Wednesday, April 20, 2016

குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது....? if baby drinks acid what to do....?

Houses in the bathroom, the toilet, the floor can occur in places such as stain removal using acid. Kutittuvitalam children thinking it was water. Or

VIDEO : After Deepika Padukone, Sonam Kapooor Depressed
After Deepika Padukone, Sonam Kapooor Depressed
After Deepika Padukone, Sonam Kapooor Depressed
வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும். அரிப்பு உண்டாகும். வலி எடுக்கும். கொப்புளங்கள் ஏற்படலாம். அமிலம் கண்ணில் பட்டு விட்டால், கண் சிவந்து விடும். கண்களில் எரிச்சல் ஏற்படும்.. அமிலத்தைக் குடித்தவருக்கு கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக்கூட விழுங்க முடியாது. விழுங்கும் போது தொண்டை வலிக்கும். தொண்டையை அடைப்பது போலிருக்கும். நெஞ்சு எரியும். சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். மயக்கம் வரலாம். வலிப்பு ஏற்படலாம்.

எப்படி முதலுதவி செய்வது?


உடனடியாக, உடுத்தியுள்ள ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும். தோலில் அமிலம் பட்டிருந்தால், அதிகமாகத் தண்ணீர் விட்டுத் தோலை நன்றாகக் கழுவ வேண்டும். இது முக்கியம். சோப்பு போட்டு தோலைக் கழுவக்கூடாது. அப்படிச் செய்தால் எரிச்சல் அதிகமாகிவிடும்.

தோலில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கிப் பிழிந்து கொண்டு, அதைத் தோலில் சுற்றலாம்.  அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் கழுவவேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச் சொல்லுங்கள்.

பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். வயிற்றுப்புண்ணுக்குத் தரப்படும் ’ஆண்டாசிட்’ மருந்து கைவசம் இருந்தால் 30 மி.லி. கொடுக்கலாம்.

வாயைத் தண்ணீரால் கொப்பளித்துக் கழுவலாம். மேல்சிகிச்சைக்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. மருத்துவமனைக்குச் செல்லும்போது, அந்த நபர் குடித்த பொருளையும் எடுத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்தால், சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

செய்யக்கூடாதவை?


அமிலம் பட்ட கண்களில் சொட்டு மருந்தை ஊற்றக்கூடாது. வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது.

Tuesday, February 2, 2016

ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Advantage of Black Tea

ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கேமல்லியா சினசிஸ்(Camellia sinensis) என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ.black_tea_002
  • ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
  • இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ உதவுகிறது.
  • ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.
  • ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது.
  • மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் ப்ளாக் டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்குகின்றன.
  • ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
black-tea

Tuesday, January 12, 2016

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

முதலில் சேரில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகளை மேலே நேராக நீட்ட வேண்டும். உள்ளங்கையை எதிரே இருப்பவருக்குத் தெரிவது போல வைக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும்.
இப்போது, மெதுவாக, உடலை வளைத்து, கைகளைப் பாதத்துக்கு முன்பும், பிறகு பக்கவாட்டிலும் பதிக்க வேண்டும். பிறகு, கைகளை மடக்காமல் அப்படியே நிமிர்ந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை ஐந்து முதல் 7 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: அடி வயிறு அழுத்தப்படுவதால், வயிறு வலுப்பெறும். மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். நரம்பு மண்டலத்தைச் சீராகச் செயல்படவைக்கும்.
சேர்-பயிற்சி

Thursday, November 12, 2015

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க Try this if you want your white hair become black hair

தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும்.
அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
ஹென்னா
ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
வெந்தயம்
வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.
நெய்
நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.
மிளகு
தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.


ப்ளாக் டீ
1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

Friday, October 30, 2015

ஆண்களே...மனம் தளர வேண்டாம்

Kulantaiyinmaikkup girls a chance to escape, while the hand that was due not to the generation of men.


VIDEO : How 'healthful' fruits and veggies protect your mind too
குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு  இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை  என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன  சிகிச்சை? மகப்பேறு மருத்துவரான ஜெயந்தியிடம் கேட்டோம்...

