Thursday, April 21, 2016

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.
எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.
01. மந்தமாக வெளியாகுதல்.
உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.
02. இரத்தம் கசிதல்.
சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.
03. நுரை போன்று வெளிபடுதல்.
சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.
04. பழுப்பு நிறத்தில்.
கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைப்பதற்கான இலகுவான வழிமுறை : பின்பற்றி பயன்பெறுங்கள் !


Untitled-2சிலர் தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக, உடல் உழைப்புஇல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வேலை செய்யும் நபர்களில் பெரும்பாலோருக்குத்தொப்பை இருக்கும். வாகன ஓட்டுனர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்வோரின் வயிறு விரைவில் பெருத்துவிடும்.
நோய் வருமுன் காக்க வேண்டும் என்பது போல் தொப்பையும் வருமுன் காக்கவேண்டும்.தொப்பை விழுந்துவிட்டால், அது வந்த வேகத்தில் குறைப்பது என்பது நிச்சயமாக இயலாத காரியம். தொப்பையினைக் குறைப்பதற்கான ஒரே வழி, உணவுக்கட்டுப்பாடும் சரியான முறையிலான உடற்பயிற்சியுமே!
தொப்பை விழுவதன் காரணத்தை விளங்கிவிட்டால், அதனைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் பாதி கிணற்றைத்தாண்டியதற்கு ஒப்பானது.
மனிதனின் உடல் இயக்கத்திற்குச் சக்தி தேவை. இந்தச் சக்தி உண்ணும் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான சக்தியினை கலோரி எனும் அலகின் மூலம் குறிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு ஆணின் உடல் இயக்கத்திற்குத் தினசரி சுமார் 2000 கலோரி சக்தி தேவை. அதுவே பெண்ணாக இருந்தால், சுமார் 1600-1800 கலோரி சக்தி தேவை. வயது, உடல் எடை, உழைப்பு ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போன்று இந்த அளவில் சிறு வித்தியாசம் இருக்கும்.
காலை எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்லும் வரை சராசரி உழைப்புடன் வாழும் ஒரு ஆணை எடுத்துக்கொள்வோம். அவருடைய உடலின் தினசரி இயக்கத்திற்கு சுமார் 2000 கலோரி சக்தி தேவைப்படுகிறது. ஆனால், அவர் 2000 கலோரி சக்தி தயாரிப்பதற்குப் போதுமான அளவைவிட குறைந்த அளவில் தினசரி உணவு உட்கொண்டால், 2000 கலோரியை ஈடுசெய்வதற்கான கூடுதல் கலோரியினை அவரின் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு அல்லது சதையிலிருந்து உடல் தானாகவே எடுத்துக்கொள்ளும். அதே சமயம், 2000 கலோரி அளவைவிட கூடுதல் கலோரி தயாரிக்கும் அளவில் உணவு உட்கொண்டால், கூடுதலாக உருவாக்கப்பட்ட கலோரி சதையாகவும் கொழுப்பாகவும் அவர் உடலில் சேமிக்கப்படும்.
இவ்வாறு அதிகப்படியாக உணவு உட்கொள்ளும் நபரின் தினசரி உடல் உழைப்புகுறைவாக இருக்கும்பட்சத்தில், சேமிக்கப்படும் அதிகப்படியான கலோரிகள் அவரின் உடலில் தேவையற்ற சதைகளையும் கொழுப்புகளையும் உருவாக்கும். இவ்வாறு உருவாகும் கொழுப்பு, முதல் கட்டமாக வயிற்றுப் பகுதியிலேயே(குடலைச் சுற்றி) படிகிறது. இதுவே தொப்பையாக வெளிப்புறத்தில் காட்சியளிக்கிறது.
எனவே, தொப்பையைக் குறைக்க விரும்புபவர் தினசரி தான் உண்ணும் உணவினைவிட அதிகப்படியான கலோரியினைச் செலவழிக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதிகக் கலோரியினைச் செலவழிக்க, அதிக உடல் உழைப்பு(உதா:உடற்பயிற்சி) தேவை.
கணினி முன்னால் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள்போன்றோருக்குத் தினசரி உடல் உழைப்பு குறைவு. இதனாலேயே இத்தகையவர்களுக்குஉடற்பயிற்சி செய்யவேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், பெரிய தொப்பை விழுந்து விட்டவர்களுக்கு அவர்களாக விரும்பினால்கூட உடலை வருத்தும்வகையிலான உடற்பயிற்சிகள் செய்வது கடினம்.தொப்பையின் மூலமாக, உடலில் படிந்த அதிக எடை சோர்வையும் அசதியையும் ஏற்படுத்துவதனால் தொடர் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கடினமாக இருக்கும்.
எனவே, தொப்பையைக் குறைக்க விரும்பும் ஒருவர் முதல் கட்டமாக தம் உடல் எடையினை இருப்பதனைவிட சிறிதளவாவது குறைக்க வேண்டும். இருக்கும் உடல் எடையில் ஓரளவு குறைத்துவிட்டால், அதன் பின்னர் உட்கார்ந்து எழும்புதல், குனிந்து நிமிர்தல் ஆகிய இரண்டு எளிய உடற்பயிற்சிகளும் தொப்பையினை எளிதில் குறைக்க உதவும்.
சரி, உடல் எடையினைக் குறைக்க என்னவழி?
1. உடற்பயிற்சி(அதிக உழைப்பு)
2. உணவு கட்டுப்பாடு
சாதாரணமாக தினசரி எடுத்துக்கொள்ளும் உணவின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் உடல் எடையினைக் குறைக்கலாம்.
ருசியாக உண்டு பழக்கப்பட்டோருக்கு உணவில் கட்டுப்பாடு என்பது வேப்பங்காயாக கசக்கும். இத்தகையவர்கள் ஒரு வாரம் தம் நாவினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டால், கீழ்கண்ட வழிமுறை ஒருவாரத்தில் குறைந்தது 5 கிலோ எடையினைக் குறைக்க உதவும். அதன் பின்னர், சாதாரண சிறு சிறுஉடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் தொப்பையினை விரைந்து குறைத்து விடமுடியும்.
குறுகிய காலத்தில் அதிக எடை குறைத்தல் என்பது, உடலுக்குத் தீங்கானது. ஆனால், இந்த வழிமுறை உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாதது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா போன்ற இழுப்பு நோய் இல்லாத அனைவரும் கீழ்கண்ட வழிமுறையினைப் பின்பற்றலாம்.
7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை:
ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)
நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.
நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)
நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.
நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் – குறைந்தது12 குவளை.
நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாகதேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.
நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.
தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 45 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!
மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 67 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.
“இந்த டயட்டை உணவுக்கு முன்னர் பின்பற்றுவதா அல்லது உணவுக்குப் பின்னர் பின்பற்றுவதா?” என்ற கேள்வி யாருக்காவது எழுந்தால் அத்தகையோர் மட்டும் இச்சந்தேகம் தீரும்வரை இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.

