Saturday, February 22, 2014

அரசமரத்தின்................. மருத்துவ பயன்கள்!

அரசமரத்தின் இலை கொழுந்தை அரைத்து மோருடன் கரைந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.
அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

இதன் பட்டையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துக் குடித்துவர இருமல் தணியும்.
அரசம்பட்டைத் தூளில் 10-15 கிராம் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்துவர சொறி, சிரங்குகள் குணமாகும்.
அரசமரக் குச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதில் தேன் சேர்த்துக் குடிக்க பித்தம் தணியும்.
கலப்பட குங்குமம் இடுவதால் நெற்றியில் தோல் நீல நிறமாக மாறுவதுடன் அந்த இடத்தில் அரிப்பும் ஏற்படும். இதற்கு அரச மரத்தின் பட்டையை நீரில் கரைத்து. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் போட்டு வந்தால், பாதிப்பினால் ஏற்பட்ட நீல நிறம் மாறி, பழைய ஒரிஜனல் நிறம் கிடைக்கும்.
அரச மரத்தைக் குத்துவதால் வடியும் பாலைக் காலில் உள்ள பித்த வெடிப்புகள் மீது தொடர்ந்து தடவி வந்தால் அது விரைவில் குணமாகும்.

Friday, February 21, 2014

நெல்லிக்கனி மரணத்தை..............





மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி அனைவருக்குமே  நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.
5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.
7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.
8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

என்றும் இளமையுடன் இருக்க............... Vitamin "E"

என்றும் இளமையோடு இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்றாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை. எனினும், குறைந்தபட்சம் விரைவில் உடல் முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம். அவ்வகையில் எளிமையான சில உணவுகளை வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எவ்வாறு முதுமையை தள்ளிப்போடலாம் என்பதை காண்போம்.
பாதாம்
பாதாம் பருப்பில் முதுமையை தடுக்கும் வைட்டமின் “ஈ” அதிக அளவில் அடங்கியுள்ளது. ஆரோக்கியமான மேனி,தலைமுடி மற்றும் நகங்களை அளிப்பதில் பாதாமின் பங்களிப்பு அபாரமானது என்கிறார்கள் டயட்டீசியன்களும்,அழகு கலை நிபுணர்களும்.
பாதாமில் உள்ள வைட்டமின் “ஈ”, சூரியனின் புற ஊதா கதிர்கள்,காற்று மாசு போன்றவற்றால் நோய் எதிர்ப்பு அணுக்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. நாளொன்றுக்கு 12 பாதாம் பருப்புகளை ஒருவர் உண்ணலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
அக்ரூட் பருப்பு
வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் “ஈ” சத்து நிறைந்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் அது உங்களது மேனியை மிளிர வைக்கும்.
வெள்ளரிக்காய்
பாதாம், அக்ரூட் பருப்புகளெல்லாம் நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்து வராது என்று நினைப்பவர்கள் சல்லிசான விலையில் கிடைக்கும் வெள்ளரிக்காயை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். நீர் சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் நமது மேனியை பட்டுபோல் மென்மையாகவும்,மினு மினுப்பாகவும் வைத்துக்கொள்ள அபார பங்களிப்பை செய்கிறது.
வெண்ணெய்
உடல் முதுமை அடைவதை தடுக்கும் உணவு வகைகளில் வெண்ணெயும் ஒன்று.சோர்வை போக்கி, தோல் வறண்டு போவதை தடுத்து,மேனியை பளபளக்க வைக்கிறது.
கற்றாழை
கற்றாழையில் பல வகை உண்டென்றாலும், வீடுகளில் வளர்க்கப்படும் சோத்து கற்றாழை ஜூஸை தினமும் அருந்தி வந்தால், என்றும் இளமையாக தோற்றமளிப்பது சர்வ நிச்சயம். வைட்டமின் ஈ,சி மற்றும் கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன.
முதுமையை தடுக்கும் இந்த சோத்துக்கற்றாழையின் மடலில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது. சற்று கூடுதலான கசப்பு சுவை கொண்ட இந்த மடலை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், 35 வயது பெண்ணை கூட,”எக்ஸ்கியூஸ் மீ… நீங்க எந்த காலேஜ்ல் படிக்கிறீங்க?” என்று கேட்பார்கள்.
இளமை தோற்றத்தை கொடுப்பது மட்டுமல்ல, உடல் பருமனை தடுக்கும் விதமாக கொழுப்பை கரைத்து, இருதயத்தையும் பாதுகாக்கிறது.மடலை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், இதனை சுமார் 30 மி.லி. அளவுக்கு ஜூஸ் எடுத்து, அதனுடன் 100 மி.லி. தண்ணீரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்திவிட்டு, 30 நிமிடங்கள் கழித்து வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
எள்
மளிகை கடைகளில் மிக சாதாரணமாக கிடைக்கும் இந்த எள்ளை பலவிதமாக உணவில் சேர்த்துக்கொள்வார்கள். இதிலும் வைட்டமின் “ஈ” சத்துக்கள் நிறைந்துள்ளதால், மேற்கூறிய பலன்களெல்லாம் இதிலும் அடங்கியுள்ளது.
பெர்ரி
பெர்ரி பழங்களில் உடலில் செல்களை புதுப்பிக்கும் ஆண்டியாக்ஸிடண்ட் அதிக அளவில் உள்ளது. நாளொன்றுக்கு ஒருவர் ஒன்று அல்லது இரண்டு கப் செர்ரி பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.
கிரீன் டீ:
கிரீன் டீயின் நன்மை குறித்து நாம் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டோம்.இதிலும் ஆண்டியாக்ஸிடண்ட் மட்டுமல்லாது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பது வரை பல அற்புதங்கள் அடங்கியுள்ளது.
தண்ணீர்:
நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது சருமம் வறண்டு போகாமல் தடுக்கும்.
மேற்கண்ட உணவு பட்டியல் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றக்கூடியவை என்பதால்,கொஞ்சம் நேரம் ஒதுக்கி இவற்றை உண்டு வந்தால் முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்காது!

