Sunday, June 5, 2016

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?

Bad things happen to children is important kutalpulu nuisance. About 200 million people around the world suffer from intestinal worms. In India alone, 22 million a year under the age of 12


குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர்  குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22கோடி  குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. 
சுயசுத்தமும் சுற்றுப்புற சுகாதாரமும் குறைவதால்  இது உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல...  பெரியவர்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் இளைய வயதினருக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

காரணங்கள் 


அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களை திறந்தவெளிக்  கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண்தரையில்,  தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல்  நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவி சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்
புழுத் தொல்லை ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் தின்னும் பழக்கம் இருந்தால் குடலில்  புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவி சுத்தம் செய்யத் தவறினாலும்  குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.புழுக்கள் வளரும் விதம் குடல்புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல்  புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு. பெண்  புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்.

குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் அவை புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல்  உணவைச் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’க்கள் எனும் குறும்புழுக்கள்  வெளிவரும். ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவற்றைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் 4  நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து  உணவுக்குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாக குடலுக்கு வந்து சேரும். இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள்  ஆகும். அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழுப் புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை  கொடுக்கத் தொடங்கும்.

உருண்டைப் புழு


குடல்புழுக்களில் பரவலாக நம்மைப் பாதிப்பது ‘உருண்டை புழுக்கள்’ (Round worms). பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் ஒரு  சரடு மாதிரி இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு 20 புழுக்களிலிருந்து 100 புழுக்கள் வரை இருக்கலாம். ஓர் ஆண் புழுவின்  நீளம் 10 - 20 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 30 - 40 செ.மீ. ஒரு பெண்புழு ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம்  முட்டைகளை இடும். ஒரு புழுவானது ஒரு வருடம் வரை நம் குடலில் வாழும்.

உருண்டைப் புழுக்கள் குடலில் இருந்தால் அந்த நபருக்கு அடிக்கடி வயிற்றில் வலி வரும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது.  குமட்டல் வரும். உணவு செரிமானம் குறையும். உடல் மெலியும். எடை குறையும். இந்தப் புழுக்கள் புரதச் சத்தை விரும்பிச்  சாப்பிடுவதால், இந்த நபர்களுக்குப் புரதச் சத்துக் குறைவு நோய் (Protein Malnutrition) ஏற்படும். இந்தப் புழுக்
களின் உடலிலிருந்து ஒருவித நச்சுப்பொருள் சுரக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக,  சருமத்தில் அரிப்பு, சிவந்த தடிப்புகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படும். இளைப்பு ஏற்படலாம். இந்தப் புழுக்கள்  அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டால் ஒரு பந்துபோல் திரண்டு குடலை அடைத்துக்கொள்ளும். அப்போது அறுவை  சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உருண்டைப் புழுக்கள் சாப்பிட்டுவிடுவதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்  குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் வளர்ச்சிக் குறைவும் மனவளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன.
கொக்கிப் புழு அமைப்பில் உருண்டைப் புழுக்களைப்போலவே இருக்கிற ‘கொக்கிப் புழுக்கள்’ (Hook worms) அளவில் மட்டும்  மிகச்சிறியவை.

இவற்றின் லார்வாக்கள் மனிதப் பாதத்தின் சருமத்தைத் துளைத்துக் கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச்  சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாக குடலுக்கு வந்து முழு புழுக்களாக உருமாறுவதுண்டு. ஓர் ஆண்  புழு 8 மி.மீ நீளமிருக்கும்.  பெண் புழு 12.5 மி.மீ. நீளமிருக்கும். இவற்றின் அகலம் அதிகபட்சமாக 5 மி.மீ. இருக்கும். இவை  மூன்று ஆண்டுகளுக்கு மேல் நம் குடலில் உயிர் வாழும்.

இவற்றின் வாய்ப்பகுதி கொக்கிபோல் வளைந்திருக்கும். அதில் நான்கு சூரப்பற்கள் இருக்கும். குடல் சுவற்றில் கொக்கி கோர்த்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். குடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும். இத்தோடு புழுக்கள் கடித்த குடல்  பகுதியிலிருந்து ரத்தம் தொடர்ந்து கசியும். இவ்வாறாக குடலிலிருந்து ரத்தம் வெளியேறுவதால், கொக்கிப்புழுவால் பாதிக்கப்பட்ட  நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ‘ரத்தசோகை நோய்’ (Anaemia) ஏற்படுவதுதான் முக்கியமான பாதிப்பு.

