Tuesday, January 9, 2018

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து  கொள்வோம். 
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம்  உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. 
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு  சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். 

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக  வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப்  போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும். 
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில்  ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல்  தடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும்
கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.


Wednesday, January 3, 2018

பாம்பு கடித்தால்....பதற வேண்டாம்


பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இலங்கையில்
 உள்ள நச்சு 

கடித்தது விஷப்பாம்புதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதை எப்படி கண்டறிவது? பாம்பு கடித்த இடத்தில், இரண்டு  பற்களின் அடையாளம் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்திருக்கும்; அந்த இடம் சற்று வீங்கி கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். இந்த அறிகுறி  இருந்தால், அது விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும். கடித்த இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பற்கள் வரிசையாக பதிந்து காணப்பட்டால், அந்த  அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.

முதலில் பாம்பு கடித்தவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல்  முழுக்க வேகமாக பரவிவிடும்.கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தை சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றை கட்ட வேண்டும். இறுக்கமாக கட்டாமல், இரண்டு  விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி கொடுத்து கட்டலாம். பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாக, மருத்துமனைகளில் `ஆன்டி-ஸ்நேக் விநோம்’  மருந்து தரப்படும். ரத்தம் உறையும் நேரத்தை கணக்கிட்டு எந்த வகை பாம்பு கடித்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம்
பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை. ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை. பாம்பு கடித்துவிட்டால்  பதறக்கூடாது. பாம்பு கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து  செல்லக்கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச்செல்ல வேண்டும்.

Monday, January 1, 2018

ஆஸ்டியோபொரோசிஸ்




சுவரின்றி சித்திரம் வரைய முடியாது இல்லையா? அப்படி மனிதனுக்கு சுவர் போன்றதுதான் எலும்பு அமைப்பு. பொதுவாக, பலமான விஷயங்களுக்கு எலும்புகளை உதாரணம் காட்டுவார்கள். எலும்பு அவ்வளவு உறுதியானது என அர்த்தம். ஆனால், ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டால் அதே எலும்பு ஸ்பான்ஞ் மாதிரி மென்மையாக மாறிவிடும்.  ஆஸ்டியோபொரோசிஸை எலும்பு வலுவிழப்பு நோய், எலும்புப் புரை நோய் என்றும் அழைக்கிறார்கள். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் தாக்குகிறது. காரணம், அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையத் தொடங்குவதுதான். அதேபோல தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரக்கும் பெண்களுக்கும் அதன் விளைவாக இந்தப் பிரச்னை தாக்குகிறது.

40 வயதைக் கடந்த பெண்கள் பலரிடம் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளைக் கேட்க முடிகிறது. அந்த அறிகுறிகளை சாதாரண பலவீனத்தின் அறிகுறிகளாக நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்துகிறார்கள். அது உடலுக்குள்ளேயே அமைதியாக வளர்ந்து ஒரு நாள் தீவிரமாகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் தீவிர நிலையை அடையும்போது இருமினாலோ, தும்மினாலோகூட எலும்புகள் உடையக்கூடும். சாதாரணமாக கால் தடுக்கினால்கூட எலும்புகள் உடையக்கூடும்.

ஆஸ்டியோபொரோசிஸ் என்றால் என்ன?எளிமையாகச் சொல்வதென்றால் எலும்புகள் வலுவிழக்கிற நிலை. அதாவது நம் உடலில் வைட்டமின் டியின் அளவானது 30 என்கிற அளவில் இருப்பதுதான் ஆரோக்கியமானது. அந்த அளவு குறையும்போதுதான் பிரச்னை. நம் உடலில் உள்ள எலும்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.

எலும்பிலுள்ள பழைய செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும். வயதாக ஆக இந்த புதுப்பித்தல் திறன் மந்தமாகும். அதனால் எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும். எலும்புகளின் அடர்த்தி குறைவதால் அவற்றில் துளைகள் விழுந்து எலும்புகள் இன்னும் பலமிழக்கும். அதனால்தான் அவை ஸ்பான்ஞ் போன்ற தன்மையை அடைகின்றன. இதைத்தான் ஆஸ்டியோபொரோசிஸ் அதாவது எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். ஆஸ்டியோபொரோசிஸ்  என்பது எந்த அறிகுறிகளையும் காட்டாமல் வருடக் கணக்கில் அமைதியாக வளர்ந்து ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஒரு பிரச்சினை. முதுகுவலி, எலும்பு உடைதல், உயரம் குறைதல், கூன் விழுந்த தோற்றம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

இரண்டு வகையான ஆஸ்டியோபொரோசிஸ் 
ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையில் Primary மற்றும் Secondary என இரண்டு வகைகள் உள்ளன. இதில் பிரைமரி ஆஸ்டியோபொரோசிஸ் என்பது இயல்பாக வயதாவதன் விளைவாக ஏற்படுவது. மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கும், 50 முதல் 70 வயதுக்காரர்களுக்கும் அதிகம் பாதிப்பது இந்த வகைதான். செகண்டரி

ஆஸ்டியோபொரோசிஸை அதிகரிக்கும் காரணிகள்
முதுமை, பெண் பாலினம், புகை மற்றும் குடிப்பழக்கம், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, கால்சியம் குறைவான உணவுப்பழக்கம், ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவது, குடும்பத்தில் வேறு யாருக்காவது ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு இருந்தால்...

எப்போது மருத்துவப் பரிசோதனை அவசியம்?
உங்கள் உடலில் ஏதோ ஒரு எலும்பு உடைந்துவிட்டதாக உணர்கிறீர்களா? உங்கள் உடலின் ஏதோ ஒரு பாகத்தை அசைக்க முடியாதபடி உணர்கிறீர்களா?
திடீரென உடலில் ஏதோ ஒரு இடத்தில் தாங்க முடியாத வலியை உணர்கிறீர்களா அல்லது உங்கள் உடலின் எடையைத் தாங்க முடியாதபடி சிரமமாக உணர்கிறீர்களா? உங்கள் கையோ அல்லது காலோ அதன் இயல்பான ஷேப்பில் இல்லாதது போல உணர்கிறீர்களா? இவையெல்லாம் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெ


ஆஸ்டியோபொரோசிஸ் என்பது சில உடல்நல பிரச்சினைகளின் விளைவால் அவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவால் ஏற்படுவது. சர்க்கரை நோய், தைராய்டு, கல்லீரல் நோய்கள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவால் ஏற்படுவது.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...