Sunday, August 24, 2014

ஆரோக்கிய டிப்ஸ்

Black grapes nutrients: black grapes and prevent artery blockage. To keep the body healthy. Memory

பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்



குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க  வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட  தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய்  உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த  உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும்.

இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி  குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி  தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால்  குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள். எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல்  போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது.
ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர்,  ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க  வேண்டும்.

குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும்  வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும்  பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல்  போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது



       

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகள்

Vaccinations for pregnant women
‘‘நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுபவை தடுப்பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட  முக்கியமானது தவறான நேரத்தில் போடுவதும். குறிப்பாக கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த  விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. 

‘‘குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்களுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும். தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, புட்டாலம்மை  உள்ளிட்ட பல அம்மைத் தொற்றுகளுக்கு எதிராகப் போராடக் கூடியது இந்தத் தடுப்பூசி. ஒருவேளை 10 முதல் 12 மாதங்களில் இந்த ஊசி  போடப்படாவிட்டால், 13 வயதுக்குள் போடப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து, திருமண வயதில் போட  நினைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் அப்படிப் போட நேர்ந்தால், அந்த ஊசியைப் போட்டதை அடுத்து, 4 மாதங்கள் முதல் 1 வருடம் வரை  கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

அந்தக் காலக்கட்டம் வரைக்கும் அந்தத் தடுப்பூசியின் தாக்கம் உடலுக்குள் இருக்கும் என்பதே காரணம். இந்த ஊசி போடப்படாத பட்சத்தில் அந்தப்  பெண்ணுக்குக் பிறக்கும் குழந்தைக்கு கண்பார்வை பாதிப்பு, காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம்.  நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல நோய்களும் வரலாம்.  கர்ப்பிணிகள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி  டெட்டனஸ் டாக்சைட். பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது, நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு  ஆபத்தை ஏற்படுத்தலாம். 

தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு. கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது. டைஃபாய்டு, நிமோனியா  காய்ச்சல், ஹெபடைட்டிஸ் பி போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது. கணவருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று  இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவிக்கும் பாதிப்பு வரலாம். எனவே அதற்கெதிரான தடுப்பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும்.  இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்களுக்கு கர்ப்பம் தரிக்காமலிருப்பது பாதுகாப்பானது. 

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக்காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு  தடுப்பூசி போட முடியாது. தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பதுதான் தீர்வு.  கர்ப்பிணிப் பெண்ணை நாய்  கடித்தால், அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப் பட  வேண்டுமே தவிர, கருவைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத்தானது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

Tuesday, August 12, 2014

No Cancer When you Eat strawberry புற்றுநோய்க்கு நோ என்ட்ரி தரும் ஸ்ட்ராபெர்ரி

தினமும் உண்டால் பலன்கள் ஏராளம் 

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது என, கூறுவதை கேட்டிருப்போம். ஏனென்றால் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம், ஆப்பிளையே மிஞ்சும் என அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  தெரியவந்த தகவல்தான் இது. வெறும் தகவல் மட்டுமல்ல, உறுதி செய்யப்பட்ட விஷயமும்கூட. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற  பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

கோடை காலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில், தோல் வறட்சியை போக்கவும், இழந்த நீர்ச்சத்தை  ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்த பழங்களே நமக்கு பெரிதும்  உதவுகின்றன. பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது.

அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை தேடி எடுத்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாததால்தான், பலரும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். நாம் சிறப்பான சத்துக்கள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட்கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக்கொள்ளலாம்.நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கருதப்படும் இந்த பழங்கள், தற்போது இந்தியாவில் சிறு நகரங்களில் கூட கிடைப்பதாக உள்ளது.