ஒரு கொக்கிப் புழுவானது நாளொன்றுக்கு 0.2 மி.லி. ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவரின் குடலில் ஒரே நேரத்தில் ஆயிரம்  புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு. அப்படியானால் இந்தப் புழுக்கள் தினமும் எவ்வளவு ரத்தத்தைக் குடித்து நம்மை  பாதிக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். நடைமுறையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு,  சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்பவர்களுக்குக் கொக்கிப் புழு பாதிப்பு மிக அதிகம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ரத்தசோகை நோய் ஏற்பட முக்கியக் காரணம் கொக்கிப்புழு தொல்லைதான்.  குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படும்போது நினைவாற்றல் குறைகிறது. கல்வித்திறன், சிந்தனைத்திறன் என ஒட்டுமொத்த  செயல்திறனும் பாதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு இது ஏற்படும்போது தாயையும் சேயையும் பாதிக்கிறது. கொக்கிப்புழு  லார்வாக்கள் பாதங்களைத் துளைத்து உடலுக்குள் நுழைகின்றன. அப்போது பாதங்களில் அழற்சி, அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம்.  ஒருவருக்குப் படை எதுவுமில்லாமல் பாதங்களில் அரிப்பு ஏற்பட்டால் கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நூல் புழு குடல்புழுக்களில் மிகச் சிறியவை ‘நூல் புழுக்கள்’ (Thread  worms). பார்ப்பதற்கு வெட்டிப்போட்ட பருத்தி  நூல்போல் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஓர் ஆண் புழுவின் நீளம் 2 லிருந்து 4 மி.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 8லிருந்து 12  மி.மீ. இவற்றின் தடிமன் 0.1 லிருந்து 0.5 மி.மீ.பொதுவாக இப்புழுக்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும். மற்ற புழுக்கள்  எல்லாம் குடலில்தான் முட்டை இடும். இவை மட்டும் மனிதனின் மல வாயில் முட்டை இடுகின்றன. இதனால் அங்கு அரிப்பு  ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்புதான் இந்தப் புழுக்களால் ஏற்படுகிற பெருந்தொல்லை. இதன் விளைவால் பலருக்கும்  இரவில் தூக்கம் கெடும். நூல் புழுக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியத்துக்கு அதிகமாகக் கெடுதல் தருவதில்லை.

சாட்டைப் புழு பார்ப்பதற்கு சாட்டையைப்போல ஒரு முனை தடித்தும் மறுமுனை ஒல்லியாக நீண்டும் இருப்பதால் இப்புழுவுக்குச்  ‘சாட்டைப்புழு’ (Whip worm) என்று பெயர். ஓர் ஆண் புழுவின் நீளம் 3 லிருந்து 4 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 4  லிருந்து 5 செ.மீ. குழந்தை இரவில் திடீரென்று உறக்கத்தில் எழுந்து அழுதால் அல்லது வயிற்றுவலி என்று சொன்னால்  சாட்டைப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படும். பசியே  இருக்காது. சாப்பிடமாட்டார்கள். எடை குறையும். உடல் மெலியும், இவர்கள் ஒல்லியாகவும் செயலில் மந்தமாகவும் இருப்பார்கள்.

நாடா புழு ஒரு பாவாடை நாடாவைப்போல வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கிற புழுக்களுக்கு ‘நாடா புழுக்கள்’ (Tape  worms). என்று பெயர். இவற்றைத் தொட்டுப் பார்த்தால் தட்டையாக இருக்கும். இதனால்  ‘தட்டைப் புழுக்கள்’ என்றொரு  பெயரும் உண்டு. இவற்றில் பல வகைகள் உள்ளன. முக்கியமானவை மாட்டிறைச்சி நாடா புழு (Beef Tape worm), பன்றி  இறைச்சி நாடா புழு (Pork Tape worm). மீன் இறைச்சி நாடா புழு (Fish Tape worm), நாய் நாடா புழு  (Echinococcus granulosus). ஒவ்வொரு புழுவும் ஒரு ரிப்பன் மாதிரி 5 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை நீளமாக  இருக்கும். ஒருவருக்கு ஒன்றிரண்டு புழுக்கள்தான் இருக்கும்.

ஆனால், 15 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.சாதாரணமாக எல்லோருக்கும் இந்தப் புழுக்கள் தொற்றுவதில்லை. மாட்டு
இறைச்சி / பன்றி இறைச்சி / மீன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் மற்றும் நாயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்  ஆகியோருக்கு மட்டுமே இவை தொற்றுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில் இந்தப் புழுக்களின் லார்வாக்கள் வசிப்பதே  இதற்குக் காரணம். வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் இதனால் வரலாம். மேலும் கல்லீரல்,  நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் ‘நீர்க் கட்டிகள்’ (Hydatid cysts) வளர்வதும் உண்டு. இது குழந்தைகளுக்கு  அவ்வளவாக தொற்றுவதில்லை. பெரும்பாலும் பெரியவர்களுக்கு தொற்றுவதே நடைமுறை.

