உஷ்.. புஷ்… என்று நடக்கவும் முடியாமல், அவதி படுபவர்களுக்காகவே உணவு திட்டம் இருக்கிறது. இதன் மூலம் 7 நாட்களிலில் அவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கலாம். அமெரிக்காவின் ஜெனரல் மோட்ல்ர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தனது ஊழியர்கலுக்காகவே அறிமுகப்படுத்தியது.

 இதனை அமெரிக்க விவசாய துறையும், உணவு மற்றும் மருத்து நிர்வாக துறையும் பல ஆய்வுகளுக்கு பிறகு அங்கீகரித்தன. இன்று உலகம் முழுவதும் இமந்த திட்டம் பரவி வருகிறது.

இந்த திட்டத்தின் படி ஒரு வாரத்தில் 10 முதல் 17 பவுண்ட் எடை குறையும். உற்சாகம் பொங்கி வழியும். எப்பபோது வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். பின்விளைவுகள் எதுவும் ஏற்படாது.

 உடலில் உள்ள அசுத்தங்கள்  நீங்கும். பாரமில்லாத‌ உடல் வந்தது போல் இருக்கும் என்று ஏகப்பட்ட நன்மைகளை கூறுகிறார்கள். இதை அனுபவித்தவர்கள்.
இந்த ஏழூ நாட்கள் உணவு திட்டத்தை கடைபிடிக்கும் போதுதினமும் 10 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மது பழக்கம், புகை பிடித்தல், போன்றவற்றை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் நல்ல பலனை தரும்.
முதல் நாள்: 

எல்லா வகையான பழங்களையும் சாப்பிட வேண்டும்.          வாழைப்பழ‌த்தை மட்டும் தவிர்க்க வேண்டும். மூலாம் பலம் தர்ப்பூசனி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டுமானாலும் சாப்பிடலாம்.புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ச‌க்திகளையும் வழங்கும்.
இரண்டாம் நாள் : 

காய் கறிகளை சமைத்தோ பச்சையாகவோ வயிறு நிறைய சாப்பிடுங்கள், வெறும் காய்கறிகளில் காபோஹைட்றேட் கிடையாது. அதனால் இரன்டாவது நாள் உணவில் வேக வைத்த உருழைக்கிழங்கு மசியலை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் நார் சத்துகளையும் கொடுக்கும்.
மூன்றாவது நாள் :

 பழங்களையும் காய்கறி கலந்து எடுத்து கொள்ளலாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வாழைப்பழம் கட்டாயம் கூடாது. அதே போல் உருழைக்கிழ‌ங்கும் வேண்டாம். ஏனென்றால் பழங்களில் இருந்து காபோஹைதறேட் கிடைத்து விடும். உடலின் எடை குறையத் தொடங்கும். தேவையில்லாத அதிக கொழுப்பு கரைக்கப்படும்.


நான்காம் நாள் : 

வாழைப்பழங்களையும் பாலையும் சாப்பிடலாம் இந்த நாளில் 8 வாழைப்பழங்களையும்   3 தம்ள்ர் பாலையும் அருந்த வேண்டும். ஏதாவது ஒரு சூப்பையும் அருந்தலாம். சிலரால் 8 வாழைப்பழ‌ங்களையும் சாப்பிட முடியாது . முதல் 3 நாளில் இழந்த பொட்டசியம், சோடியம் சுத்தமாக இருக்காது இந்த நாளில் தன் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சுகமான அனுபவமாக உணர‌ முடியும்


ஐந்தாம் நாள்: 

இன்றைய நாள் விருந்து நாள் இறைச்சி தக்காளியை சேர்த்து கொள்ளலாம் இறைச்சி 20 அவுன்ஸ் , 6 தக்காளிப் பழ‌ங்கள்  இறைச்சியோடு சேர்த்து சாப்பிடலாம். 

தன்னெரை கூடுதலாக 2 தம்ள்ர் அதாவது மொத்தமாக‌ 12 தம்ள்ர் குடிக்க வேண்டும் . இது வயிற்றில் தோன்றும். அமிலத்தை ஈடுகட்டும். இறைச்சியில் இரும்பு புரொட்டின் உள்ளன. அதிகமான தண்ணீர் குடிக்க ரத்த ஒட்டம் ஜீரண உறுப்புகள் சுத்தமாக்கப்படுகின்ற‌ன.


ஆறாம் நாள் :

 இறைச்சி, காய் கறிகளை வயிற்றின் மொத்த கொள்ளல‌வுக்கு சாப்பிடலாம். இதிலிருந்து இரும்பு , புரொட்டடீன்,வைட்டமின் நார்ச்சத்து கிடைக்கும். எடை குறையும் உடல் மாற்றத்தை உண‌ர முடியும்.



