Sunday, June 26, 2016

பெண்களுக்கு தைராய்டுவால் ஏற்படும் பாதிப்புகள் #

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. 


 


அதில் ஒன்றுதான் தொடை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.
 
இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.
 
தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இப்படி உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம்!
 
அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.
 
பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கபட்டு, சங்கிலித்தொடர் நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கபடலாம். அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால்… மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
 
குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்

முடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள்..!

கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்று விடும்.


 
 
* முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக, நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
 
* சின்னவெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
 
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
 
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
 
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென தொடங்கும்.

Friday, June 24, 2016

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?



நுரையிரல் புற்றுநோய் தற்போது பெருகிவரும் ஆபத்தான ஒரு உயிர்கொல்லிநோயாக மாறியுள்ளது.
இது பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு வருகின்றதென கருதப்பட்டாலும் ,சிகரெட் பிடிக்கும் பழக்கமற்றவர்களுக்கும் வரலாம்.

நுரையிரல் புற்றுநோயின்போது நோய் அறிகுறி இல்லாமலேயே 5 வீதமான நோயாளிகளுக்கு புற்றுநோய் உடலில் பரவலாம்.

அதாவது 100 வீதமான நுரையீரல் புற்றுநோயாளிகள் நோய் அறிகுறியை காட்டுவதில்லை.

41 வீதமானவர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக இருமல் காணப்படும்.

22 வீதமானவர்கள் நெஞ்சுவலியை ஆரம்ப அறிகுறியாக காட்டுவார்கள்.

15 வீதமான நோயாளிகள் நெஞ்சுவலியையும் இருமலையும் கொண்டிருப்பார்கள்.

மற்றும் 5வீதத்திற்கு குறைவானவர்கள் உடல்சோர்வு, உடல்எடைகுறைவடைதல், மூச்சுவிடக்கஸ்டப்படுதல் போன்ற அறிகுறிகளை காண்பிப்பர்.

5வீதமானோருக்கு ஆரம்பஅறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை.

ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதனை தட்டிக்கழிக்க முடியாது.

ஆரம்ப அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும்  எக்றே மூலம் கண்டுபிடிக்கமுடியும்.


ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் எக்றே மாற்றங்களையும் எதிர்பார்க்கமுடியும்.

Wednesday, June 15, 2016

பழங்களில் காணப்படும் மருத்துவக் குணங்களும், சத்துக்களும்....

மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.


பப்பாளி
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
அன்னாசி
அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. 
உடலில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

Monday, June 13, 2016

வகுப்பறையில் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் ?

முதலுதவி’ செய்பவர் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவருடன் இருந்து, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், முதலுதவி என்பது அந்த நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் முதலுதவி செய்ய முன்வர வேண்டும்.

வகுப்பறையில் எப்படி முதுலுதவி செய்வது?

1. எப்பொழுதும் வகுப்பறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆபத்தான பகுதிகள் இருப்பின் அதை கண்காணித்தவராக இருக்க வேண்டும்.

2. முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்.

3. சம்பவ இடத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்டவருக்கு பீதியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும்.

4. வகுப்பறையில் முதல் உதவி பெட்டி அமைந்திருக்கும் இடத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

5. பாதிக்கப்பட்டவரை யாரும் சூழ்ந்திருக்காதபடி கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இயற்கையின் காற்று அவருக்கு கிடைக்கும்.

Sunday, June 5, 2016

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?

Bad things happen to children is important kutalpulu nuisance. About 200 million people around the world suffer from intestinal worms. In India alone, 22 million a year under the age of 12


குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர்  குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22கோடி  குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. 
சுயசுத்தமும் சுற்றுப்புற சுகாதாரமும் குறைவதால்  இது உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல...  பெரியவர்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் இளைய வயதினருக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

காரணங்கள் 


அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களை திறந்தவெளிக்  கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண்தரையில்,  தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல்  நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவி சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்
புழுத் தொல்லை ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் தின்னும் பழக்கம் இருந்தால் குடலில்  புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவி சுத்தம் செய்யத் தவறினாலும்  குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.புழுக்கள் வளரும் விதம் குடல்புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல்  புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு. பெண்  புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்.

குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் அவை புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல்  உணவைச் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’க்கள் எனும் குறும்புழுக்கள்  வெளிவரும். ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவற்றைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் 4  நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து  உணவுக்குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாக குடலுக்கு வந்து சேரும். இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள்  ஆகும். அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழுப் புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை  கொடுக்கத் தொடங்கும்.