பரிசோதனை என்ன?


பெரும்பாலான குடல் புழுக்களை நோயாளிக்கு மலப்பரிசோதனை செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மலத்தில் குடல்  புழுக்களின் முட்டைகள் வெளிவருவதைக் கண்டறிந்து, எந்தப் புழுவின் முட்டை, எந்தக் குடல்புழு நோய் எனக் கணிக்கப்படுகிறது.  மேலும் குடல் புழுக்களின் லார்வாக்கள் நுரையீரலுக்குள் பயணம் செய்யும்போது ரத்தத்தில்  இயோசினோபில்’ அணுக்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையை வைத்து மறைமுகமாக குடல்புழு தொல்லையைக் கணிப்பதும் உண்டு.

நாடா புழுக்களைக் கண்டறிய, பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட தசைகளின் திசுக்கள் ஆய்வு செய்யப்படும். அதன் மூலம்  நாடாபுழு பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். நாடா புழுக்களின் பாதிப்பு இருப்பவர்களுக்கு மலத்தில் வெள்ளை நிறத்தில்  வெட்டிப்போட்ட ரிப்பன் மாதிரி இவற்றின் உடற்பகுதிகள் வெளியேறும். இவற்றைப் பரிசோதித்தும் இந்தப் புழுக்களை உறுதி  செய்யலாம்.

சிகிச்சை என்ன? 


குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள்  கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மருத்துவர்  யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். இந்த மருந்துகளில் நாடா புழுக்கள் தவிர  மற்ற புழுக்களுக்கு ‘அல்பென்டசோல’ மாத்திரை அல்லது மருந்து முக்கியமாகத் தரப்படுவதுண்டு. நாடா புழுக்களுக்கு  ‘நிக்லோசமைடு’ மாத்திரைகள் தரப்படுவதுண்டு. அதே வேளையில் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல்  புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது.

தவிர்க்க என்ன வழி?


சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட வேண்டும்.குளியலறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும்  சுத்தமாக வைத்திருங்கள்.திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக்கூடாது.கழிப்பறைக்குச்  சென்றுவந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப்  பழக்கப்படுத்துங்கள், சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது.

சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.நகங்களை பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.  குழந்தைகள் விரல் சூப்பக்கூடாது. குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற  வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை  அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக்கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளை குடிநீருக்கோ, உணவுக்கோ  கொண்டுவருவதற்கு ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாது.

காய்கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு  தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். நன்றாகக்  கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.  பாதுகாக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும்.
  
சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம். காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல  வேண்டும் அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பித்தவெடிப்பு, சேற்றுப்புண்  இருந்தால் உடனே  சிகிச்சை பெற்றுவிட வேண்டும். தரமான கடைகளில் மட்டுமே  இறைச்சிகளை வாங்க வேண்டும். மீன், இறைச்சி  போன்றவற்றை நன்றாக வேகவைத்தபின் சாப்பிட வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கிக்  கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். 

Thank you Dhinakaran News Paper

இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணெய்

Bantam uppilla nodded in the trash. Likewise, the oil does not hold water without any traces. That's why we are using too much oil. From Sesame shatters

VIDEO : Diet to control your cholesterol
Diet to control your cholesterol
Diet to control your cholesterol
உப்பில்லா பண்டம் குப்பையில் என்பார்கள். அதுபோல தான் எண்ணெய் இல்லாமல் எந்த சமையலும் எடுபடாது. அதனால் தான் நாம் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப்பொருளாகவும், மருந்துபொருளாகவும் பயன்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள், அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
 நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகறது. உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. நல்லெண்ணெய்யை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று தாராளமாக சொல்லலாம்.
 அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்கு காரணம். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, விழிகளுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது.

கண்நோய், தலைக்கொதிப்பு, சொரி சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது. நல்லெண்ணெயை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.
 நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் கண் சிவப்பு, கண் வலி, கண்களில் நீர் வடிதல் மண்டைக்குத்தல், போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Friday, June 3, 2016

கர்ப்பிணிகளுக்கு மசக்கை


கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக மூன்று மாதங்களுக்கு மேலும் கூட நீடிப்பது உண்டு.