Wednesday, April 20, 2016

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்...?



VIDEO : Man Who Inspired Taylor Swift Song Charged With Child Abuse
Man Who Inspired Taylor Swift Song Charged With Child Abuse
Man Who Inspired Taylor Swift Song Charged With Child Abuse





பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.

வீடுகளில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டிகளில் சில சமயம் குழந்தைகள் தவறி விழுந்துவிடுவார்கள். இதுபோன்ற சமயங்களில், மூச்சுவிட முடியாமல் தத்தளிக்கும் குழந்தைகளின் வாய், மூக்கு வழியாக நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் அதிகமான தண்ணீர் சென்றுவிடும். இதில், நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவது உயிருக்கு ஆபத்தான விஷயம். இதனால் தொடர்ந்து மூச்சுவிட முடியாத சூழல் ஏற்படுவதால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு குழந்தை மயக்க நிலைக்குத் தள்ளப்படும்.

எனவே, தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்ததும், முதலில் சுவாச ஓட்டம் மற்றும் நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும். குழந்தை மூச்சு விடவில்லை என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். குழந்தையை மல்லாந்த நிலையில் படுக்கவைத்து அதன் வாயோடு நமது வாயைப் பொருத்திப் பலமாக ஊத வேண்டும். இப்படிச் செய்வதால், நம் வாய் வழியாக உந்தித் தள்ளப்படும் காற்றானது குழந்தையின் மூச்சுக் குழல் அடைப்பை சட்டென நீக்கி, இயல்பாக மூச்சுவிட உதவும்.

இதயம் இயங்காமல் இருந்தால், நாடித் துடிப்பு இருக்காது. உடனடியாகக் குழந்தையினுடைய மார்பின் நடுவில் இரண்டு விரல்களை (ஆட்காட்டி விரல், நடு விரல்) ஒன்றுசேர்த்து நன்றாக ஊன்றி அழுத்திவிடும்பொழுது சட்டென இதயம் துடிக்க ஆரம்பிப்பதோடு, நுரையீரலில் தேங்கி நிற்கும் தண்ணீரும், வாய், மூக்கு வழியே வெளியேறும். பாதிக்கப்பட்டவர் பெரியவர் என்றால், வாய் வழி செயற்கை சுவாசம் கொடுப்பதோடு, அவரது மார்பின் நடுவில் நம்முடைய உள்ளங் கைகளால் விட்டு விட்டு பலமான அழுத்தம் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் வயிற்றை அழுத்தக் கூடாது.

நிறையத் திரைப்படக் காட்சிகளில், தண்ணீரில் மூழ்கியவரைக் கரைக்கு கொண்டுவந்து சேர்த்ததும் அவரது வயிற்றை அழுத்தி, தண்ணீரை வெளியேற்றுவதாகக் காட்டுவார்கள். இது முழுக்க முழுக்கத் தவறான முறை.

நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும்போது, பாதிக்கப்பட்டவரது தலையை நீர்மட்டத்துக்கு மேலே இருக்குமாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சுவாச ஓட்டம் இருக்கிறதா என்று சோதிக்கலாம். சுவாசம் இல்லை என்றால், அவசரத்தின் நிலைமையைப் பொறுத்து அந்த நிலையிலேயே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கலாம். கரைக்குக் கொண்டுவந்து மல்லாந்துப் படுக்கவைத்துத்தான் சுவாசம் அளிக்க வேண்டும் என்பது இல்லை.

தண்ணீருக்குள் மூழ்கியவருக்கு மூச்சும், நாடித் துடிப்பும் இல்லை என்றால், அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்துவிட வேண்டாம். மூச்சுத் தடை, இதயம் செயல்படாமை இரண்டுமே தற்காலிகமானவை. எனவே, எந்தவிதப் பதற்றமும் இன்றி நாம் முறையாக முதல் உதவி செய்தால், பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றிவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, தண்ணீரில் விழுந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தால்கூட, பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதல் உதவி செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று மேற்சிகிச்சை அளிப்பது முக்கியம்.''

 குழந்தைகள் பத்திரம்!

1 குழந்தைகள் உள்ள வீடுகளில், குளியல் அறைக் கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருப்பது நல்லது.

2 சிறிய வாளித் தண்ணீரில்கூட குழந்தைகள் தலைகீழாக விழுந்துவிட்டால், ஆபத்து. எனவே, குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் வாளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிவைக்க வேண்டாம்.

3 குழந்தைகளைக் குளிப்பாட்டும் 'பாத் டப்’பில் விளையாட்டுப் பொம்மைகளைப் போட்டுவைக்க வேண்டாம்.

4 நீர்வழிப் பயணங்களின்போது நீச்சல் தெரிந்தவர்களும் 'லைஃப் ஜாக்கெட்’ அணிய வேண்டியது அவசியம்.

5 வலிப்பு நோய் உள்ளவர்கள் பாதுகாவலர் துணையோடு நீர்நிலைகளில் குளிப்பது நல்லது.

6 உயரமான இடத்தில் இருந்து நீச்சல் குளத்துக்குள் டைவ் அடிக்கும்போது கழுத்து எலும்பு பாதிப்பு அடையலாம். அதனால் பாதிக்கப்பட்டவரின் கழுத்தைத் தொங்கவிடாமல், அங்கே இங்கே அசைக்காமல், பாதுகாப்பான நிலையில் ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது....? if baby drinks acid what to do....?

Houses in the bathroom, the toilet, the floor can occur in places such as stain removal using acid. Kutittuvitalam children thinking it was water. Or

VIDEO : After Deepika Padukone, Sonam Kapooor Depressed
After Deepika Padukone, Sonam Kapooor Depressed
After Deepika Padukone, Sonam Kapooor Depressed
வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும். அரிப்பு உண்டாகும். வலி எடுக்கும். கொப்புளங்கள் ஏற்படலாம். அமிலம் கண்ணில் பட்டு விட்டால், கண் சிவந்து விடும். கண்களில் எரிச்சல் ஏற்படும்.. அமிலத்தைக் குடித்தவருக்கு கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக்கூட விழுங்க முடியாது. விழுங்கும் போது தொண்டை வலிக்கும். தொண்டையை அடைப்பது போலிருக்கும். நெஞ்சு எரியும். சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். மயக்கம் வரலாம். வலிப்பு ஏற்படலாம்.

எப்படி முதலுதவி செய்வது?


உடனடியாக, உடுத்தியுள்ள ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும். தோலில் அமிலம் பட்டிருந்தால், அதிகமாகத் தண்ணீர் விட்டுத் தோலை நன்றாகக் கழுவ வேண்டும். இது முக்கியம். சோப்பு போட்டு தோலைக் கழுவக்கூடாது. அப்படிச் செய்தால் எரிச்சல் அதிகமாகிவிடும்.

தோலில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கிப் பிழிந்து கொண்டு, அதைத் தோலில் சுற்றலாம்.  அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் கழுவவேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச் சொல்லுங்கள்.

பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம். அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். வயிற்றுப்புண்ணுக்குத் தரப்படும் ’ஆண்டாசிட்’ மருந்து கைவசம் இருந்தால் 30 மி.லி. கொடுக்கலாம்.

வாயைத் தண்ணீரால் கொப்பளித்துக் கழுவலாம். மேல்சிகிச்சைக்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. மருத்துவமனைக்குச் செல்லும்போது, அந்த நபர் குடித்த பொருளையும் எடுத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்தால், சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.

செய்யக்கூடாதவை?


அமிலம் பட்ட கண்களில் சொட்டு மருந்தை ஊற்றக்கூடாது. வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது. வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது.

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...