குழந்தை பிறக்கும் வாய்ப்பை குறைக்கும் காபி..........!





தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது என்று ஒன்று தெரிவித்துள்ளது.
காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும்.
இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.
காபியில் உள்ள காஃப்பைன் பெண்களின் முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.
கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம். 
காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.
தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது.
 புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன. காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

காபி அருந்துவதால் வரும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் அது எலும்புகளின் வலிமையைக் குறைக்கின்றது என்பதாகும். எலும்புகள் வலுவிழப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது. 
குறிப்பாக இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பெண்களை அதிகம் தாக்கும் என்பது கவனிக்கத் தக்கது.
ஒரு சாதாரண நபருடைய லிவர் நூறு மில்லி காஃபைனை வெளியேற்ற இருபத்து நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நூறு மில்லி காஃபைன் என்பது எவ்வளவு ? 
ஒரு கப் காபியில் சுமார் 75 முதல் 200 மில்லி காஃபைன் இருக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
காபி பிரியர்களை அமைதிப்படுத்த, தினமும் முன்னூறு மில்லிகிராம் காபி என்பது ஆரோக்கியத்துக்கு அதிக ஊறு விளைவிக்காது என்று அறிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

உடல் ஆரோக்கியத்துக்கு......... சிறந்த எண்ணெய் குளியல்!

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இது காலம் காலமாக நடைப்பெறும் வழக்கம். ஆனால் இதை வருடத்துக்கு ஒரு முறை தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றில்லை. வாரம் ஒரு முறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம் என்கிறார் தேனாம்பேட்டையில் உள்ள கெவின் கேர் நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் லட்சுமி தியாகராஜன். இதோ அவரது ஆலோசனை…
குழந்தை பருவத்தில் அம்மா தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாங்க. ஆனால் வளர்ந்த பிறகு நாம் அதை மறந்து விடுகிறோம். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்கு மட்டும் இல்லாமல் தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெயில் கொழுப்பு சத்துள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். நம் சருமத்தில் சின்ன துவாரங்கள் உள்ளன. எண்ணெயை தலை மற்றும் உடலில் தடவும் போது இவை சருமம் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகாமல் பளபளவென்று இருக்கும்.
ஆனால் சிலர் தலையில் எண்ணெய் வைப்பதால், தங்களின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதாக கருதுகின்றனர். இதனால் அவர்கள் தலையில் எண்ணெய் வைப்பதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் தலையில் எண்ணெய் வைக்காமல் இருந்தால், நாளடைவில் முடி வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு, முடி கொட்டுதல் போன்ற பிரச்னை ஏற்படும். தினமும் காலை எழுந்தவுடன் சிறிது எண்ணெய் தலையில் வைப்பது அவசியம். இந்த அவசர யுகத்தில் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டு தலை குளிப்பது முடியாத காரியம்.
அதனால் ஷாம்பூவுக்கு மாறி விட்டனர். ஷாம்பு குளியலை விட சீயக்காய் குளியல் தான் சிறந்தது. அதனால் அந்த காலத்தில் தலைக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது வழக்கமாக இருந்தது.  சீயக்காய் பொடியில் எலுமிச்சை தோள், பச்சைபயிறு, வெந்தயம், செம்பருத்தி, துளசி, பூந்திக் கொட்டை போன்ற பல்வேறு மூலிகைகளை சேர்த்து அரைத்து அதை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
பொதுவாகவே சீயக்காய் குளியல் குளிக்கும் போது, தலையில் உள்ள எண்ணெய் அனைத்தும் போகாமல் இருக்கும். இது முடியை வறண்டு போகாமல் பாதுகாக்கும். மேலும் முடி பளபளவென்று இருக்கும். சீயக்காய் பொடியை பயன்படுத்துவதால், தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், இருக்கும். இது முடியை பாதுகாப்பது மட்டும் இல்லாமல், உடலின் சூட்டை தணிக்கும். கண் எரிச்சலை போக்கி குளிர்ச்சியாக வைக்கும்.
எல்லாவற்றையும் விட மூளையின் சூட்டை தனித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
எண்ணெய் வைத்து தலை குளிக்கும் போது நல்ல தூக்கம் வரும். நல்ல தூக்கம் ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம். இன்றை போட்டி நிறைந்த உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனஉளைச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். அதனை எண்ணெய் குளியல் போக்கும். எண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யும் போது, ரத்த ஓட்டம் சீராகும், இறந்து போன அணுக்கள் வெளியேறி, ஆரோக்கிய அணுக்கள் உறுவாகும், பொடுகு பிரச்னை இருக்காது, இளநரை தோன்றது. இவ்வாறு அவர் கூறினார்

தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைய,,,,, என்ன காரணம் தெரியுமா?

குழந்தை பிறப்புக்கு பின்னர் தாயார் ஆழ்ந்த கவலையில் இருந்தால் மிக அதிகமாக கோபம் கொள்ளுதல், சாப்பிடாமல் விரதம் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமல் இருப்பது, பிரசவத்துக்கு பின்னர் கடுமையாக உழைத்தல், குழந்தையின் இடத்தில் பற்று இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறையலாம் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டு உள்ளது.
குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காமல்  இருப்பது அல்லது மிகக் குறைந்த அளவு தாய்ப்பால் சுரப்பது போன்ற அறிகுறிகள் மூலம் இதை அறியலாம்.   இதற்கான கைப்பக்குவ மருந்துகள் விவரம் வருமாறு…..
• தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் பால் சேர்த்த கசாயத்தி உட்கொண்டு வர வேண்டும்.
• பருத்தி கொட்டை பால் குடித்து வரலாம்
• நாள்தோறும் பால் உட்கொள்வது
• சவுபாக்கிய சுண்டி லேகியத்தை ஒரு ஸ்பூன் அளவில் காலை, மாலை வேளைகளில் சாப்பிடுவது
• பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும வாய்ப்பு உண்டு. பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

சருமத்தை வெள்ளையாக்க உதவும்........... 13 உணவுகள்!




அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் நன்கு பொலிவாக இருக்கும். எனவே சருமம் வெள்ளையாக வேண்டுமென்பதற்காக கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒரு சில சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால், வெள்ளையாக மாறலாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
கரட்
கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.
பப்பாளி
பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் சரியாகிவிடும்.
தக்காளி
இந்த சிவப்பு நிற அழகான காய்கறியில் லைகோபைன் சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாவதோடு, உடல் எடை குறைந்து, புற்றுநோய் வருவதும் தடைபடும்.
கிவி
இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் வெண்மையான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், அதனை முகத்திற்கு தடவும் போது, கரும்புள்ளிகள், வெடிப்புகள் போன்றவை நீங்கிவிடும்.
பீட்ரூட்
இந்த காய்கறியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் இத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான கன்னங்களை பெறலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லையெனில் இதனை அரைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்காக போடலாம்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.
ஸ்ட்ராபெர்ரி
இந்த புளிப்பு சுவையான பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இதனை சாப்பிட்டால், இதன் நிறத்தை பெறலாம்.
சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு காய்கறிகளில் ஒன்றான சிவப்பு குடைமிளகாயில் லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
தேநீர்
தேநீர் வகைகளில் கிரீன் தேநீர்ல் சருமத்திற்கான நன்மைகள் பல அடங்கியுள்ளன. இதனை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள செல்கள் மென்மையாவதோடு, தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
மஞ்சள் நிற குடைமிளகாய்
இந்த வகையான குடைமிளகாயில் வைட்டமின் சி இருப்பதோடு, சிலிகா இருப்பதால், இவற்றை அதிகம் உணவில் சேர்க்கும் போது, சருமம் நன்கு பொலிவோடு மின்னும்.
சோயா பொருட்கள்
சோயா பொருட்களில் ஜிங்க் மற்றுட் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். உதாரணமாக, சோயா பால் முகப்பருவை சரிசெய்யும்.
ப்ராக்கோலி
இந்த சக்தி வாய்ந்த காய்கறியில் சருமத்தை வெள்ளையாக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், அவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது.
மீன்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வெள்ளையாகி, அழகாகிவிடும். அதுமட்டுமின்றி, இதனை சாப்பிடும் போது, சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தும்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...