மிகவும் பிடித்த உணவு பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத உணவுப் பொருட்களின் மீதான ஆசைகளும் மசக்கையின் அறிகுறிகள். நாம் சாப்பிடும் சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி வருவது போன்ற உணர்வு, சமைக்கும் போது வரும் வாசனையை நுகர்ந்தாலே வாந்தி வருவது, சாதம் கொதிக்கும்போது வரும் வாசனை பிடிக்காமல் போவது‌ம் மச‌க்கைதா‌ன். 

பசிக்கும் ஆனால் சாப்பிட உட்கார்ந்தால் வாந்தி எடுப்பதா அல்லது சாப்பிடுவதா என்ற குழப்ப நிலையை உருவாக்கும். உடலுக்கு நல்லதல்ல என்று ஒதுக்கும் பொருட்களின் மீது அதிக விருப்பமும் இந்த சமயங்களில் ஏற்படுவது உண்டு.
ஒரு சிலருக்கு இந்த மசக்கை மூன்றாம் மாத துவக்கம் வரையில் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு 5 மாதம் வரையிலும் கூட இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதாவது காலையில் பல் துலக்கும்போது வாந்தி எடுப்பது, வாந்தி வருகிறது என்று எண்ணி எண்ணி சாப்பிடாமலேயே இருப்பது போன்றவை அல்சரை உண்டாக்கிவிடும். எனவே எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். திரவ உணவாகவோ, பழம், காய்கறிகள் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம்.
பலருக்கும் இரவு நேரங்களில் அதிகமாக பசிக்கும். அந்த சமயத்தில் சாப்பிடுவதற்கு என சில பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சமைத்த உணவுப் பொருட்கள் அல்ல.. பிஸ்கட், பழம், பால் போன்றவற்றை.
வாந்தி வரும் என்ற உணர்வை விட... உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் கரு‌வி‌ற்கு‌ம் சே‌ர்‌த்து சாப்பிட வேண்டும் என்ற எ‌ண்ண‌த்தை அதிகமாக நினை‌‌வி‌ல் கொள்ளுங்கள்.

Saturday, May 21, 2016

பாம்புக்கடி (Snake Bite)

பாம்புக்கடி (Snake Bite)





பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள். 
இந்திய கோப்ரா 
ராஜ நாகம் (King cobra) 
Banded krait
Slender coral snake 
Russell viper 
Saw- scaled viper 
Common krait
பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன. 

பாம்புக் கடி ஏற்பட்டால் 
அமைதியாக இருங்கள் 
பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம். 
கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க Loove vplinˆ உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது. 
வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள். 
காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம். 
விஷத்தை உறிஞ்சி எடுக்க வேணடாம். 
உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். 

விஷம் 
ஒருவருக்கு  விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்.

உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல் 
சுவாசத்தில் இரசாயண நெடி அடித்தல் 
உடலில், உடையில் உள்ள வாசனை, கறை 
காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்ட செல்லவும். 
மயக்கம் 
சுவாசத் தடை 
வலிப்பு 

உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்-
கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.

வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இராசயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ அருந்திவிட்டால், இந்த இரசாயன பாட்டிலுள்ள லேபிளைப் படிக்கவும். தெரியாமல் அதை அருந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். அல்லது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து விடவும். கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

கவனம்
வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சிக்க வேண்டாம்.

மின்சாரத் தாக்குதல்
மின்சாரத் தாக்குதலின் விளைவு வோல்டேஜின் அளவுக்கு ஏற்ப மாறுபடும், தவிரவும், மின்சாரம் எந்த வழியாக உடலில் பாய்ந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்
மாரடைப்பு 
இதயக் துடிப்பில் மாறுதல் (Arrhythmias)
மூச்சு விட முடியாத நிலை
வலிப்பு
மரத்துப் போதல்
மயக்கம்

மருத்துவ உதவி கிடைக்கும் வரை என்ன செய்யலாம்?
தொட வேண்டாம்
சுவிட்சை உடனடியாக அணைத்து விடவும். பிளாஸ்டிக், மர பொருள்களால் மின்சாரம் தாக்கிய பகுதியை நகர்த்தலாம்.
சுவாசம், இருமல், அசைவை கவனிக்கவும். தேவைக்கு ஏற்ப சிறிசிஸி-ஐத் தொடங்கவும்.

கீழே படுக்க வைக்கவும். தலையை விட கால்களை உயர்த்தி வைக்கவும்.

எச்சரிக்கை
வெறும் கைகளால் அவரைத் தொட வேண்டாம்.
ஒயர்களிலிருந்து தீப்பொறி காணப்பட்டால். 20 அடிக்குப் பின்னால் நகர்ந்து விடவும்.
மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இல்லாத பட்சத்தில், அவரை வேறு இடத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டாம்.

