Sunday, February 1, 2015

தேங்காய் எண்ணெயில் உள்ள நன்மைகள்..
News
பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கும் இயற்கையான வீட்டு சிகிச்சையில் ஒன்றாக தேங்காய் எண்ணெய் விளங்குகிறது. புண்களை ஆற வைப்பது முதல் சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது வரை இதன் பயன்கள் மிக நீண்டதாகும்.சந்தையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற எதிர்வினைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
இயற்கையான வடிவில் உள்ள தேங்காய் எண்ணெய், பல்வேறு சரும பிரச்சனைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வீட்டு சிகிச்சையாக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை அருந்தவும் செய்யலாம் அல்லது உடலின் மீது தடவியும் பயன்படுத்தலாம். அதனை உட்கொள்ளும் போது, ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுவதோடு, பயன்படக்கூடிய ஆற்றலையும் அளிக்கும்.
 தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் சில நன்மைகள் :
தேங்காய் எண்ணெயின் வீட்டு சிகிச்சைகளில் மௌத் ஃப்ரெஷ்னரும் ஒன்றாகும். இதனை புரிய தேங்காய் எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் உதவிடும்.
இதனை மேக்-அப்பை களைப்பதற்கும் பயன்படுத்தலாம். முகத்தில் போட்டிருக்கும் மேக்-அப்பை நொடிப்பொழுதில், எந்த ஒரு பாதிப்பும் இன்றி நீக்க இது உதவும்.
குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வறண்ட சருமத்திற்கு, குறிப்பாக முழங்கைகள் மற்றும் மூட்டுகள்.
மேல்தோல் உரிக்கப்படும் போது அதனை ஆற வைக்க இது உதவும். மேனிக்யூர் செய்த நகங்களில் பயன்படுத்தினால் அது நீடித்து நிலைக்கும்.
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டால் வலி மிகுந்ததாக இருக்கும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய்.
பிரசவத்திற்கும் முன்பும் பின்பும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் போது கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் உருவாகாமல் தடுக்கும்.
இதில் பல வித மருத்துவ தன்மைகள் உள்ளதால், முகத்தில் உள்ள சருமத்தில் மிகவும் மென்மையானதாக விளங்கும் கண்களுக்கு கீழான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி(fungal killing..Special Candida Species) குணங்கள் உள்ளதால், உங்களுக்கு சில தொற்றுக்கள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
காயங்கள் மற்றும் வெட்டுப் புண்களுக்கும் இது கிருமிநாசினியாக செயல்படும்.
வறண்ட தலைச்சருமத்தால் ஏற்படுவது தான் பொடுகு. அதற்கு தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்திடுங்கள்.
மூட்டைப் பூச்சி கடிகள் மற்றும் பல விதமான அரிப்புகள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக விளங்கும். இது கிருமிநாசினியாக செயல்பட்டு, மூட்டு கடிகளும் நிவாரணம் அளிக்கும்.
சுருக்கங்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வை அளிக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும். அதனால் இரவு நேர கிரீம்மாக இதனைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மசாஜ் செய்தால், முடி வளர்ச்சி மேம்படும். மேலும் முடி கொட்டுவதையும் இது தடுக்கும்.

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...