‘‘திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு  மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். குழந்தை என்பது சமூக அந்தஸ்தாகவும் மாறிவிட்டதால்  ‘ஏதாவது விசேஷமா?' என்று சுற்றியிருப்பவர்கள் கேட்பதிலேயே தம்பதிகள் குழப்பத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். குழந்தை  இல்லாத குறையைவிட, ஊரில் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல முடியாதது பலருக்கும் வலி மிகுந்த அனுபவமாகிவிடுகிறது.

குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்... பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல்,  வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் என பொது காரணிகளும் இருக்கலாம். மன அழுத்தம்  குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு  பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட்  கட்டிகள், குழந்தைப் பருவத்தில் பருவம் அடைந்துவிடுவதைப் போலவே 30, 35  வயதிலெல்லாம் மெனோபாஸ் ஏற்படச் செய்கிற ஹார்மோன் கோளாறுகள், காசநோய் போன்ற காரணங்களால் குழந்தையின்மை  பிரச்னை ஏற்படலாம். காசநோயானது ஆண்களுக்கும் மலட்டுத்தன்மையை உருவாக்கும்.

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு  இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற  பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.விதைகளில் உற்பத்தியாகிற அணுக்கள் ணிஜீவீபீவீபீஹ்னீவீs  என்ற இடத்தில்தான் சேர்ந்திருக்கும். இந்த இடத்தில் இருக்கும் ஒரு வால்வு தாம்பத்தியம் கொள்கிறபோது விலகி,
விந்தணுக்களை வெளியேற்றும்.

மற்ற நேரங்களில் விந்தணுக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மூடிக்கொள்ளும். இதனால்தான் சிறுநீர் கழிக்கும்போது  விந்தணுக்கள் வெளியேறுவதில்லை. விந்தணுக்கள் பாதுகாக்கப்படும் இந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் குழந்தையின்மை  பிரச்னை உண்டாகும். இந்த அடைப்பு, வெரிக்கோசிஸ் போன்ற அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டதின் பக்கவிளைவாகவும்  நோய்த்தொற்றுகளின் காரணமாகவும் உண்டாகலாம்.

இக்குறைபாடுகளில் பெரும்பாலானவை விதைப்பையை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளாததாலேயே ஏற்படுகிறது.  விதைப்பைக்கு ரத்த ஓட்டமும் நாம் சுவாசிக்கிற உயிர்க்காற்றும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதன்  செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும் (இது பெண்களின் கருப்பைக்கும் பொருந்தும்). ஆனால், கொழுப்பு  உணவுகள், இறுக்கமான  உடைகள், நீண்ட நேரம் பணிபுரிவது, போதுமான தண்ணீர் அருந்தாதது, உடல் சூடு போன்ற காரணங்களால் விதைப்பைகளின்  ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் தரம் குறைந்து விடுகிறது. ஹார்மோன் குறைபாடுகளால் விதையில் போதுமான  வளர்ச்சி இல்லாததும் காரணமாக இருக்கிறது.

இன்று எல்லாவற்றுக்கும் கருவிகள் வந்துவிட்டதால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. வாகன வசதிகளும் வந்துவிட்டதால்  நடக்கிற பழக்கமும் இல்லாமல் போய்விட்டது. வேலையும் கூட, Sedentary lifestyle என்ற உடல் உழைப்பு குறைந்த  வாழ்க்கை முறையாக இருக்கிறது. உட்கார்ந்தே செய்கிற வேலை என்றவுடன் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறவர்களை  மட்டுமே நினைப்போம். அலுவலகங்களில் வேலை பார்க்கிறவர்கள், டாக்டர்கள், ஓட்டுநர்கள், வாட்ச்மேன் உள்பட பலரும் இந்த  வாழ்க்கை முறையில்தான் இருக்கிறோம்.

வேலை முறையை மாற்ற முடியாத சூழலில், குறைந்தபட்சம் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று  திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரமான சூழலில் நல்ல காற்றை சுவாசித்து, தளர்வான உடைகள்  அணிந்து அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மாலையில் கூடுதலாக வேண்டுமானால்  உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். அதற்காக, காலை உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது.

