Friday, March 7, 2014

மனதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற அடிப்படையில் மனிதனுக்கும், குரங்குக்கும் உள்ள உறவு காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குரங்கின் குணம் மரத்திற்கு மரம் தாவுவது. மனிதனின் மனமும் அவ்வாறுதான். குரங்கு தாவினால் அதற்கு எந்தவொரு தீங்கேதும் ஏற்படப்போவதில்லை. 

ஆனால் மனிதனின் தாவுகின்ற மனத்தால் அவன் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை. என்னதான் மனக்குரங்கு மனிதனை ஆட்டிவைத்தாலும், மனிதன் 
குரங்கை ஆட்டிவைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறான். 
அவதார புருஷர்களுக்கே துணைசெய்த இந்த அரிய மிருகம் எதையும் புரிந்து கொள்ளும் திறனையும், புத்திகூர்மையும் கொண்டது.

 இதை மனிதன் பழக்கிப் பல பேரிடம் பிச்சை கேட்க வைப்பது தான் வேடிக்கையான விஷயம்.கராத்தே நிபுணர் ஒருவர் தன் மாணவர்களுக்கு அந்தக் கலையைக் கற்றுக் கொடுத்து காசு சேர்ப்பதை விட்டுவிட்டு. ஒரு மனிதக் குரங்குக்கு கற்றுத் தந்து அதில் வெற்றியும் பெறுகிறார். 

ஏனென்றால் ஒரு மிருகத்துக்கு எண்ணச் சிதறல்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதன் ஆசைகளும், தேவைகளும் மிகக் குறைவு. 

அதனால் தான் இந்த மனிதக்குரங்கால் தன் மனதைக் குவித்து மனிதன் செய்வதைப் பார்த்து தானும் அப்படியே செய்து ஓர் அற்புதக் கலையைக் கற்க முடிந்திருக்கிறது. ஆனால் பேசும் மனிதனால் ஒன்றைக் கற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினமாகவே இருக்கிறது. ஒரு விஷயத்தை உள்வாங்குகிற அதே சமயத்தில் மனம் வெளிச்சென்று வேறு விஷயங்களை நாடுகிறது. மனத்தை ஒருநிலைப்படுத்துவது மனிதனிடம் குறைவாகவே உள்ளது. 

மனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டுமானால் எண்ணச் சிதறல்களின் எண்ணிக்கையைக் குறைப்பது நலம் பயக்கும். எனவே மனிதனை விட மிருகங்களுக்கு எளிதில் கற்றுக்கொடுக்கமுடியும் என்பதை இந்த நிபுணர் நிரூபித்திருக்கிறார். 


ஒரு மிருகத்தை மனிதனாக்க எடுத்துக் கொள்கிற முயற்சியைப் போன்றே, ஒவ்வொரு மனிதனும் தன்னிலிருந்து உயர்ந்து தெய்வமாகிற முயற்சியை 
மேற்கொள்ள வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. ஒரு மனிதக் குரங்குக்கு தற்காப்புக் கலையைப் பழக்கி அதில் வெற்றி கண்ட மனிதன் தன் மனக்குரங்கைப் பழக்கித் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா.......?


                   

ன் மனம் தேவையில்லாததை எல்லாம் நினைக்கிறது. என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? தியானம் பழக வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்களே..?

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? கெட்ட விஷயங்களை நினைக்கக் கூடாது, மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகவாதிகள் ‌என்று சொல்லப்படுபவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

 ஆனால் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கும். உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில் வகுத்தல், கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஓர் எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? 

முடியவே முடியாது. இல்லையா? ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதைப் பற்றியேதான் நினைப்பீர்கள். மனதின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் தவறாக முயறசித்துக் கொண்டு இருக்கிறோம்.

தியானம் செய்யும் போது என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்று எப்போதாவது எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தன் செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவை தத்தம் செயலைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள் தானே? பிறக மனமும் தனது வேலையைச் செய்ய நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? உங்களால் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. இதுவரை யாராவது தன் மனதைக் கட்டுப்படத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படிச் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப் பின் இத்தகைய மனம் .உங்களுக்குக் கிடைத்திருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கிறீர்கள்? 