வெப்பம் தொடர்பான அறிகுறிகள்
சுளுக்கில் (Cramps) ஆரம்பித்து, ஆயர்ச்சி, வெப்பத்தாக்குதல் என்று பல அறிகுறிகள் உள்ளன.

வெப்பச் சுளுக்கு (CRAMPS)
அதிகம் வலிக்கும். போதிய அளவு நீராகாரம் இல்லாததால் ஏற்படலாம். 
என்ன செய்யலாம்?
ஓய்வு
பழச்சாறு அருந்தலாம்
1 மணி நேரத்துக்கு அதிகமாக நீடித்தால் மருத்துவ உதவி

வெப்ப அயர்ச்சி
கடினமான பணிகளுக்குப் பிறகு ஏற்படும்
மயக்கம்
வாந்தி
அதிக வியர்வை
கருத்த மேனி
குறைந்த ரத்த அழுத்தம்
குளிர்ந்த தோல்
மெலிதான காய்ச்சல்

என்ன செய்யலாம்?
நிழலான பகுதிக்கு நகர்த்திச் செல்லலாம்
படுக்க வைக்கலாம். கால்களை தலைமாட்டிலிருந்து உயர்த்தி வைக்கலாம்.
உடைகளைத் தளர்த்தலாம்.
குளிர்ந்த நீரைப் பருகத் தரலாம்.
விசிறி விடலாம். குளிர்ந்த நீரால் ஒத்தடம் தரலாம்.
கவனமாக கண்காணிப்பு அவசியம். வெப்பத் தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 102 டிகிரிக்கு மேலாகக் காய்ச்சல் இருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

வெப்பத் தாக்குதல்
வெயிலில் கடுமையான வேலைகள் செய்வதால் ஏற்படும். வயதானவர்களுக்கும் வியர்வை வெளியேறதாவர்களுக்கும் அதிகம் ஏற்படும்.
 வெப்பத் தாக்குதல் ஏற்பட்டால் வியர்வை வெளியேறும் ஆற்றலும், சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மறைந்து விடுகின்றன. 104 டிகிரிக்கு மேலே போனால் வெப்பத் தாக்குதல் ஏற்படலாம்.

பிற அறிகுறிகள்
அதிகரித்த இதயத் துடிப்பு
விரைவான அல்லது குறைச்சலான சுவாசம்
அதிகரித்த அல்லது குறைந்த ரத்த அழுத்தம்
வியர்வை நின்று போதல்
எரிச்சல், குழப்பம், மயக்கம்
என்ன செய்யலாம்?

நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்
மருத்துவ உதவி பெறலாம்
தண்ணீர் தெளிக்கலாம். விசிறி விடலாம்.

உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க




எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். 
ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால். கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெல்ல வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைப்பதற்கு மட்டுமே உதவும்.

‘கையினால் உடல் பாகங்களை நீவி விடுவதன் மூலம் எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால் அந்தத் தெறிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே மருத்துவரிடம் செல்வது அவசியம் இல்லை. அதற்கு நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா. நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா. என்பதையெல்லாம் கவனியுங்கள்.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள்.
 இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

தனிமையில் மாரடைப்பா வந்தா என்ன பண்ணுவீங்க....?




பாடாய் படுத்தும் மாரடைப்பு எப்போது வரும்னு யாருக்கும் தெரியாது. வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
 நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மருத்துவமனை ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், 
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன வேண்டும்

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது.

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
 இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலா
ம்

Friday, May 6, 2016

எந்த பழத்தில் என்ன உள்ளது..?

ஆரோக்கிய வாழ்க்கைக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு வகை பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எனவே பழங்களின் பயன் அறிந்த சாப்பிடுங்கள்.
அவகேடா
கெட்ட கொழுப்பை குறைத்து நல்லகொழுப்பை அதிகரிக்கும்.உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும்.வாய் துர்நாற்றத்தை போக்கும்.இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும்.
வாழைப்பழம்
உடனடி ஆற்றல் கிடைக்கும்.விட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது.மன அழுத்தம் நீங்கும்.அல்சரை தடுக்கும்.மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பேரிக்காய்
சிறுநீரக கோளாறுகளை சீர்செய்யும்.நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.எலும்புகளை வலுவாக்கும்.பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில்இருந்து பாதுகாக்கும்.நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைபோக்கும்.
மாம்பழம்
உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது.செரிமான சக்தியை மேம்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்களுக்குநல்லது.
திராட்சைப்பழம்
பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைகுறைக்கும்.குடல் புற்றுநோய், பிராஸ்டேட்புற்றுநோயை தடுக்கும்.இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளைதடுக்கும்.வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுநோய்களைதடுக்கும்.சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...