மாலை உடற்பயிற்சியில் அன்றைய தினம் சாப்பிட்ட கலோரிகளைதான் எரிப்போம். ஏற்கெனவே உடலில் சேர்ந்திருக்கும்  கலோரிகளை எரிப்பதற்கு காலை வேளை உடற்பயிற்சியே சிறந்தது. முக்கியமாக, அடைத்துவைக்கப்பட்ட அறைக்குள், பலருடன்  கூட்டாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையாக, ‘முறையான  உணவுமுறையைப் பின்பற்றுங்கள், சுகாதாரமாக இருங்கள், தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அடிப்படை  மாற்றங்களைத்தான் முதலில் சொல்வோம்.

இரண்டாவது கட்டமாக உடல் பரிசோதனை (Physical examination) செய்தால், என்ன பிரச்னை என்பதை அறிந்து  கொள்ளலாம். பெரும்பாலான மலட்டுத்தன்மையை இந்த இரு கட்டங்களிலேயே சரி செய்துவிடலாம். சரி செய்ய  முடியாவிட்டாலும், IUI, IVF, ICSI போன்ற பல சிகிச்சைகள் அடுத்தடுத்து இருக்கின்றன. மருத்துவம் பல்வேறு  வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில்  குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்னையாகவோ நினைக்க வேண்டியதில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம்... 


ஒரே நாளில் பிரச்னையைத் தீர்க்க மருத்துவர் கடவுள் அல்ல என்பதைத் தம்பதியர் புரிந்துகொள்ள வேண்டும். கணவன்,  மனைவி இருவருக்கும் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற சிகிச்சைகளை செய்ய மருத்துவருக்கு  அவகாசம் தேவை. மருத்துவர் மேல் மொத்த அழுத்தத்தையும் திணித்துவிட்டு, இந்த சோதனை, அடுத்து இன்னொரு சோதனை,  இன்னொரு மருத்துவமனை என்று ஓடிக் கொண்டே இருப்பதாலோ,  பதற்றப்படுவதாலோ, நாம் எதிர்பார்க்கிற பலன் கிடைக்கப்  போவதில்லை.

குழந்தை என்பது மிகவும் சந்தோஷ மான, நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தப்போகும் அழகான விஷயம். அந்த நல்ல  விஷயத்துக்காகக் கொஞ்சம் காத்திருந்தால் எந்தத் தவறும் இல்லை.  இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை  என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், சிகிச்சை பெற்றுக்கொள்ளப் போகும் மருத்துவமனை தரமானதுதானா,  சிகிச்சையளிக்கப் போகிறவர் தகுதி பெற்ற மருத்துவரா என்பதை கவனமாகப் பரிசீலனை செய்துகொள்ளுங்கள். ஆல் தி பெஸ்ட்!

சில வழிமுறைகள்


இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால்,  தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது.  ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரண ரத்தப்பரிசோதனை  நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.

இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும்.  நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும்.  ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான  காட்டன் உடைகள் அணிவது நல்லது.

சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த  ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.

லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும்,  கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை  பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்னை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக  எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.

சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில்  வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக  ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட  பாலிசிஸ்டிக் ஓவரி(Polycystic ovary) குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்!

பேபி பெயின் கில்லர்............?


\Headaches or stomach pain killers who give to children? Child psychiatrist Lakshmi Prashant


தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு பெயின் கில்லர் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதன்மூலம் குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், எஃப்.டி.ஏ. ஒப்புதல் அளித்த வலிநிவாரணி மாத்திரைகள் குறித்த முழுத் தகவல்கள், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்த  பதிவுபெற்ற மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்கலாம்.

சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வலிநிவாரணி மாத்திரைகள், டாக்டர் பரிந்துரைக்காத மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்னை, மன அழுத்தம் காரணமாக  தலைவலி உண்டாகலாம். அதற்கு பாராசிட்டமால் கொடுக்கலாம். வயிற்றுவலி மட்டும் இருந்தால் எந்த இடத்தில் வலி உள்ளது, வலியின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மாத்திரை கொடுக்கலாம்
.