உருண்டைப் புழு


குடல்புழுக்களில் பரவலாக நம்மைப் பாதிப்பது ‘உருண்டை புழுக்கள்’ (Round worms). பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் ஒரு  சரடு மாதிரி இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு 20 புழுக்களிலிருந்து 100 புழுக்கள் வரை இருக்கலாம். ஓர் ஆண் புழுவின்  நீளம் 10 - 20 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 30 - 40 செ.மீ. ஒரு பெண்புழு ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம்  முட்டைகளை இடும். ஒரு புழுவானது ஒரு வருடம் வரை நம் குடலில் வாழும்.

உருண்டைப் புழுக்கள் குடலில் இருந்தால் அந்த நபருக்கு அடிக்கடி வயிற்றில் வலி வரும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது.  குமட்டல் வரும். உணவு செரிமானம் குறையும். உடல் மெலியும். எடை குறையும். இந்தப் புழுக்கள் புரதச் சத்தை விரும்பிச்  சாப்பிடுவதால், இந்த நபர்களுக்குப் புரதச் சத்துக் குறைவு நோய் (Protein Malnutrition) ஏற்படும். இந்தப் புழுக்
களின் உடலிலிருந்து ஒருவித நச்சுப்பொருள் சுரக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக,  சருமத்தில் அரிப்பு, சிவந்த தடிப்புகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படும். இளைப்பு ஏற்படலாம். இந்தப் புழுக்கள்  அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டால் ஒரு பந்துபோல் திரண்டு குடலை அடைத்துக்கொள்ளும். அப்போது அறுவை  சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உருண்டைப் புழுக்கள் சாப்பிட்டுவிடுவதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்  குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் வளர்ச்சிக் குறைவும் மனவளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன.
கொக்கிப் புழு அமைப்பில் உருண்டைப் புழுக்களைப்போலவே இருக்கிற ‘கொக்கிப் புழுக்கள்’ (Hook worms) அளவில் மட்டும்  மிகச்சிறியவை.

இவற்றின் லார்வாக்கள் மனிதப் பாதத்தின் சருமத்தைத் துளைத்துக் கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச்  சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாக குடலுக்கு வந்து முழு புழுக்களாக உருமாறுவதுண்டு. ஓர் ஆண்  புழு 8 மி.மீ நீளமிருக்கும்.  பெண் புழு 12.5 மி.மீ. நீளமிருக்கும். இவற்றின் அகலம் அதிகபட்சமாக 5 மி.மீ. இருக்கும். இவை  மூன்று ஆண்டுகளுக்கு மேல் நம் குடலில் உயிர் வாழும்.

இவற்றின் வாய்ப்பகுதி கொக்கிபோல் வளைந்திருக்கும். அதில் நான்கு சூரப்பற்கள் இருக்கும். குடல் சுவற்றில் கொக்கி கோர்த்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். குடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும். இத்தோடு புழுக்கள் கடித்த குடல்  பகுதியிலிருந்து ரத்தம் தொடர்ந்து கசியும். இவ்வாறாக குடலிலிருந்து ரத்தம் வெளியேறுவதால், கொக்கிப்புழுவால் பாதிக்கப்பட்ட  நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ‘ரத்தசோகை நோய்’ (Anaemia) ஏற்படுவதுதான் முக்கியமான பாதிப்பு.

ஒரு கொக்கிப் புழுவானது நாளொன்றுக்கு 0.2 மி.லி. ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவரின் குடலில் ஒரே நேரத்தில் ஆயிரம்  புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு. அப்படியானால் இந்தப் புழுக்கள் தினமும் எவ்வளவு ரத்தத்தைக் குடித்து நம்மை  பாதிக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். நடைமுறையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு,  சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்பவர்களுக்குக் கொக்கிப் புழு பாதிப்பு மிக அதிகம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ரத்தசோகை நோய் ஏற்பட முக்கியக் காரணம் கொக்கிப்புழு தொல்லைதான்.  குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படும்போது நினைவாற்றல் குறைகிறது. கல்வித்திறன், சிந்தனைத்திறன் என ஒட்டுமொத்த  செயல்திறனும் பாதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு இது ஏற்படும்போது தாயையும் சேயையும் பாதிக்கிறது. கொக்கிப்புழு  லார்வாக்கள் பாதங்களைத் துளைத்து உடலுக்குள் நுழைகின்றன. அப்போது பாதங்களில் அழற்சி, அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம்.  ஒருவருக்குப் படை எதுவுமில்லாமல் பாதங்களில் அரிப்பு ஏற்பட்டால் கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நூல் புழு குடல்புழுக்களில் மிகச் சிறியவை ‘நூல் புழுக்கள்’ (Thread  worms). பார்ப்பதற்கு வெட்டிப்போட்ட பருத்தி  நூல்போல் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஓர் ஆண் புழுவின் நீளம் 2 லிருந்து 4 மி.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 8லிருந்து 12  மி.மீ. இவற்றின் தடிமன் 0.1 லிருந்து 0.5 மி.மீ.பொதுவாக இப்புழுக்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும். மற்ற புழுக்கள்  எல்லாம் குடலில்தான் முட்டை இடும். இவை மட்டும் மனிதனின் மல வாயில் முட்டை இடுகின்றன. இதனால் அங்கு அரிப்பு  ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்புதான் இந்தப் புழுக்களால் ஏற்படுகிற பெருந்தொல்லை. இதன் விளைவால் பலருக்கும்  இரவில் தூக்கம் கெடும். நூல் புழுக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியத்துக்கு அதிகமாகக் கெடுதல் தருவதில்லை.