ஏழாம் நாள் : 

சாப்பாட்டில் கைகுத்தல் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். 10 தம்ள்ர் நீர் மட்டும் 7 நாட்களும் மறக்காமல் குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம், ஜீரண முறை எல்லாமே சிறப்பான கட்டுப்பாட்டில் இருக்கும் எடை குறைந்த உற்சாகம் முகத்தில் தெரியும் உடல் காற்றுப் போல் லேசாகத் தெரியும்
முயன்று பாருங்கள் ஓரே வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை உடல் குறையும்

வயிற்றில் வளர்வது .....ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள்


அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள்.
இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.
நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.
கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.
கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

Friday, March 14, 2014

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும்.... 20 உணவுகள்




உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பார்லி :

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

சோயா பொருட்கள் :

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ரெட் ஒயின் (Red Wine) :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
Max: 50 min-100 max ml/Day it Works as medicine

சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். (Note this)

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

எலும்பு அரிப்பு - Bone Erosion

எலும்பு அரிப்பு

மண் அரிப்பு கேள்விப்பட்டு இருப்பீர்கள், எலும்பு அரிப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நமது உடலுக்குள் நிகழும் விபரீதமான இயற்கை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைந்தால் உடலில் எலும்பு அரிப்பு ஏற்படும்.

இதனால் சாதாரண வேலைகளின்போதுகூட எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. 30 வயதுக்கு முன்புவரை எலும்பு செல்களும் வழக்கம்போல வளர்வதும், முதிர்ந்தவை அழிவதும், மீண்டும் புதுப்பிக்கப்படுவதுமாக இருக்கும்.

35 வயது கடந்தால் இந்த புதுப்பித்தல் நிகழ்வு அரிதாகிவிடும். எலும்பின் உறுதிக்கு கால்சியம் அவசியம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதயத்துடிப்பு சீராக இருப்பதற்கும் கால்சியம் அத்தியாவசியம். ரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைந்தால் அவை எலும்புகளில் படிந்திருக்கும் கால்சியத்தை உறிஞ்சத் தொடங்குகிறது.

இதனால் எலும்புகள் செல்லரித்து உறுதி இழக்கிறது. இதுபோன்ற நிலையில் நாம் படுக்கையில் இருந்து எழுவது போன்ற சாதாரண செயல்களைச் செய்யும்போது கூட எலும்புகள் படக்கென்று உடைந்து போகும். மருத்துவ உலகம் இந்த பாதிப்பை 'ஆஸ்டியோ பெரோசிஸ்' என்கிறார்கள்.

தண்டுவடம் இந்த எலும்பு அரிப்பால் பாதிக்கப்பட்டால் கூன் விழுந்துவிடும். இளமை முடியும் தருணத்தில் இதுபோன்ற பாதிப்புகள் வெளிப்படலாம்.
 எனவே இளம்பருவம் முதலே உடலில் கால்சியம் அளவாக சேர்த்து வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும். 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தினமும் 800 மில்லிகிராம் கால்சியம் தேவை.

10 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் அவசியம். சீராக கால்சியம் உணவில் சேர்த்தால் எலும்பு அரிப்புக்கு அவசியம் இல்லாமல் செய்துவிடலாம்.

 சோயாபீன்ஸ், தேங்காய்த் துருவல், தயிர், எருமைப் பால், பாலாடைக்கட்டி, சீரகம் ஆகியவற்றில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. என்றும் உடல் உறுதிக்கு எலும்பின் உறுதி அவசியம் என்பதை உணர்வோம்

Wednesday, March 12, 2014

Water therapy-வாட்டர் தெரபி


வாட்டர் தெரபி :
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர். 
இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது.
 தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.
வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால்,
அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,
2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,
7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,
4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,
3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,
10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,
மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
 மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது....
Alvappillai GuruhulanHelped by Senthil Bala from Elakadi (Old Sathapons Student)

நரம்பு தளர்ச்சியை போக்கும்.... மாம்பழம்

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். 
மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். 
மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உமாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். 
தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.
மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும்.
 குமட்டல் நீங்கும்லர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.
மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். 
மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்

Monday, March 10, 2014

உங்கள் இறப்பை தெரிந்து கொள்ள.. புதிய கருவி வந்தாச்சு

We Always with YOU As helper
HIV VACCINE SOON....2019 



உங்கள் இறப்பை தெரிந்து கொள்ள புதிய கருவி வந்தாச்சு
அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் அதிநவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் அதிநவீன ரத்த பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரத்தத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் அடிப்படையில் ஒருவர் ஆபத்தில் உள்ளாரா, இல்லையா என்பது குறித்து கண்டறிய முடியும்.
அந்த வகையில் பின்லாந்தில் 17,000 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் ஆகியோரின் ரத்த மாதிரிகளில் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த ரத்தப் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும்.
இதேபோல் பிற நோயால் தாக்கப்பட்டவர்களின் உடல்நிலையையும் இதன் மூலம் அறியலாம்.
நன்றாக இருப்பவர்களின் ரத்தத்துக்கும், நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.
இதை கண்டறியும் நவீன சோதனை, நியூக்ளியர் மேக்னடிக் ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுக்குள் ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியுமென தெரிவித்துள்ளார்
THANKS TO :http://www.thulikal.com

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...