அது முழுத் தீவிரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்குத் துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டத.

உங்களின் எல்லாத் துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? மனதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியாததால்தான் அங்கிருந்து துன்பங்கள் உற்பத்தியாகின்றன. 
இதே மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்து விட்டால் பிறகு மனதைக் கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள்! எனவே உங்கள் மனதை எப்படிச் சரியாக இயக்க வேண்டும் என்பதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றைக கடைப்பிடித்தால் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கி விட்டால் பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.

Tuesday, March 4, 2014

விந்துப் பரிசோதனை....... மேற்கொள்வது எப்படி?



பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.
குழந்தைப் பிறப்பு என்பது கணவன் - மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.
பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:
இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.
குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 

பரிசோதிக்கப்படுபவை............

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்
2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. 

சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.
விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.
விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். 
இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.
நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும். 

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
 காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.
அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்

கரிசலாங்கண்ணி ,,,,,,,,,,,,,,,,,,,,,!


கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
மஞ்சள் காமாலைக்கு:
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
மகோதர வியாதிக்கு:
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.
மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.
ஆஸ்துமா குணமாக:
கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:
கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.
பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.
குழந்தைகளின் சளி நீங்க:
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
கரிசலாங்கண்ணித்தைலம்:
கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:
இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.
கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.
தலைமுடி நன்கு வளர:
கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.
கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.
தலைப்பொடுகு நீங்க:
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.
பல் உறுதிக்கு!
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.
பித்தத்தைலம் :
கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.
நரை நீக்கும் தைலம்:
புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.
நாள்பட்ட புண் ஆற…
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

:
மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை. 
ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது.
மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது. இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உணவிலும் இல்லை உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும் உதவுகிறது.
ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால் இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 சதவீதம் வரை குறைக்கலாம். 
2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத் தேவைப்படுமங சத்து போதிய விகிதம் கிடைக்கும்.
ஆஸ்துமா நோய் வரவே வராது. அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்பே இல்லை.
மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

நரை முடியை முற்‌றிலும் ஒழிக்கும்...... கறிவேப்‌பிலை

நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.
தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும்.
ஆர‌ஞ்சு பழசாறை ‌ஃ‌பீ‌ரிஸ‌ரி‌ல் வை‌த்து அதனை வெ‌ள்ளை‌த் து‌ணி‌யி‌ல் க‌ட்டி க‌ண்ணு‌க்கு மே‌ல் வை‌‌த்த‌ல் ந‌ல்லது.
தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌யை சூடு செ‌ய்து அ‌தி‌ல் ‌ஓம‌த்தை‌ப் போ‌‌ட்டு அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தீரும்.
துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் ‌பி‌த்த வெடி‌ப்பு குறையு‌ம்.
குளிர் காலத்தில் பாதங்களில் சீரக எண்ணெயை கொதிக்க வைத்து தடவி வரலாம்.
மு‌ல்தா‌னிமெ‌ட்டியை த‌ண்‌ணீ‌ரி‌ல் குழை‌த்து முக‌த்‌‌தி‌ல் தட‌வி வர முக‌ம் மல‌ர்‌ச்‌சியடையு‌‌ம்.
உ‌ங்க‌ள் ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற நக‌ப் பூ‌ச்சுகளை ம‌ட்டு‌ம் பூசு‌ங்க‌ள். அழகாக இரு‌க்கும்.
மாத‌த்‌தி‌ல் ஒரு வாரமாவது நக‌ங்களை பூ‌ச்சு‌க்க‌ள் இ‌ல்லாம‌ல் வையு‌ங்க‌ள்.
முடி‌யி‌ன் நு‌‌னி‌யி‌ல் வெடி‌ப்புக‌ள் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க முடியை‌ எ‌ப்போது‌ம் க‌ட்டியே வையு‌ங்க‌ள்.
க‌ண்களு‌க்கு எ‌ந்த ‌வித அல‌ங்கார‌ம் செ‌ய்தாலு‌ம் உற‌ங்கு‌ம் போது ந‌ன்கு கழு‌வி ‌விடவு‌ம்.
முட்டையின் வெள்ளைப் பகு‌தியை மட்டும் தலையில் தேய்‌த்துக் குளித்தால் முடி மிருதுவாக இருக்கும்.
Under request of DR. Pon Alvappillai (Ph.D) University of Jaffna i add this Article from
http://www.tamilcnnlk.com-----------Thank you----------------