சாட்டைப் புழு பார்ப்பதற்கு சாட்டையைப்போல ஒரு முனை தடித்தும் மறுமுனை ஒல்லியாக நீண்டும் இருப்பதால் இப்புழுவுக்குச்  ‘சாட்டைப்புழு’ (Whip worm) என்று பெயர். ஓர் ஆண் புழுவின் நீளம் 3 லிருந்து 4 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 4  லிருந்து 5 செ.மீ. குழந்தை இரவில் திடீரென்று உறக்கத்தில் எழுந்து அழுதால் அல்லது வயிற்றுவலி என்று சொன்னால்  சாட்டைப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படும். பசியே  இருக்காது. சாப்பிடமாட்டார்கள். எடை குறையும். உடல் மெலியும், இவர்கள் ஒல்லியாகவும் செயலில் மந்தமாகவும் இருப்பார்கள்.

நாடா புழு ஒரு பாவாடை நாடாவைப்போல வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கிற புழுக்களுக்கு ‘நாடா புழுக்கள்’ (Tape  worms). என்று பெயர். இவற்றைத் தொட்டுப் பார்த்தால் தட்டையாக இருக்கும். இதனால்  ‘தட்டைப் புழுக்கள்’ என்றொரு  பெயரும் உண்டு. இவற்றில் பல வகைகள் உள்ளன. முக்கியமானவை மாட்டிறைச்சி நாடா புழு (Beef Tape worm), பன்றி  இறைச்சி நாடா புழு (Pork Tape worm). மீன் இறைச்சி நாடா புழு (Fish Tape worm), நாய் நாடா புழு  (Echinococcus granulosus). ஒவ்வொரு புழுவும் ஒரு ரிப்பன் மாதிரி 5 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை நீளமாக  இருக்கும். ஒருவருக்கு ஒன்றிரண்டு புழுக்கள்தான் இருக்கும்.

ஆனால், 15 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.சாதாரணமாக எல்லோருக்கும் இந்தப் புழுக்கள் தொற்றுவதில்லை. மாட்டு
இறைச்சி / பன்றி இறைச்சி / மீன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் மற்றும் நாயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்  ஆகியோருக்கு மட்டுமே இவை தொற்றுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில் இந்தப் புழுக்களின் லார்வாக்கள் வசிப்பதே  இதற்குக் காரணம். வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் இதனால் வரலாம். மேலும் கல்லீரல்,  நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் ‘நீர்க் கட்டிகள்’ (Hydatid cysts) வளர்வதும் உண்டு. இது குழந்தைகளுக்கு  அவ்வளவாக தொற்றுவதில்லை. பெரும்பாலும் பெரியவர்களுக்கு தொற்றுவதே நடைமுறை.

பரிசோதனை என்ன?


பெரும்பாலான குடல் புழுக்களை நோயாளிக்கு மலப்பரிசோதனை செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மலத்தில் குடல்  புழுக்களின் முட்டைகள் வெளிவருவதைக் கண்டறிந்து, எந்தப் புழுவின் முட்டை, எந்தக் குடல்புழு நோய் எனக் கணிக்கப்படுகிறது.  மேலும் குடல் புழுக்களின் லார்வாக்கள் நுரையீரலுக்குள் பயணம் செய்யும்போது ரத்தத்தில்  இயோசினோபில்’ அணுக்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையை வைத்து மறைமுகமாக குடல்புழு தொல்லையைக் கணிப்பதும் உண்டு.

நாடா புழுக்களைக் கண்டறிய, பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட தசைகளின் திசுக்கள் ஆய்வு செய்யப்படும். அதன் மூலம்  நாடாபுழு பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். நாடா புழுக்களின் பாதிப்பு இருப்பவர்களுக்கு மலத்தில் வெள்ளை நிறத்தில்  வெட்டிப்போட்ட ரிப்பன் மாதிரி இவற்றின் உடற்பகுதிகள் வெளியேறும். இவற்றைப் பரிசோதித்தும் இந்தப் புழுக்களை உறுதி  செய்யலாம்.

சிகிச்சை என்ன? 


குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள்  கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மருத்துவர்  யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். இந்த மருந்துகளில் நாடா புழுக்கள் தவிர  மற்ற புழுக்களுக்கு ‘அல்பென்டசோல’ மாத்திரை அல்லது மருந்து முக்கியமாகத் தரப்படுவதுண்டு. நாடா புழுக்களுக்கு  ‘நிக்லோசமைடு’ மாத்திரைகள் தரப்படுவதுண்டு. அதே வேளையில் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல்  புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது.

தவிர்க்க என்ன வழி?


சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட வேண்டும்.குளியலறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும்  சுத்தமாக வைத்திருங்கள்.திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக்கூடாது.கழிப்பறைக்குச்  சென்றுவந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப்  பழக்கப்படுத்துங்கள், சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது.

சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.நகங்களை பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.  குழந்தைகள் விரல் சூப்பக்கூடாது. குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற  வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை  அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக்கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளை குடிநீருக்கோ, உணவுக்கோ  கொண்டுவருவதற்கு ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாது.

காய்கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு  தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். நன்றாகக்  கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.  பாதுகாக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும்.
  
சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம். காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல  வேண்டும் அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பித்தவெடிப்பு, சேற்றுப்புண்  இருந்தால் உடனே  சிகிச்சை பெற்றுவிட வேண்டும். தரமான கடைகளில் மட்டுமே  இறைச்சிகளை வாங்க வேண்டும். மீன், இறைச்சி  போன்றவற்றை நன்றாக வேகவைத்தபின் சாப்பிட வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கிக்  கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். 

Thank you Dhinakaran News Paper

இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணெய்

Bantam uppilla nodded in the trash. Likewise, the oil does not hold water without any traces. That's why we are using too much oil. From Sesame shatters

VIDEO : Diet to control your cholesterol
Diet to control your cholesterol
Diet to control your cholesterol
உப்பில்லா பண்டம் குப்பையில் என்பார்கள். அதுபோல தான் எண்ணெய் இல்லாமல் எந்த சமையலும் எடுபடாது. அதனால் தான் நாம் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப்பொருளாகவும், மருந்துபொருளாகவும் பயன்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள், அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகறது. உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. நல்லெண்ணெய்யை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று தாராளமாக சொல்லலாம்.
 அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்கு காரணம். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, விழிகளுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது.

கண்நோய், தலைக்கொதிப்பு, சொரி சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது. நல்லெண்ணெயை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.
 நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் கண் சிவப்பு, கண் வலி, கண்களில் நீர் வடிதல் மண்டைக்குத்தல், போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Friday, June 3, 2016

கர்ப்பிணிகளுக்கு மசக்கை


கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக மூன்று மாதங்களுக்கு மேலும் கூட நீடிப்பது உண்டு.


மிகவும் பிடித்த உணவு பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத உணவுப் பொருட்களின் மீதான ஆசைகளும் மசக்கையின் அறிகுறிகள். நாம் சாப்பிடும் சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி வருவது போன்ற உணர்வு, சமைக்கும் போது வரும் வாசனையை நுகர்ந்தாலே வாந்தி வருவது, சாதம் கொதிக்கும்போது வரும் வாசனை பிடிக்காமல் போவது‌ம் மச‌க்கைதா‌ன். 

பசிக்கும் ஆனால் சாப்பிட உட்கார்ந்தால் வாந்தி எடுப்பதா அல்லது சாப்பிடுவதா என்ற குழப்ப நிலையை உருவாக்கும். உடலுக்கு நல்லதல்ல என்று ஒதுக்கும் பொருட்களின் மீது அதிக விருப்பமும் இந்த சமயங்களில் ஏற்படுவது உண்டு.
ஒரு சிலருக்கு இந்த மசக்கை மூன்றாம் மாத துவக்கம் வரையில் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு 5 மாதம் வரையிலும் கூட இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதாவது காலையில் பல் துலக்கும்போது வாந்தி எடுப்பது, வாந்தி வருகிறது என்று எண்ணி எண்ணி சாப்பிடாமலேயே இருப்பது போன்றவை அல்சரை உண்டாக்கிவிடும். எனவே எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். திரவ உணவாகவோ, பழம், காய்கறிகள் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம்.
பலருக்கும் இரவு நேரங்களில் அதிகமாக பசிக்கும். அந்த சமயத்தில் சாப்பிடுவதற்கு என சில பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சமைத்த உணவுப் பொருட்கள் அல்ல.. பிஸ்கட், பழம், பால் போன்றவற்றை.
வாந்தி வரும் என்ற உணர்வை விட... உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் கரு‌வி‌ற்கு‌ம் சே‌ர்‌த்து சாப்பிட வேண்டும் என்ற எ‌ண்ண‌த்தை அதிகமாக நினை‌‌வி‌ல் கொள்ளுங்கள்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...