Wednesday, March 4, 2015

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம் ( litchi fruit)

வப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்!
லிச்சி பழம் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது.சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.
லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76 சதவீதம், மேலும் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.
இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.
பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.
உடலுக்கு உரம்
லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
லிச்சி பழம் வைட்டமின் சி யை ஆதாரமாக உள்ளது. இதில் வைட்டமின் சி, மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளதால் நோயை எதிர்க்க கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது.
ரத்த உருவாக்கம்
மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.ரத்த உருவாக்கத்தை அதிகப்படுத்துகிறது.தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.
சிவப்பணு உருவாக்கம்
ஏனெனில் சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்பு சத்துகளை உரிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்


சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5  ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும்  சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு  தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது  எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும்  எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட்,  பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம்  கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

மிகவும் அழகாக, பல வடிவங்களில், கைக்கு அடக்கமாக பல அளவுகளில், மலிவான விலைகளில் கிடைப்பதனால், அழகின் மீது ஈடுபாடு கொண்ட நம்மவர்களால் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை.
ஆனால், நீங்கள் தவிர்த்தாக வேண்டிய நிலையில் உள்ளீர்கள். பிளாஸ்டிக் பாட்டில்களினால் பல சின்ன சின்ன உடல்நல கோளாறுகளில் இருந்து உயிரைக் கொல்லும் நோய்களை ஏற்படுத்தும் வரையிலான தன்மைகள் இருக்கின்றன. எந்த ஒரு விஷயத்தையும் நாம் அதன் கடை நிலையிலோ அல்ல அபாயத்தின் அருகாமையில் இருக்கையிலோ தான், அதிலிருந்து பாதுகாக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்கவே ஆரம்பிப்போம்.

ஆனால், இந்த விஷயத்தில் ஏற்கனவே நாம் கடை நிலையில் தான் இருக்கிறோம். பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என அறிந்திருப்போம். ஆனால், இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளும் ஏற்படலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம்! தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது உடல்நலத்திற்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன. அதைப் பற்றி விவரமாக தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பைசெப்ஃபீனால் ஏ (bisphenol A, or BPA)

இந்த இரசாயனம் நாம் பயன்படுத்தும் அனைத்து வகையிலான பிளாஸ்டிக் பொருட்களிலும், எலக்ட்ரானிக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் உணவு எடுத்து செல்லும் டப்பாக்களில் இருந்து தண்ணீர் பருகும் பாட்டில்கள் வரை அனைத்திலும் இதன் கலப்பு இருக்கிறது. இந்த இரசாயனம் தான் நம் உடலுக்கு கெடுதல்களை விளைக்கிறது என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உடல் செயலியல் பிரச்சனைகள்

அமெரிக்காவின் ஒரு ஆய்வகம் பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பில் சேர்க்கப்படும் பைசெப்ஃபீனால் ஏ என்னும் நச்சு பொருளினால் மனிதர்களுக்கு இதய பாதிப்புகள் மற்றும் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட வெகுவாக பாதிப்பு இருக்கிறது. இதை பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என 2008 ஆம் ஆண்டே கூறியிருக்கின்றனர். ஆயினும் 90% பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளில் இதன் கலப்பு இருந்து வருகிறது.

புற்றுநோய்

பைசெப்ஃபீனால் ஏ நம் உடலில் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக நம் உடலில் புற்றுநோய் கட்டிகள் எளிதாக உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு இதன் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பல மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதய நோய் பதிப்புகள்

கடந்த ஆண்டு 15 வயதிலிருந்து 74 வயதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 1500 பேர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் கலக்கப்பட்டிருக்கும் பைசெப்ஃபீனால் ஏ என்ற இரசாயன நச்சு பொருளின் காரணத்தினால் அவர்களுக்கு இதய பாதிப்புகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக ஏற்படுவதாய் கூறப்பட்டுள்ளது.

விந்தணு மற்றும் கருச்சிதைவு

பைசெப்ஃபீனால் ஏ எனப்படும் இந்த இரசாயனத்தில் பல வகைகள் இருக்கின்றன இதில் டைப் 7 என சொல்லப்படும் இரசாயனத்தின் கலப்பினால், ஆண்களுக்கு விந்தணு வலுவிழப்பது மற்றும் கர்ப்பணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு

வேலைக்கு செல்லும் அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தான் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். ஏன் நாம் கடைகளில் வாங்கும் தண்ணீரும் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் பாக்கெட்களிலும் தான் அடைத்து தரப்படுகிறது. பெரும்பாலும் தினமும் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அல்லது பாட்டில்களில் தண்ணீர் அருந்துபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது அதுவும் இளைய தலைமுறையினருக்கு அதிகமாக இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

பாக்டீரியா

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர்களில் மிக வேகமாய் பாக்டீரியாக்கள் உருவாகும். இது நமது வீட்டில் பிடித்து வைக்கப்படும் பாட்டில்களில் மட்டுமல்ல, கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களிலும் பாக்டீரியாக்கள் விரைவாக உருவாகிறது. எனவே, பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பருகுவதை தவிர்த்திடுங்கள்.

மட்டமான பிளாஸ்டிக்

உயர்த்தர பிளாஸ்டிக் எப்போதும் வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. அதன் பின் இதர அலுவலக மற்றும் மற்ற உபயோகத்திற்கு அதற்கு அடுத்த இரண்டாம் தர பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கடைசி நிலையான மட்டமா நிலைக்கொண்ட பிளாஸ்டிக்கை கொண்டு தான் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில், இதற்கு உத்தரவாதம் தர தேவையில்லை, மற்ற அனைத்திற்கும் உத்திரவாதம் தரவேண்டும். நம் உடல்நலத்திற்கு உத்திரவாதம் அற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பெட்டிகளில் இனிமேல் உணவோ அல்லது நீரோ உட்கொள்ள வேண்டாம்.

நன்றி: http://tamil.boldsky.com

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...