Monday, May 25, 2015

Herpes Zoster - நரம்புக் கொப்பளிப்பான்

ந்தப் பெண்ணின் முதுகில் கொப்பளங்கள் சிறிய சிறிய கூட்டங்களாக இருக்கின்றன.


மற்றொரு பெண்ணின் முதுகிலும் வயிற்றிலும் தோன்றியவற்றின் படம் இது. அதேபோன்ற கொப்பளங்கள் உள்ளன.

மென்மையான தோலினால் மூடிய கொப்பளங்கள். உள்ளே சிறிதளவு தெளிவான நீர் இருக்கிறது.

கொப்பளிப்பான் நோயில் வரும் கொப்பளங்கள் போலவே இருக்கின்றன. ஆனால் கொப்பளிப்பான் போல உடல் முழுவதும் வீசிப் போடவில்லை.

நடு முதுகில் முள்ளந் தண்டிற்கு அருகில் ஆரம்பித்து வயிறு வரை தொடர்கிறது. வயிற்றின் ஒரு பாதிப் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது.

நடுவயிற்றைத் தாண்டி மறு பக்கம் போகவே இல்லை. இவருக்கு இடப் பக்கத்தில் மட்டுமே வந்தது. 

முகத்தில் இது வந்தால் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களுக்குள்ளும் கொப்பளங்கள் போடக் கூடும். அப்படியானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

 இதுவும் ஒருவகைக் கொப்பளிப்பான்தான். இதனை நரம்புக் கொப்பளிப்பான் என்பர். முந்நாணிலிருந்து (Spinal Cord) வெளிவரும் ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றும்.


பொதுவாக கொப்பளங்கள் தோன்ற முன்னரே அந் நரம்பின் பாதையில் காரணம் சொல்ல முடியாத வலி இருக்கும்.

வலியிலிருந்து மீள்வதற்காக பலரும் தமக்குத் தெரிந்த ஓயின்மென்ட், கிறீம், எண்ணெய் பலவற்றையும் தேய்பதுண்டு.

ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றியதும் மருந்து ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற மயக்கம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.

பொதுவாக முன்பு எப்பொழுதாவது கொப்பளிப்பான் நோய் வந்தவர்களுக்கு மட்டுமே இது வரும். பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள்.

முன்பு ஏற்பட்ட வெளிப்படையாக நோய் மாறிய பின்னர் நரம்பு மண்டலத்தில் மறைந்திருந்த கிருமிகள் மீளுயிர்ப்பதால் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒரு நரம்பின் பாதையில் மட்டும் வருகிறது. 

ஆங்கிலத்தில் Shingles என்பர். மருத்துவத்தில் Herpes Zoster என வழங்கப்படுகிறது. 

தொற்று நோய். எல்லாக் கொப்பளங்களும் காய்ந்து அயறாகும் வரை நோயூற்றவரிலிருந்து ஏனையவர்களுக்குத் தொற்றும். தொற்றினால் கொப்பளிப்பான் நோய் வருமே ஒழிய நரம்புக் கொப்பளிப்பான் அல்ல.

Acyclovir போன்ற வைரஸ் எதிர் மருந்துகள் உள்ளன. ஆயினும் அவற்றை முதல் 48 மணிநேரத்திற்குள் ஆரம்பித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பொதுவாக 14 நாட்களுக்குள் கொப்பளங்கள் மருந்துகள் இல்லாவிடினும் தானாகவே காய்ந்து உலர்ந்து விடும்.

சிலரில் கொப்பளங்கள் நன்கு மாறிய பின்னரும் நோய் வந்த நரம்பின் பாதையில் கடுமையான வலி நீடிக்கக் கூடும். இதனை Postherpatic Neuralgia என்பர். ஒரிரு மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை அவ் வலி நீடிக்கலாம். அத்தகையவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு சிகிச்சையைத் தொடர நேரிடும்.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...