Saturday, March 1, 2014

பீர் வைத்து குளித்தால்... தலை முடி பட்டு போல் வளருமாம் ஆய்வில் தகவல்

பெண்கள் பெரிதும் கவலைக் கொள்ளும் விஷயங்களில் முதலில் இருப்பது கூந்தல் தான். கவலை வந்தால் கூந்தல் உதிரும், அதேப்போல் கூந்தல் உதிர்ந்தால் மனக்கவலை வரும். இவ்வாறு கவலையும், கூந்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.
 அதிலும் பெண்களுக்கு அழகுத் தருவதில் முதலிடம் வகிப்பது கூந்தல் தான். அப்படிப்பட்ட கூந்தல் உதிர்ந்தால், பெண்கள் தங்களின் அழகில் ஏதோ ஒன்று குறைந்தது போல் வருத்தப்படுவர்.
 ஆனால் என்ன தான் உடலில் ஏதாவது குறைவு தோன்றினாலும், கூந்தலில் குறைவு எற்பட்டால், அது மொத்த அழகையே கெடுத்துவிடும். அந்த அளவு பெண்கள் கூந்தல் மீது ஆசை வைத்துள்ளனர். அத்தகைய கூந்தலை உதிராமல், வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே உதிர்தலைத் தடுக்கலாம்.

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் வழிகள்:
* சமையலில் பயன்படுத்தும் வெங்காயத்தை நன்கு அரைத்து ஜூஸ் பிழிந்து, அந்த சாற்றை சூடேற்றாமல், அப்படியே முடியின் வேர்ப்பகுதிகளில் தடவ வேண்டும்.
 முக்கியமாக இந்த சாற்றை தடவுவதற்கு முன், சூடான தண்ணீரில் நனைத்த துணியை அரை மணிநேரம் தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வெங்காயச் சாறு எளிதில் தலையில் இறங்கி கூந்தல் உதிர்வதைத் தடுக்கும்.
* பூண்டை நன்கு நசுக்கி அதிலிருந்து வரும் சாற்றை எடுத்து, கூந்தலின் வேர்ப் பகுதியில் படும்படி தேய்த்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்வது குறைந்து, கூந்தலும் நன்கு வளரும்.

* பீர் வைத்து கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம் என்று கூறியதும், பீரை வாங்கி அடித்துவிட்டு, பின்னர் கூந்தல் வளரவில்லை என்று கேட்க வேண்டாம். பீரை வைத்து பட்டுப்போன்று கூந்தலை வளர்க்கலாம்.
 அதற்கு வெங்காயச்சாற்றுடன், ஒரு கப் பீர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் போல் செய்து, கூந்தலில் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு சுத்தமான நீரால் அலச வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் உதிராமல், பட்டுப் போன்று வளரும்.

* குளிக்கும் போது ஷாம்புவை கப்பில் போட்டு, அதை பீரால் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, பட்டுப் போல் மின்னும்.

பீர் என்று சொன்னதும் ஆண்கள் பலர் இதை படித்துப் பார்த்திருப்பீர்கள். இந்த முறை பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். 
ஆகவே பீர் குடிக்கும் போது முற்றிலும் குடித்துவிடாமல், சிறிது கூந்தலுக்கு என்று வைத்து உபயோகித்தால், “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்” என்பது போல் தான்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...