இதில் நிறைந்துள்ள சத்துகள் போன்றே விலையும் சற்று அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. கோடைக்காலத்தில் பெருமளவு இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன் கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. இந்த பழங்களில், வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன்  வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல்  அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது. இந்த தன்மை நிறைந்த பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை பருகி பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படும். இதை தவிர்க்க ஸ்ட்ராபெர்ரி  பழச்சாறை குடித்தால் போதும். இதில், 5 பழங்களில் 250 மி.லி., அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும்  நமக்கு கிடைக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருள் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு ஊட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி பழம் உண்ணும் பழமாக மட்டுமல்ல, அழகை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை கிரீம்களை பயன்படுத்தி சருமத்துக்கும், தோலுக்கும் தீங்கும் விளைவிக்கும் அவற்றை பயன்படுத்துவதை விட, இயற்கையாக கிடைக்கும் இதுபோன்ற பழங்களை பயன்படுத்தினாலே போதும். ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்க செய்யும் தன்மை கொண்டது. முகத்தில் உள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச்செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பில் இருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கும் இப்பழத்தை கொண்டு மசாஜ் செய்தால் முகத்தில் நல்ல மாற்றம் காணலாம்.

இன்று ஆண், பெண் அனைவருக்கும் பெரிய குறையாக இருப்பது உடலின் நிறம்தான். இதற்கும் ஸ்ட்ராபெர்ரியில் தீர்வு உண்டு. சருமத்துக்கு  இளமையை கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெறலாம். அதிலும், பழ  வகைகளில் அதிக அளவு முகத்தை பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி. சிவப்பு நிறத்தில் ஜொலிக்க  விரும்புபவர்கள், நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை ஒரு துணியில் கட்டி, பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.

இந்த சாற்றை, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு 3 முறை இதுபோன்று செய்தால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தை கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதா கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். அதேபோல், 3 ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன், 7 ஸ்பூன் பாலை கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில்  குளிப்பதற்கு முன்பு முகத்தில் மாஸ்க் போல போடவும்.

நன்றாக காய்ந்ததும், முகத்தை கழுவவும். இதன் பிறகு எந்த கிரீமும் பூச வேண்டிய  அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும். ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூசுடன் அதே அளவு கேரட் ஜூஸ் கலந்து முகத்தில் நன்றாக பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.  சரும அழுக்கை நீக்கி, முகத்தில் துளியும் அழுக்கு சேராமல் பாதுகாக்கும். வீட்டிலேயே செய்யும் மிக எளிதான, பலன் தரக்கூடிய கிளன்சிங் முறை. 


ஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்க ஆசையா? just read this Article for you all tips

ஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.
அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த (General Motors: Weight Loss Diet Program) பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கும் வழிமுறை தற்போது உலகம் முழுவதும் பலராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” நிறுவனம் அங்கீகரித்துள்ள இம்முறை மூலம் ஒரு வாரத்தில் ஐந்து முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களும் இம்முறையை பயன்படுத்தியே உடல் எடையை குறைத்துள்ளனர்.
எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும்.
சரி இனி அந்த வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்:-
நாள் 1
நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் முக்கியமாக வாழைப்பழத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம். குறிப்பாக தர்பூசணி சற்று அதிகமாக எடுத்துகொள்வது நல்லது.
நாள் 2
இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கை பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நாள் 3
மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
நாள் 4
நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதிகபட்சமாக எட்டு வாழை பழங்களும் மூன்று கிளாஸ் பாலும் உட்கொள்வது நல்ல பயனைத் தரும். இரவு வேளையில் அளவாக வெஜிடபிள் சூப் எடுத்துக்கொள்ளலாம்.
நாள் 5
இன்று அசைவ நாள். நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் அளவாக பீப் (மாட்டு கறி) மற்றும் ஒரு பெரிய தக்காளி உட்கொள்ள வேண்டும்.
நாள் 6
ஆறாம் நாளில் ஒரு கப் சாதம் உட்கொள்ளலாம். இதுதவிர அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மாட்டுக்கறியையும் (பீப்) சற்று அதிகமாகவே சாப்பிடலாம். ஆறாம் நாள் இறுதியில் நிச்சயம் உங்கள் உடல் எடையில் மாற்றத்தை உணர்வீர்கள்.
நாள் 7
இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.
இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்:
ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன்படும்.
உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் ! எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...